ICC Womens World Cup 2025: டாப் 4க்குள் இடம்பிடித்த தென்னாப்பிரிக்கா.. இந்திய அணிக்கு எந்த இடம்.. புள்ளிகள் பட்டியல் நிலவரம் இதோ!
ICC Women's World Cup 2025 Points Table: 2025 ஐசிசி மகளிர் உலகக் கோப்பையில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் இதுவரை விளையாடிய அனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளன. நியூசிலாந்து இரண்டு போட்டிகளில் தோல்வியையும் பாகிஸ்தான் மகளிர் அணி தனது முதல் மூன்று போட்டிகளில் தோல்வியையும் சந்தித்துள்ளது.

2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில் (ICC Womens World Cup 2025) ஏசிஏ-விடிசிஏ கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில் தென்னாப்பிரிக்கா மகளிர் அணி, இந்திய மகளிர் அணியை (Indian Womens Cricket Team) 3 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 251 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் 94 ரன்கள் எடுத்து முக்கியமான இன்னிங்ஸை விளையாடினார். இலக்கை துரத்திய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க மற்றும் மிடில் ஆர்டர் தடுமாறியது. ஆனால் நாடின் டி கிளார்க் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 84 ரன்கள் எடுத்து தனது அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். இந்தப் போட்டிக்குப் பிறகு ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 புள்ளிகள் பட்டியலில் ஒவ்வொரு அணியும் எங்குள்ளது என்பதை தெரிந்து கொள்வோம்.
முதல் தோல்வியை சந்தித்த இந்திய மகளிர் அணி:
#CWC2025 Points Table After South Africa’s thrilling win over India!#CricketTwitter #WomensWorldCup pic.twitter.com/OaAsDHFxVj
— CRICKETNMORE (@cricketnmore) October 9, 2025
ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையில் இந்திய மகளிர் அணி 2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில் சந்திக்கும் முதல் தோல்வி இதுவாகும். முன்னதாக, இந்திய அணி ஏற்கனவே தனது முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்தது. ஆனால், தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான தோல்விக்கு பிறகு, இந்திய அணிக்கு அடுத்த 3 போட்டிகள் முக்கிய அணிகளுக்கு (ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து) எதிராக இருப்பதுதான் சவால். தற்போது, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் முதல் 2 இடங்களைப் பிடித்துள்ளன. இந்த வெற்றியின் மூலம், தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியும் முதல் நான்கு இடங்களுக்குள் நுழைந்துள்ளது.




ALSO READ: புது ஸ்டேடியத்தில் பேட்டிங்கில் பட்டைய கிளப்பிய தோனி.. ரசிகர்கள் செய்த ஆரவாரம்!
எந்தெந்த இடத்தில் எந்தெந்த அணிகள் உள்ளன..?
ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 புள்ளிகள் பட்டியலில் முதல் 4 அணிகள்
ஆஸ்திரேலிய மகளிர் அணி 3 போட்டிகளில் விளையாடி, 2ல் வெற்றி பெற்றுள்ளது. அதேநேரத்தில், ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது. இதன் விளைவாக, ஆஸ்திரேலிய அணி 5 புள்ளிகளுடன் +1.960 என்ற நிகர ரன் ரேட்டை கொண்டுள்ளது. 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, 4 புள்ளிகளுடன் +1.757 என்ற நிகர ரன் ரேட்டுடன் 2வது இடத்தில் உள்ளது.
அதேநேரத்தில், ஹர்மன்ப்ரீத் தலைமையிலான இந்திய அணி தற்போது புள்ளிகள் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. இந்திய அணி தனது மூன்று போட்டிகளில் இரண்டில் வெற்றியையும், ஒரு தோல்வியுடன் 4 புள்ளிகளுடன் +0.959 என்ற நிகர ரன் ரேட்டுடன் 3வது இடத்திலும், இந்தியாவை வீழ்த்திய பிறகு தென்னாப்பிரிக்கா 4வது இடத்தை பிடித்தது. அதன்படி, தென்னாப்பிரிக்கா அணி இதுவரை 3 போட்டிகளில் விளையாடி இரண்டில் வெற்றி பெற்று ஒன்றில் தோல்வியடைந்துள்ளது. இதன் காரணமாக புள்ளிகளுடன், -0.888 என்ற நிகர ரன் ரேட்டை பெற்றுள்ளது.
புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் பாகிஸ்தான்:
அதேநேரத்தில், வங்கதேசம் இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ளது, ஒன்றில் பாகிஸ்தானை தோற்கடித்து, ஒரு போட்டியில் தோல்வியை சந்தித்தது. தொடர்ந்து, 2 போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை ஒரு போட்டியில் தோல்வியையும், மற்றொரு போட்டியில் மழை காரணமாக போட்டி கைவிடப்பட்ட நிலையில் 6வது இடத்தில் உள்ளது. அதன்படி, இலங்கை அணியால் இன்னும் ஒரு வெற்றியை கூட பதிவு செய்ய முடியவில்லை.
ALSO READ: இந்தியாவிற்கு எதிராக சம்பவம் செய்த நாடின் டி கிளார்க்.. தென்னாப்பிரிக்கா அணில் திரில் வெற்றி!
எந்த அணி கடைசி இடத்தில் உள்ளது..?
2025 ஐசிசி மகளிர் உலகக் கோப்பையில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் இதுவரை விளையாடிய அனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளன. நியூசிலாந்து இரண்டு போட்டிகளில் தோல்வியையும் பாகிஸ்தான் மகளிர் அணி தனது முதல் மூன்று போட்டிகளில் தோல்வியையும் சந்தித்துள்ளது. நிகர ரன் ரேட் அடிப்படையில், நியூசிலாந்து (-1.485) 7வது இடத்திலும், பாகிஸ்தான் (-1.887) கடைசி 8வது இடத்திலும் உள்ளன.
இன்று யாருடைய போட்டி?
2025 மகளிர் உலகக் கோப்பையில் இன்று அதாவது 2025 அக்டோபர் 10ம் தேதி நியூசிலாந்து மற்றும் வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. இந்தியாவின் அடுத்த போட்டி ஞாயிற்றுக்கிழமை ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.