IND vs SA 2nd ODI: இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையே 2வது ஒருநாள் போட்டி.. எங்கே? எப்போது காணலாம்?
IND vs SA 2nd ODI Live Streaming: இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை அதாவது 2025 டிசம்பர் 3ம் தேதி ராய்ப்பூரில் நடைபெறுகிறது. இதன் டாஸ் பிற்பகல் 1:00 மணிக்கு போடப்பட்டு, போட்டி பிற்பகல் 1:30 மணிக்கு தொடங்கும்.
இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்கா அணி 2-0 என்ற கணக்கில் வென்றது. அதனை தொடர்ந்து நடைபெற்ற இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி நேற்று முன் தினம் அதாவது 2025 நவம்பர் 30ம் தேதி ராஞ்சியில் நடைபெற்றது. இந்தியா (Indian Cricket Team) 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இருப்பினும், இரு அணிகளும் 300 ரன்களுக்கு மேல் எடுத்தன. இந்த போட்டியில் மொத்தம் 681 ரன்கள் குவிக்கப்பட்டன. விராட் கோலி (Virat Kohli) இந்தியாவுக்காக 135 ரன்களும், குல்தீப் யாதவ் நான்கு விக்கெட்டுகளையும் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினர்.இந்தநிலையில், இந்தியாவிற்கும் தென்னாப்பிரிக்காவிற்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி எப்போது, எங்கு நடைபெறும் என்பதை தெரிந்து கொள்வோம்.
ALSO READ: ராஞ்சியில் அதிரடி சதம்! டெஸ்ட் கிரிக்கெட்டில் மீண்டும் களமா? விராட் கோலி விளக்கம்!




இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை அதாவது 2025 டிசம்பர் 3ம் தேதி ராய்ப்பூரில் நடைபெறுகிறது. இதன் டாஸ் பிற்பகல் 1:00 மணிக்கு போடப்பட்டு, போட்டி பிற்பகல் 1:30 மணிக்கு தொடங்கும். இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் பார்க்கலாம்.மொபைல் மற்றும் ஹாட்ஸ்டாரில் பார்க்க விரும்புவோர் ஜியோஹாட்ஸ்டாரில் லைவில் பார்க்கலாம்.
தென்னாப்பிரிக்க அணியில் மாற்றங்கள் நிகழுமா?
Ranchi ✅
Hello Raipur 👋#TeamIndia | #INDvSA | @IDFCFIRSTBank pic.twitter.com/7m7kR1s96J
— BCCI (@BCCI) December 1, 2025
தென்னாப்பிரிக்காவின் கேப்டன் டெம்பா பவுமா, ராஞ்சியில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் விளையாடவில்லை. 2வது போட்டியில் விளையாடுவாரா என்பதும் தெரியவில்லை. டெம்பா பவுமா உள்ளே வந்தால், ரியான் ரிக்கெல்டன் அணியிலிருந்து நீக்கப்படலாம். இதுபோன்ற சூழ்நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஐடன் மார்க்ராம் மற்றும் குயின்டன் டி காக் ஆகியோர் இன்னிங்ஸைத் தொடங்கலாம். அதே நேரத்தில் கேப்டன் டெம்பா பவுமாவை மூன்றாவது இடத்தில் களமிறங்கலாம். முதல் ஒருநாள் போட்டியில் விளையாடாத டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இரண்டாவது போட்டியில் களமிறக்கப்படலாம்.
ALSO READ: கண்டு கொள்ளாத கோலி.. ரோஹித்துடன் விவாதம்.. கம்பீருக்கு எதிராக திரும்பும் இந்திய அணி..?
இந்திய அணி எந்த மாற்றமும் இருக்காதா?
முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகித்தது இந்தியா. தொடரை கைப்பற்ற இந்திய அணி இப்போது ராய்ப்பூரில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டனாக கே.எல். ராகுல் உள்ளார். இரண்டாவது ஒருநாள் போட்டியில் அவர் எந்த மாற்றமும் இல்லாமல் அணியை களமிறக்கலாம். இந்த சூழ்நிலையில், ரிஷப் பண்ட் மற்றும் திலக் வர்மா மீண்டும் வாய்ப்பு கிடைக்காமல் போகலாம்.