Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Indian Womens Cricket Team: இந்திய அணி அரையிறுதிக்கு எவ்வாறு தகுதி பெற முடியும்? பாதை எளிதா?

ICC Womens World Cup 2025: 2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு இன்னும் நான்கு போட்டிகள் உள்ளன. இந்தியா அரையிறுதிக்கு முன்னேற நல்ல வாய்ப்பு உள்ளது. அரையிறுதியில் இடம் பெற அடுத்த நான்கு போட்டிகளில் குறைந்தது மூன்றில் வெற்றி பெற்றாக வேண்டும்.

Indian Womens Cricket Team: இந்திய அணி அரையிறுதிக்கு எவ்வாறு தகுதி பெற முடியும்? பாதை எளிதா?
இந்திய மகளிர் அணிImage Source: BCCI Women
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 11 Oct 2025 08:39 AM IST

விசாகப்பட்டினத்தில் நேற்று முன் தினம் அதாவது 2025 அக்டோபர் 9ம் தேதி நடைபெற்ற போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி (Indian Womens Cricket Team) தென்னாப்பிரிக்காவிடம் தனது முதல் தோல்வியைச் சந்தித்தது. 7 பந்துகள் மீதமிருந்த நிலையில், இந்திய அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. முன்னதாக, ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, இலங்கையை வீழ்த்தி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை (ICC Womens World Cup 2025) பயணத்தை வலுவான தொடக்கத்துடன் தொடங்கியது. பின்னர் இந்திய அணி பாகிஸ்தானை தோற்கடித்து இரண்டாவது தொடர்ச்சியான வெற்றியைப் பெற்றது. பின்னர், தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 3வது போட்டியில்தான் இந்திய அணி தோல்வியை சந்தித்தது.

இதற்கிடையில், தென்னாப்பிரிக்கா தனது முதல் போட்டியில் இங்கிலாந்திடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. பின்னர் தென்னாப்பிரிக்கா அணி நியூசிலாந்து மற்றும் இந்தியாவை வீழ்த்தி வலுவாக மீண்டும் திரும்பி வந்தது.  இந்திய அணி அடுத்ததாக நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவையும், அதைத் தொடர்ந்து இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணியையும் எதிர்கொள்கிறது.

ALSO READ: டாப் 4க்குள் இடம்பிடித்த தென்னாப்பிரிக்கா.. இந்திய அணிக்கு எந்த இடம்.. புள்ளிகள் பட்டியல் நிலவரம் இதோ!

இந்திய அணி 3 போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்று தற்போது புள்ளி பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. இந்தியா இரண்டு போட்டிகளில் நான்கு புள்ளிகளைப் பெற்றுள்ளது. இந்தநிலையில், அரையிறுதிக்கு முன்னேற இந்திய அணி என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.

இந்திய அணி அரையிறுதிக்கு செல்ல என்ன செய்ய வேண்டும்..?


2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு இன்னும் நான்கு போட்டிகள் உள்ளன. இந்தியா அரையிறுதிக்கு முன்னேற நல்ல வாய்ப்பு உள்ளது. அரையிறுதியில் இடம் பெற அடுத்த நான்கு போட்டிகளில் குறைந்தது மூன்றில் வெற்றி பெற்றாக வேண்டும். இருப்பினும், இந்திய அணி இன்னும் ஒரு போட்டிகளில் தோற்றால் கூட பிரச்சினைகளை மோசமாக்கும். இந்தியா மேலும் தோல்விகளைச் சந்தித்தால், அது மற்ற போட்டிகளின் முடிவுகளை நம்பியிருக்க வேண்டியிருக்கும்.

ALSO READ: இந்தியாவிற்கு எதிராக சம்பவம் செய்த நாடின் டி கிளார்க்.. தென்னாப்பிரிக்கா அணில் திரில் வெற்றி!

இந்தியாவின் மீதமுள்ள போட்டிகள்:

  • இந்தியா vs ஆஸ்திரேலியா – அக்டோபர் 12, 2025, விசாகப்பட்டினம்
  • இந்தியா vs இங்கிலாந்து – அக்டோபர் 19, 2025, இந்தூர்
  • இந்தியா vs நியூசிலாந்து – அக்டோபர் 23, 2025, நவி மும்பை
  • இந்தியா vs வங்கதேசம் – அக்டோபர் 26, 2025, நவி மும்பை.