AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

டியூஷன் செல்வதாக கூறிவிட்டு சென்ற 12 சிறுவன் மாயம்.. கிருஷ்ணகிரி அருகே அதிர்ச்சி!!

12-Year-Old School Student Missing: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே டியூஷன் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்ற 12 வயது பள்ளி மாணவன் மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழியில் இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டுச் சென்ற சிறுவனின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

டியூஷன் செல்வதாக கூறிவிட்டு சென்ற 12 சிறுவன் மாயம்.. கிருஷ்ணகிரி அருகே அதிர்ச்சி!!
டியூஷன் சென்ற 12 வயது சிறுவன் மாயம்..
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 24 Oct 2026 13:44 PM IST

கிருஷ்ணகிரி, அக்.24: தமிழகத்தில் பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் சிறுவர்கள் திடீரெனக் காணாமல் போகும் சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறி வருவது பெற்றோர்களிடையே பெரும் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை பகுதியில் டியூஷன் செல்வதாக வீட்டிலிருந்து புறப்பட்ட 12 வயது சிறுவன் ஒருவன் திடீரென மாயமாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு செஞ்சிப் பகுதியில் சிறுமி ஒருவர் காணாமல் போன விவகாரம் இன்னும் நீடித்து வரும் சூழலில், தற்போது பள்ளி மாணவன் ஒருவன் மாயமாகியுள்ள இந்தச் சம்பவம் பொதுமக்களையும் காவல்துறையினரையும் ஒருசேர உலுக்கியுள்ளது.

இதையும் படிக்க: பொதுமக்கள் கவனத்திற்கு.. மழைக்காலத்தில் பரவும் ஆபத்தான 3 காய்ச்சல்கள்.. மருத்துவர்கள் அறிவுறுத்துவது என்ன?

வீடு திரும்பாத மாணவன் சஞ்சய்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை இந்தியன் வங்கி தெருவைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவர் அப்பகுதியில் பேக்கரி கடை நடத்தி வரும் நிலையில், இவரது 12 வயது மகன் சஞ்சய், அப்பகுதியில் உள்ள அதிகமான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு பயின்று வருகிறார். வழக்கம் போல நேற்று காலை பள்ளிக்குச் சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பிய மாணவன் சஞ்சய், சிறிது நேரத்திற்குப் பிறகு வீட்டிலிருந்து டியூஷன் வகுப்புக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வெளியேறியுள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடியும் எங்கு தேடியும் கிடைக்காததைத் தொடர்ந்து, உடனடியாகச் சிங்காரப்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டுச் சென்ற சிறுவன்:

பெற்றோரின் புகாரின் பேரில் உடனடியாக வழக்குப் பதிவு செய்த சிங்காரப்பேட்டை காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள தீவிர விசாரணையைத் தொடங்கினர். முதற்கட்ட விசாரணையின் ஒரு பகுதியாக அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி (CCTV) கேமரா பதிவுகளைக் காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அதில், சிறுவன் சஞ்சய் அந்த வழியாக வந்த இருசக்கர வாகன ஓட்டி ஒருவரிடம் லிப்ட் கேட்டு ஏறிச் செல்வதும், அதன் பின்னர் அந்த வாகனத்தில் மற்றொருவருடன் சேர்ந்து பயணிப்பதும் பதிவாகியுள்ளது. இந்தச் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு, சிறுவனை யாரேனும் கடத்திச் சென்றார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்த பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிக்க: “முதல்வர் விஜய்க்கு தனுஷ் போட்டியே இல்லை!”.. தனுஷின் அரசியல் வருகை குறித்து அமைச்சர் மரிய வில்சன் கொடுத்த விளக்கம்!!

காவல்துறையின் தீவிர தேடுதல் வேட்டை:

குழந்தைகள் அடுத்தடுத்து மாயமாகும் இது போன்ற தொடர் சம்பவங்கள் தமிழகத்தில் பெரும் சட்டம்-ஒழுங்கு விவாதமாக மாறியுள்ள நிலையில், காணாமல் போன மாணவன் சஞ்சயை மீட்கும் பணியைக் காவல்துறையினர் துரிதப்படுத்தியுள்ளனர். சிசிடிவி காட்சிகளில் சிக்கிய இருசக்கர வாகன ஓட்டி யார், எந்தப் பகுதியைச் சேர்ந்தவர் என்பது குறித்தும், சிறுவன் எங்கெங்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்பது குறித்தும் போலீசார் தீவிரமாகத் துப்பு துலக்கி வருகின்றனர். பிள்ளையைக் காணாமல் பரிதவித்து நிற்கும் பெற்றோரின் கண்ணீரும், பொதுமக்களின் பாதுகாப்புக் குறித்த கேள்விகளும் இந்த வழக்கை மேலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாற்றியுள்ளது.

Follow Us