Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

IND vs SA: தேர்வாளருடன் பேசிய கோலி.. தனியாக உட்கார்ந்திருந்த கம்பீர்.. இந்திய அணிக்குள் சிக்கலா?

Pragyan Ojha - Virat Kohli: இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையிலான 2வது ஒருநாள் போட்டி வருகின்ற 2025 டிசம்பர் 3ம் தேதி ராய்ப்பூரில் நடைபெறவுள்ளது. முன்னதாக, கடந்த 2025 நவம்பர் 30ம் தேதி ராஞ்சியில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் விராட் மற்றும் ரோஹித் சர்மா அற்புதமான இன்னிங்ஸ் விளையாடி இந்தியாவிற்கு வெற்றியை தேடி தந்தனர்.

IND vs SA: தேர்வாளருடன் பேசிய கோலி.. தனியாக உட்கார்ந்திருந்த கம்பீர்.. இந்திய அணிக்குள் சிக்கலா?
ஓஜா - விராட் கோலிImage Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 02 Dec 2025 15:44 PM IST

இந்தியா – தென்னாப்பிரிக்கா (India vs South Africa ODI Series) இடையிலான 2வது ஒருநாள் போட்டி நாளை அதாவது 2025 டிசம்பர் 3ம் தேதி ராய்ப்பூரில் விளையாடுகிறது. 2வது ஒருநாள் போட்டிக்கு முன்னதாக, விராட் கோலி மற்றும் தேர்வாளர் பிரக்யான் ஓஜா ஆகியோரின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அப்போது, விமானத்திற்காக காத்திருந்தபோது, விராட் கோலியும் (Virat Kohli), ஓஜாவும் ஒரு விஷயம் குறித்து தீவிரமாக விசாரித்து கொண்டு இருந்தனர். இதன் காரணமாக, விராட் கோலிக்கும், அணி நிர்வாகத்திற்கு இடையே ஏதோ ஒன்று சரியாக இல்லை என்பது தெளிவாகிறது.

இந்திய அணிக்குள் நடப்பது என்ன..?


இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரும், தலைமை தேர்வாளர் அஜித் அகர்கரும் நீண்ட காலமாக விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவுடன் பேசுவதில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த முரண்பாடு தற்போது இந்திய அணியின் டிரஸ்ஸிங் ரூமிலும் வெடித்துள்ளது. சமீபத்தில், வருகின்ற 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கும் விஜய் ஹசாரே டிராபியில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா விளையாட வேண்டும் என்று தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் கூறியதுதான் இந்த பிரச்சனைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

தொடர்ந்து, தேர்வாளர் ஓஜாவுடன் கோலி ஏதோ சொல்வதும் போலவும், ஓஜா அதனை கவனத்துடன் கேட்டு பதிலளிப்பது போன்ற வீடியோ காட்சிகள் வெளியானது. இதில், இருவரும் நீண்ட நேரம் அருகருகே அமர்ந்திருந்து விவாதித்தனர். அப்போது, கவுதம் கம்பீர் தூரத்தில் ஒரு மூலையில் அமர்ந்திருந்தார். முன்னதாக, ஓஜா தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீருடன் அமர்ந்து பேசினார். இதனை தொடர்ந்து, ஓஜா ரோஹித்துடன் கைகுலுக்கி சிரித்து கொண்டு பேசினார். ரோஹித் சர்மாவும், ஓஜாவும் நீண்ட காலம் ஐபிஎல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஒன்றாக விளையாடி இருந்தனர்.

2027 ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாடுவார்களா..?


இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையிலான 2வது ஒருநாள் போட்டி வருகின்ற 2025 டிசம்பர் 3ம் தேதி ராய்ப்பூரில் நடைபெறவுள்ளது. முன்னதாக, கடந்த 2025 நவம்பர் 30ம் தேதி ராஞ்சியில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் விராட் மற்றும் ரோஹித் சர்மா அற்புதமான இன்னிங்ஸ் விளையாடி இந்தியாவிற்கு வெற்றியை தேடி தந்தனர். இந்த போட்டியில், விராட் கோலி தனது 52வது ஒருநாள் சதத்தை பதிவு செய்திருந்தார். அதேநேரத்தில், ரோஹித் சர்மா தொடர்ச்சியான 3வது ஒருநாள் போட்டியில் 50க்கும் மேற்பட்ட ரன்களை குவித்தார்.

ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி என இருவரும் தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகின்றனர். இந்தநிலையில், 2027ம் ஆண்டு நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பையில் இருவரும் விளையாட வேண்டும் என இந்திய ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.