Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Virat Kohli: விஜய் ஹசாரே டிராபியில் விளையாட விருப்பம் இல்லை.. விலக முடிவெடுத்த விராட் கோலி!

Vijay Hazare Trophy 2025-26: விராட் கோலி கடைசியாக விஜய் ஹசாரே டிராபி போட்டியில் 16 ஆண்டுகளுக்கு முன்பு, 2010ம் ஆண்டு விளையாடினார். 2008 முதல் 2010 வரை விராட் கோலி டெல்லி அணிக்காக 13 விஜய் ஹசாரே டிராபி போட்டிகளில் விளையாடி, 4 சதங்கள் உட்பட மொத்தம் 819 ரன்கள் எடுத்தார்.

Virat Kohli: விஜய் ஹசாரே டிராபியில் விளையாட விருப்பம் இல்லை.. விலக முடிவெடுத்த விராட் கோலி!
விராட் கோலிImage Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 02 Dec 2025 18:38 PM IST

இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான 3 போட்டிகள் (India vs South Africa ODI Series) கொண்ட ஒருநாள் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் (Virat Kohli) அபாரமான சதத்தால் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்தநிலையில், இந்த தொடரின் இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான 2வது போட்டி நாளை அதாவது 2025 டிசம்பர் 3ம் தேதி ராய்ப்பூரில் நடைபெறும். இதற்கிடையில், விராட் கோலி குறித்து குறிப்பிடத்தக்க செய்திகள் வெளியாகியுள்ளன. அதன்படி, வருகின்ற 2025 டிசம்பர் 24ம் தேதி தொடங்கும் உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடப் போவதில்லை என்று முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, 16 ஆண்டுகளுக்குப் பிறகு கோலி மீண்டும் உள்நாட்டு போட்டிகளில் விளையாடுவார் என்று நினைக்கப்பட்ட நிலையில், இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட விருப்பம் இல்லையா?


உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் கட்டாயம் விளையாட வேண்டும் என்பது குறித்து விராட் கோலி ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளார். இது பிசிசிஐயின் முடிவுக்கு எதிராகவுள்ளது. கிடைத்த தகவலின்படி, விஜய் ஹசாரே டிராபியில் பங்கேற்க விராட் கோலி மனநிலையில் இல்லை. இந்த போட்டியில் விளையாட வேண்டும் என்பது அனைத்து இந்திய வீரர்களுக்கும் கட்டாயமாக்கப்பட்ட நிலையில், விராட் கோலி பங்கேற்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளார். முன்னதாக, இந்திய அணியின் ஜாம்பவான் வீரர்களான ரோஹித் மற்றும் விராட் உள்நாட்டு கிரிக்கெட்டில் பங்கேற்க வேண்டும் என்றும் 2025-26 விஜய் ஹசாரே டிராபியில் விளையாட வேண்டும் என்றும் பிசிசிஐ கேட்டு கொண்டது. இருப்பினும், விராட் இந்த மனநிலையில் இருப்பதாகத் தெரியவில்லை.

NDTV வெளியிட்ட செய்தியின்படி, விஜய் ஹசாரே டிராபியில் விளையாடுவது குறித்து ரோஹித் சர்மா மும்பை அணியிடம் தனது விருப்பதை தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, விராட் கோலிக்கு சிறப்பு விலக்கு அளிப்பது பிசிசிஐக்கு கடினமாக உள்ளது. விஜய் ஹசாரே டிராபியில் விராட் கோலி விளையாட விரும்பவில்லை. ரோஹித் விளையாடும்போது, ​​ஒரு வீரருக்கு எப்படி விலக்கு அளிக்க முடியும்? மற்ற வீரர்களுக்கு நாம் என்ன சொல்ல வேண்டும்? ஒரு வீரர் மட்டும் அனைவரிடமிருந்தும் வேறுபட்டவரா” என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

விராட் கோலி கடைசியாக உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடியது எப்போது..?

விராட் கோலி கடைசியாக விஜய் ஹசாரே டிராபி போட்டியில் 16 ஆண்டுகளுக்கு முன்பு, 2010ம் ஆண்டு விளையாடினார். 2008 முதல் 2010 வரை விராட் கோலி டெல்லி அணிக்காக 13 விஜய் ஹசாரே டிராபி போட்டிகளில் விளையாடி, 4 சதங்கள் உட்பட மொத்தம் 819 ரன்கள் எடுத்தார். இருப்பினும், கடந்த 2024 ஆண்டு ரஞ்சி டிராபியில் மீண்டும் பங்கேற்று டெல்லி அணிக்காக ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடினார்.