Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

IND W vs SA W: இந்தியாவிற்கு எதிராக சம்பவம் செய்த நாடின் டி கிளார்க்.. தென்னாப்பிரிக்கா அணில் திரில் வெற்றி!

ICC Womens World Cup 2025: 252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா மகளிர் அணி 48.5 ஓவர்களில் இலக்கை விரட்டி வெற்றி பெற்றது. தென்னாப்பிரிக்கா மகளிர் அணி அதிகபட்சமாக நாடின் டி கிளார்க் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 84 ரன்களும், கேப்டன் லாரா 70 ரன்களும் எடுத்திருந்தனர்.

IND W vs SA W: இந்தியாவிற்கு எதிராக சம்பவம் செய்த நாடின் டி கிளார்க்.. தென்னாப்பிரிக்கா அணில் திரில் வெற்றி!
நாடின் டி கிளார்க் - இந்திய மகளிர் அணிImage Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 09 Oct 2025 23:33 PM IST

2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில் (ICC Womens World Cup 2025)  இன்று அதாவது 2025 அக்டோபர் 9ம் தேதி இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் நேருக்கு நேர் மோதியது. இந்த போட்டியில் டாஸை இழந்த இந்திய மகளிர் அணி (Indian Womens Cricket Team) முதலில் பேட்டிங் செய்ய வந்தது. தொடக்க வீரர்கள் முதல் மிடில் ஆர்டர் வீரர்கள் வீரர் வரை சொதப்ப இந்திய அணி 200 ரன்களை கடக்குமா என்ற சந்தேகம் முதலில் எழுந்தது. அதாவது ஒரு கட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதன்பிறகு, ரிச்சா கோஷ் மற்றும் சினே ராணா இணைந்து 8வது விக்கெட்டுக்கு 88 ரன்கள் பார்ட்னர்ஷிப் செய்து அணியை இந்த சண்டை ஸ்கோரை எட்டுவதில் முக்கிய பங்கு வகித்தனர். ரிச்சா கோஷ் 77 பந்துகளில் 94 ரன்கள் எடுத்தாலும், சினே ராணா 33 ரன்கள் எடுத்து இந்திய அணியை 251 ரன்களுக்கு அழைத்து சென்றனர்.

252 ரன்கள் இலக்கு:


252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா மகளிர் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. 3வது ஓவர் வீசிய கிராந்தி கவுட், தொடக்க வீரர் தாஜ்மின் பிரிட்ஸை அவுட்டாக்கினார். தென்னாப்பிரிக்கா 18 ரன்கள் எடுத்திருந்தபோது இரண்டாவது விக்கெட்டை இழந்தது. அமன்ஜோத் கவுர் 5 ரன்களுக்கு சுனே லூஸை வெளியேற்றினார். இதன்மூலம், தென்னாப்பிரிக்கா 6 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 20 ரன்கள் எடுத்திருந்தது.

ALSO READ: கிரிக்கெட்டில் அழுத்தத்தின் கீழ் ஓய்வு? உண்மையை உடைத்த அஸ்வின்!

தொடர்ந்து, இந்திய மகளிர் அணியின் பந்துவீச்சாளர்கள் அடுத்தடுத்து சிறப்பாக பந்துவீச அடுத்தடுத்து 3 விக்கெட்களை தூக்கியது. இதன் காரணமாக, தென்னாப்பிரிக்கா அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 81 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இருப்பினும், தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் லாரா வால்வார்ட் மட்டுமே மறுமுனையை கெட்டியாக பிடித்து கொண்டு அரைசதம் கடந்து விளையாடி வந்தார்.

லாராவுடன் இணைந்த சாலி ட்ரையான் நல்ல பார்ட்னர்ஷி அமைக்க, தென்னாப்பிரிக்க அணி 142 ரன்களை கடந்தது. அப்போது, சிறப்பாக பேட்டிங் செய்து கொண்டிருந்த கேப்டன் லாரா வால்வார்ட் 111 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து கிராந்தி கவுட் பந்துவீச்சில் க்ளீன் போல்டானார். இருப்பினும் உள்ளே வந்த நாடின் டி கிளார்க், சாலி ட்ரையான் இணைந்து தென்னாப்பிரிக்கா அணியை 200 ரன்களை கடக்க உதவி செய்தார்.

ALSO READ: புது ஸ்டேடியத்தில் பேட்டிங்கில் பட்டைய கிளப்பிய தோனி.. ரசிகர்கள் செய்த ஆரவாரம்!

கெத்துக்காட்டிய நாடின் டி கிளார்க்:

தென்னாப்பிரிக்கா அணி 211 ரன்கள் எடுத்திருந்தபோது 49 ரன்கள் எடுத்திருந்த சாலி ட்ரையான், ராணா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அப்போது தென்னாப்பிரிக்கா அணியின் வெற்றிக்கு 24 பந்துகளில் 41 ரன்கள் தேவையாக இருந்தது. மறுபுறம் அதிரடியாக விளையாடிய கிளார்க் வெறும் 40 பந்துகளில் அரைசதம் கொடுத்து, இந்திய அணிக்கு பயம் காட்ட தொடங்கினார். கிராந்தி கவுட் வீசிய 47 ஓவரில் கிளார்க் சிக்ஸர்கள் பவுண்டரிகளாக விரட்ட, அடுத்த ஓவர்களிலும் தொடர்ந்து பவுண்டரிகளை ரன்களை திரட்டினார். கடைசி 12 பந்துகளில் 12 ரன்கள் தேவை என்ற நிலையில் 2 பந்துகள் டாட்டாக அமைய, 3 மற்றும் 5வது பந்தில் கிளார்க் சிக்ஸர்களை பறக்கவிட, தென்னாப்பிரிக்கா அணி 48.5 ஓவர்களில் இலக்கை துரத்தி வெற்றி பெற்றது. தென்னாப்பிரிக்கா மகளிர் அணி அதிகபட்சமாக நாடின் டி கிளார்க் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 84 ரன்களும், கேப்டன் லாரா 70 ரன்களும் எடுத்திருந்தனர்.