Rishabh Pant: குணமான காயம்! கிரிக்கெட் களத்திற்கு திரும்பும் ரிஷப் பண்ட்.. எப்போது தெரியுமா?
Ranji Trophy 2025: வருகின்ற 2025 நவம்பர் 14ம் தேதி தொடங்கி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா விளையாட உள்ளது. இதற்கு முன்பாக ரிஷப் பண்ட் சரியான நேரத்தில் உடல் தகுதி பெற்றால், ரஞ்சி டிராபிக்குப் பிறகு அவர் இந்திய அணிக்குத் திரும்பலாம்.

இந்திய அணியின் (Indian Cricket Team) விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் (Rishabh Pant) கடந்த சில மாதங்களாக காயம் காரணமாக சிகிச்சை பெற்று வரும் சூழலால் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகி இருக்கிறார். சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் பந்தில் அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதன்காரணமாக, 2025 ஆசிய கோப்பை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்படவில்லை. இருப்பினும், ரிஷப் பண்ட் இப்போது விரைவில் குணமடைந்து கிரிக்கெட் களத்திற்கு திரும்புவார் என்று கூறப்படுகிறது. நீண்ட நாள் காத்திருப்புக்குப் பிறகு, ரிஷப் பண்ட் மீண்டும் களத்தில் இறங்கத் தயாராக உள்ளார். ஊடக அறிக்கையின்படி, கிட்டத்தட்ட மூன்று மாத காயத்திற்குப் பிறகு அவர் ரஞ்சி டிராபியின் போது கிரிக்கெட்டுக்குத் திரும்பலாம் என்று கூறப்படுகிறது.
ALSO READ: ரோஹித்- கோலிக்கு இறுதி எச்சரிக்கை.. உள்நாட்டு தொடரில் விளையாட கட்டாயப்படுத்தும் பிசிசிஐ?




ரிஷப் பண்ட் திரும்புவது எப்போது..?
Rishabh Pant is poised to resume on-field action with the Ranji Trophy for Delhi on October 25. This move is in anticipation of the upcoming home series against South Africa in November. pic.twitter.com/NE5q7cgCcf
— Circle of Cricket (@circleofcricket) October 6, 2025
வருகின்ற 2025 அக்டோபர் 25ம் தேதி டெல்லியில் தொடங்கும் டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கப் போட்டியில் பங்கேற்க ரிஷப் பண்ட் விருப்பம் தெரிவித்துள்ளார். இருப்பினும், அவருக்கு பிசிசிஐ மருத்துவக் குழுவிலிருந்து உடற்தகுதி அனுமதி தேவைப்படும். எல்லாம் சரியாக நடந்தால், பண்ட் டெல்லி அணியின் கேப்டனாகவும் பொறுப்பேற்க முடியும்.
பிசிசிஐ மருத்துவக் குழு விரைவில் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ்-ல் ரிஷப் பண்ட்டின் வலது காலை பரிசோதனை செய்யும். இதையடுத்து, பிசிசிஐ அவருக்கு விளையாடுவதில் எந்த ரிஸ்க்கும் இல்லை என்று தெரிவிக்க வேண்டும். இருப்பினும், டெல்லி அணிக்காக பயிற்சி முகாமில் பண்ட் எப்போது இணைவார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இருப்பினும், வருகின்ற 2025 அக்டோபர் 15ம் தேதி தொடங்கும் ரஞ்சி டிராபியின் முதல் சுற்றில் விளையாடுவது அவருக்கு மிகவும் கடினமாக இருக்கும்.
ALSO READ: என் கிரிக்கெட் வாழ்க்கையில் நான் மிஸ் செய்தது இதைதான்.. சூர்யகுமார் யாதவ் வருத்தம்..!
சர்வதேச போட்டிகள்:
வருகின்ற 2025 நவம்பர் 14ம் தேதி தொடங்கி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா விளையாட உள்ளது. இதற்கு முன்பாக ரிஷப் பண்ட் சரியான நேரத்தில் உடல் தகுதி பெற்றால், ரஞ்சி டிராபிக்குப் பிறகு அவர் இந்திய அணிக்குத் திரும்பலாம். தற்போது, துருவ் ஜூரெல் இந்திய அணியில் அவருக்குப் பதிலாக ஒரு வாய்ப்பைப் பெற்றுள்ளார். மேலும் அவர் இந்த வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்தி மிக சிறப்பாக கேட்ச் பிடித்தது மட்டுமின்றி, சதம் அடித்தும் அசத்தினார்.