Shree Charani: உலகக் கோப்பையை வெல்ல முக்கிய காரணம்.. ஸ்ரீ சரணிக்கு பரிசுகளை வாரி வழங்கிய ஆந்திர அரசு!
Andhra Govt Announces Reward for SriCharani: ஆந்திராவில் இன்று காலை அதாவது 2025 நவம்பர் 7ம் தேதி கன்னவரம் விமான நிலையத்தில் ஸ்ரீசரணிக்கு ஏசிஏ சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. ஸ்ரீசரணியை மகளிர் அமைச்சர்கள் வாங்கலப்புடி அனிதா, சவிதா, சந்தியாராணி ஆகியோர் உற்சாகமாக வரவேற்றனர்.
2025ம் ஆண்டு மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையை (ICC Womens World Cup 2025) ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதையடுத்து, இந்திய மகளிர் அணியின் (Indian Womens Cricket Team) தனித்துவமான ஆட்டத்தின் மூலம் 52 ஆண்டுக்கால கனவு நிறைவேறியது. கடந்த 1983ம் ஆண்டு கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்றபோது இந்திய கிரிக்கெட்டின் போக்கு மாறியது போல, ஹர்மன்ப்ரீத் தலைமையிலான இந்த வெற்றி மகளிர் கிரிக்கெட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் என்று நம்பப்படுகிறது. முன்னதாக, உலகக் கோப்பையை வென்று கொடுத்த இந்திய மகளிர் அணியை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்து வாழ்த்துடன் புகைப்படத்தை எடுத்து கொண்டார்.
ஸ்ரீ சரணிக்கு பரிசு:
2025 உலகக் கோப்பையில் வெற்றி பெற்ற அணியில் முக்கிய பங்கு வகித்த ஸ்ரீ சரணிக்கு ஆந்திராவில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஸ்ரீ சரணியின் திறமையைப் பாராட்டி ஆந்திர அரசு மிகப்பெரிய வெகுமதியை அறிவித்தது. முன்னதாக, ஆந்திராவின் வேறு சில வீராங்கனைகள் ஸ்ரீ சரணியை ஒரு உத்வேகமாக எடுத்துக்கொண்டு சாம்பியன்களாக மாறி நாட்டிற்குப் புகழைக் கொண்டு வருவார்கள் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். 2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக சிறப்பாக பங்களிப்பு அளித்த ஸ்ரீ சரணிக்கு குரூப்-1 வேலை, இடம் மற்றும் இரண்டரை கோடி ரொக்கம் வழங்க ஆந்திர பிரதேச அரசாங்கம் முடிவு செய்துள்ளது.




ALSO READ: இந்திய அணிக்கு ஆதரவு! நமது கிரிக்கெட் வீரர்கள் எங்கே? விளாசிய தென்னாப்பிரிக்கா எழுத்தாளர்!
சிறப்பு வரவேற்பு:
#WATCH | Amaravati: Cricketer Shree Charani, who played as part of the World Cup-winning Indian Women’s team, met Andhra Pradesh CM N Chandrababu Naidu and Minister Nara Lokesh at the CM’s residence. Former Cricketer and ex-Captain Mithali Raj was also at the meeting.
(Video:… pic.twitter.com/0mAt2svUsr
— ANI (@ANI) November 7, 2025
ஆந்திராவில் இன்று காலை அதாவது 2025 நவம்பர் 7ம் தேதி கன்னவரம் விமான நிலையத்தில் ஸ்ரீசரணிக்கு ஏசிஏ சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. ஸ்ரீசரணியை மகளிர் அமைச்சர்கள் வாங்கலப்புடி அனிதா, சவிதா, சந்தியாராணி ஆகியோர் உற்சாகமாக வரவேற்றனர். ACA தலைவர் கேசினேனி சிவநாத், செயலாளர் சனா சதீஷ் பாபு, பொருளாளர் தண்டமுடி ஸ்ரீனிவாஸ் மற்றும் SHAP தலைவர் A. ரவிநாயுடு ஆகியோர் அவருக்கு மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர்.
இதனை தொடர்ந்து, கன்னவரத்திலிருந்து, ஸ்ரீசரணி முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மற்றும் நாரா லோகேஷ் ஆகியோரின் இல்லமான உண்டவல்லியில் உள்ள இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மிக உயர்ந்த மரியாதை அளிக்கப்பட்டது. சந்திரபாபு நாயுடு மற்றும் லோகேஷ் ஒரு புத்தகத்தை அவருக்கு வழங்கினர்.
ALSO READ: இந்திய மகளிர் அணியின் அடுத்த போட்டி எப்போது..? யாருடன் விளையாடுகிறது? அட்டவணை இதோ!
ஆந்திர பிரதேச கிரிக்கெட் சங்க தலைவர் கேசினேனி சிவநாத் தெரிவிக்கையில், “மகளிர் உலகக் கோப்பை வெற்றியில் ஆந்திரப் பெண் ஸ்ரீசரணியின் முக்கிய பங்கு மாநில மக்களுக்கு மிகுந்த பெருமைக்குரியது” என்றார். தொடர்ந்து, ஸ்ரீ சரணி செய்தியாளர்களை சந்திந்து. “ஏ.சி.ஏ. எனக்கு எல்லா வகையிலும் ஆதரவளித்துள்ளது. ஆந்திர பிரதேச அரசாங்கம் எனக்கு குரூப் 1 வேலை வழங்குவதாக உறுதியளித்தார். இதனுடன், முதல்வர் 2.5 கோடி ரொக்கமாகவும் கடப்பாவில் ஒரு இடத்தையும் தருவதாகக் கூறினார். மோடியுடனான சந்திப்பு நடந்தபோது, அடுத்ததாக எப்படி முன்னேறுவது என்று ஆலோசனைகளை தந்தார்” என்றார்.