Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

IND vs SA: கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறை! 20 முறை தொடர்ந்து டாஸ் இழந்த இந்திய அணி!

INDIA IN LAST 20 TOSS IN ODIs: இந்திய அணி ஒருநாள் போட்டிகளில் கடைசியாக டாஸ் வென்று கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. கடைசியாக, கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் 15ம் தேதி இந்தியா vs நியூசிலாந்து உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக இருந்த ரோஹித் சர்மா டாஸ் வென்றார்.

IND vs SA: கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறை! 20 முறை தொடர்ந்து டாஸ் இழந்த இந்திய அணி!
இந்தியா டாஸ் இழப்புImage Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 03 Dec 2025 14:37 PM IST

இந்தியா – தென்னாப்பிரிக்கா (India – South Africa) இடையிலான 2வது ஒருநாள் போட்டி தற்போது ராய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. இந்த 2வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்மூலம், இந்திய அணி (Indian Cricket Team) தொடர்ச்சியாக 20வது ஒருநாள் போட்டிகளில் டாஸை இழந்துள்ளது. இப்படியான சாதனையை வேறு எந்தவொரு அணியும் இதுவரை படைத்தது கிடையாது. டாஸ் இழந்த பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் “நான் நிறைய டாஸ் வெல்ல பயிற்சி எடுத்து வருகிறேன். ஆனால், இது எதுவும் பலனளிக்கவில்லை” என்று தெரிவித்தார்.

ALSO READ: விஜய் ஹசாரே டிராபியில் விளையாட விருப்பம் இல்லை.. விலக முடிவெடுத்த விராட் கோலி!

இந்திய அணி கடைசியாக டாஸ் வென்றது எப்போது..?


இந்திய அணி ஒருநாள் போட்டிகளில் கடைசியாக டாஸ் வென்று கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. கடைசியாக, கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் 15ம் தேதி இந்தியா vs நியூசிலாந்து உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக இருந்த ரோஹித் சர்மா டாஸ் வென்றார். அதன்பிறகு, இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடர், சாம்பியன்ஸ் டிராபி, ஆஸ்திரேலிய ஒருநாள் தொடர் போன்றவற்றில் இந்திய அணி விளையாடினாலும், இதுவரை டாஸ் வெல்லவில்லை.

இந்திய அணிக்கு 3 கேப்டன்கள் மாற்றம்:

இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா கடந்த சில ஆண்டுகளாக பதவி வகித்தார். சமீபத்தில், இந்திய அணியின் ஒருநாள் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டார். இப்போது காயம் காரணமாக கில் விலகிய நிலையில், கே.எல்.ராகுல் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக ஒருநாள் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால், யாருக்கும் இதுவரை டாஸில் அதிர்ஷ்டம் அடிக்கவில்லை.

ALSO READ: ராசியான மைதானம்.. வெற்றியை தொடருமா இந்தியா? ஒரு பார்வை!

ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக 20 முறை டாஸ் இழந்த முதல் அணி என்ற மோசமான சாதனையை இந்திய அணி படைத்துள்ளது. அதே நேரத்தில் அதிக முறை டாஸ் இழந்த அணிகளின் பட்டியலில் நெதர்லாந்து அணி 2வது இடத்தில் உள்ளது. இந்த அணி கடந்த மார்ச் 18, 2011 முதல் ஆகஸ்ட் 27, 2023 வரை மொத்தம் 11 முறை டாஸை இழந்துள்ளது. அதேநேரத்தில், இந்திய அணி நவம்பர் 19, 2023 முதல் இன்று வரை (டிசம்பர் 3, 2025) மொத்தம் 20 முறை டாஸை இழந்துள்ளது.