IND vs SA: டி20யில் களமிறங்கும் சுப்மன் கில்.. தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு!
IND vs SA T20 Series: வருகின்ற 2025 டிசம்பர் 9ம் தேதி தொடங்கும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 2025 ஆசிய கோப்பையில் விளையாடிய அதே அணியை அஜித் அகர்கர் தலைமையினான தேர்வாளர்கள் குழு தேர்வு செய்துள்ளனர்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav) தலைமையிலான இந்திய அணியை (Indian Cricket Team) பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த அணியின் துணை கேப்டனாக சுப்மன் கில் இடம் பெற்றுள்ளார். கழுத்து காயம் காரணமாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கவில்லை. இருப்பினும், மருத்துவ அறிக்கைகள் முழுமையாக வரும் வரை இந்திய அணிக்காக சுப்மன் கில் விளையாடுவாரா என்பது தெளிவாக தெரியவில்லை. அதன்படி, இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வருகின்ற 2025 டிசம்பர் 9ம் தேதி முதல் வருகின்ற 2025 டிசம்பர் 19ம் தேதி வரை நடைபெறும்.




இந்திய அணியில் யார் யாருக்கு இடம்..?
🚨 NEWS 🚨#TeamIndia‘s squad for the 5⃣-match T20I series against South Africa announced.
Details ▶️ https://t.co/3Bscuq6Gri #INDvSA | @IDFCFIRSTBank pic.twitter.com/0bHLCcbwTD
— BCCI (@BCCI) December 3, 2025
வருகின்ற 2025 டிசம்பர் 9ம் தேதி தொடங்கும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 2025 ஆசிய கோப்பையில் விளையாடிய அதே அணியை அஜித் அகர்கர் தலைமையினான தேர்வாளர்கள் குழு தேர்வு செய்துள்ளனர். அதன்படி வருண் சக்ரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய 4 பேர் சுழற்பந்து வீச்சாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வேகப்பந்து வீச்சாளருக்கு முக்கியம் கொடுக்கும் வகையில் ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். டெஸ்ட் போட்டிகளுக்கு பிறகு டி20 அணியின் களமிறங்குவது இந்திய அணிக்கு வலுசேர்க்கும். பேட்டிங்கை பொறுத்தவரை கேப்டன் சூர்யகுமார் யாதவ், துணை கேப்டன் சுப்மன் கில், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, சிவம் துபே, ஜிதேஷ் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் உள்ளனர்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா, சஞ்சு சாம்சன், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ்.
ALSO READ: கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறை! 20 முறை தொடர்ந்து டாஸ் இழந்த இந்திய அணி!
இந்தியா-தென்னாப்பிரிக்கா டி20 தொடர் அட்டவணை:
இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி வருகின்ற 2025 டிசம்பர் 9ம் தேதி கட்டாக்கில் நடைபெறும். இரண்டாவது டி20 போட்டி வருகின்ற 2025 டிசம்பர் 11ம் தேதி நியூ சண்டிகரிலும், மூன்றாவது டி20 போட்டி வருகின்ற 2025 டிசம்பர் 14ம் தேதி தர்மசாலாவிலும் நடைபெறும். நான்காவது டி20 போட்டி வருகின்ற 2025 டிசம்பர் 17ம் தேதி லக்னோவிலும், கடைசி மற்றும் ஐந்தாவது டி20 போட்டி வருகின்ற 2025 டிசம்பர் 19ம் தேதி அகமதாபாத்திலும் நடைபெறும்.