AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பளபளப்பான சருமத்தைப் பெற…தூங்கச் செல்வதற்கு முன் இதை பண்ணுங்க!

Beauty Rituals: பளபளப்பான சருமத்தைப் பெற இரவில் மேக்கப்பை நீக்கி, டபுள் க்ளென்சிங் செய்து சருமத்தை ஆழமாகச் சுத்தப்படுத்த வேண்டும். சருமப் பராமரிப்புக்காக சீரம், மாய்ஸ்சுரைசர் மற்றும் கண் பகுதிக்கு ஐ-க்ரீம் தடவி உரிய ஊட்டச்சத்து அளிக்க வேண்டும். பட்டுத் தலையணை உறைகளைப் பயன்படுத்துதல், டிஜிட்டல் திரைகளைத் தவிர்த்தல் மற்றும் போதுமான தண்ணீர் குடித்தல் ஆகியவை ஆரோக்கியமான தூக்கத்திற்கும் பொலிவான சருமத்திற்கும் வழிவகுக்கும்.

பளபளப்பான சருமத்தைப் பெற…தூங்கச் செல்வதற்கு முன் இதை பண்ணுங்க!
Image Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 12 Nov 2026 11:30 AM IST

இரவில் மேக்கப்பை முழுமையாக நீக்குவது மற்றும் டபுள் க்ளென்சிங் (beauty habits) செய்வது சருமத் துளைகளைச் சுத்தமாக வைத்து முகப்பருவைத் தவிர்க்க உதவுகிறது. சரும செல்களைப் புதுப்பிக்க வைட்டமின் சீரம் மற்றும் மாய்ஸ்சுரைசர் தடவி ஈரப்பதத்தைத் தக்கவைக்க வேண்டும். மென்மையான கண் பகுதிக்கு ஐ-க்ரீம் பயன்படுத்தி கருவளையங்கள் மற்றும் வீக்கத்தைக் குறைக்கலாம். பட்டுத் தலையணை உறைகளைப் பயன்படுத்துவது முகத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதையும் தலைமுடி உடைவதையும் தடுக்கும். தூங்குவதற்கு முன் டிஜிட்டல் திரைகளைத் தவிர்ப்பது ஆழ்ந்த தூக்கத்திற்கும் மன அமைதிக்கும் வழிவகுக்கும். போதுமான அளவு தண்ணீர் குடிப்பதுடன் மனதை அமைதிப்படுத்தும் தியானப் பயிற்சி செய்வது உடலை நீரேற்றத்துடன் வைக்க உதவும்.

Also Read: கிரீம் வாங்கி காசு விரையமா? பாத்ரூமில் இந்த ஒரு மாற்றம் போதும்!

1. மேக்கப்பை முழுமையாக நீக்குவது (Remove Makeup)

நாள் முழுவதும் முகத்தில் தங்கியிருக்கும் மேக்கப் பொருட்கள், தூசி மற்றும் வியர்வை ஆகியவற்றை அப்படியே விட்டுவிட்டு தூங்குவது சருமத்திற்கு மிகப்பெரிய கேடு விளைவிக்கும். இது துளைகளை அடைத்து முகப்பருவை ஏற்படுத்தும். எனவே, தூங்குவதற்கு முன் மைக்கேலார் வாட்டர் (Micellar water) அல்லது இயற்கையான கிழிசிங் பாம் கொண்டு முகத்தை மிருதுவாகத் துடைத்து சுத்தமாக்குங்கள்.

2. டபுள் க்ளென்சிங் முறை (Double Cleansing)

சருமத்தை ஆழமாகச் சுத்தப்படுத்த இது ஒரு சிறந்த வழியாகும். முதல் படியாக மேக்கப்பை நீக்கிய பின், உங்கள் சருமத்திற்கேற்ற ஒரு மைல்டான ஃபேஸ் வாஷ் (Gentle Cleanser) கொண்டு முகத்தைக் கழுவுங்கள். இது சருமத்தின் ஈரப்பதத்தை மாற்றாமல், அழுக்குகளை முழுமையாக வெளியேற்றும்.

3. ஃபேஸ் சீரம் மற்றும் மாய்ஸ்சுரைசர் (Serums and Moisturizer)

இரவு நேரம்தான் சரும செல்கள் புத்துயிர் பெறும் பொன்னான நேரம். இந்த நேரத்தில் உங்கள் சருமத்தின் தேவைக்கேற்ற ஹயலூரானிக் அமிலம் (Hyaluronic acid) அல்லது வைட்டமின் சீரம் தடவலாம். இது முகத்திலுள்ள சுருக்கங்களைக் குறைத்து, இளUr மையைத் தக்கவைக்கும். இறுதியாக ஒரு நல்ல மாய்ஸ்சுரைசர் தடவி சருமத்திற்கு ஈரப்பதம் ஊட்டுங்கள்.

4. கண் பகுதிக்கு சிறப்புக் கவனம் (Eye Cream)

கண்களைச் சுற்றியுள்ள தோல் மிகவும் மென்மையானது. நாம் கணினி மற்றும் கைப்பேசியைப் பயன்படுத்துவதால் இந்தப் பகுதி எளிதில் சோர்வடைந்து கருவளையம் வரக்கூடும். தூங்குவதற்கு முன் கண்களுக்குக் கீழே பிரத்யேகமான ஐ-க்ரீம் (Eye cream or serum) தடவி லேசாக மசாஜ் செய்வது வீக்கத்தைக் குறைத்து கண்களுக்குப் பொலிவைத் தரும்.

5. பட்டுத் தலையணை உறைக்கு மாறுங்கள் (Switch to Silk Pillowcases)

பருத்தித் தலையணை உறைகள் சருமத்திலுள்ள ஈரப்பதத்தை உறிஞ்சிவிடும்; மேலும் தலைமுடியை உடையச் செய்யும். அதற்குப் பதிலாக பட்டு (Silk) அல்லது சாடின் (Satin) தலையணை உறைகளைப் பயன்படுத்துவது முகத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதைத் தடுப்பதோடு, முடி சிக்காவதையும் குறைக்கும்.

Also Read: கிரீம் வாங்கி காசு விரையமா? பாத்ரூமில் இந்த ஒரு மாற்றம் போதும்!

6. டிஜிட்டல் சாதனங்களுக்குத் தடை (Keep Screens Away)

தூங்குவதற்கு குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு முன்பே ஸ்மார்ட்போன், லேப்டாப் மற்றும் தொலைக்காட்சி பார்ப்பதைத் தவிர்க்கவும். திரைகளில் இருந்து வெளிவரும் நீல ஒளி (Blue light) மூளைக்குச் செல்லும் ‘மெலடோனின்’ ஹார்மோன் சுரப்பைக் கட்டுப்படுத்தி, ஆழ்ந்த தூக்கத்தைக் கெடுத்துவிடும்.

7. மனதை அமைதிப்படுத்தும் தியானம் மற்றும் நீரேற்றம் (Hydration & Relaxation)

தூங்குவதற்கு முன் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவும். அதேபோல், 5 முதல் 10 நிமிடங்கள் மூச்சுப்பயிற்சி அல்லது இலசான தியானம் செய்வது மன அழுத்தத்தைக் குறைத்து நல்ல ஆழ்ந்த தூக்கத்திற்கு வழிவகுக்கும்.

Follow Us