AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

வழிப்பறி வழக்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட சிறுவன் போலீசாரின் பிடியிலிருந்து தப்பியோட்டம்.. சென்னையில் பரபரப்பு!

Vanagaram police station minor escapes: சென்னை அடுத்த வானகரம் காவல் நிலையத்தில் வழிப்பறி வழக்குத் தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 17 வயது சிறுவன், போலீசாரின் கையை உதறிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வழிப்பறி வழக்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட சிறுவன் போலீசாரின் பிடியிலிருந்து தப்பியோட்டம்.. சென்னையில் பரபரப்பு!
மாதிரிப் படம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 06 Nov 2026 08:08 AM IST

சென்னை, நவ.06: சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடைபெறும் வழிப்பறி மற்றும் செல்போன் பறிப்புச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தக் காவல் துறையினர் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், தாம்பரம் மற்றும் மதுரவாயில் பைபாஸ் ரோடு, வானகரம் சர்வீஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாகத் தனிநபர்களை வழிமறித்துச் செல்போன்கள் மற்றும் விலைமதிப்பபான பொருட்களைப் பறித்துச் செல்லும் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்ச்சியாக அரங்கேறி வந்தன. இந்தச் சம்பவங்கள் குறித்துப் பொதுமக்களிடம் இருந்து வந்த தொடர் புகார்களின் அடிப்படையில், வானகரம் காவல் நிலையப் போலீசார் தனிப்படையினர் அமைத்து அப்பகுதியில் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இதையும் படிக்க: “சொந்த வீடு இல்லாத ஏழைகளுக்கு 70,000 புதிய வீடுகள்”.. ‘வெற்றி வீடு’ திட்டத்திற்குத் தமிழக அரசு அரசாணை வெளியீடு!

போலீசாரிடம் பிடிபட்ட 17 வயது சிறுவன்:

கண்காணிப்பு மற்றும் தீவிர விசாரணையின் முடிவில், வழிப்பறி மற்றும் செல்போன் பறிப்புச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த முக்கிய நபரான 17 வயது சிறுவன் ஒருவனை காவல்துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர். இதனையடுத்து, அவனிடம் விரிவான விசாரணை நடத்துவதற்காக அந்தச் சிறுவனைப் போலீசார் இருசக்கர வாகனத்தில் ஏற்றி வானகரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த சிறுவன் சிக்கியதால், இவ்வழக்கில் மேலும் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காவல் நிலையத்திற்குள் நுழைவதற்கு முன்னதாக எதிர்பாராத திருப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

மின்னல் வேகத்தில் தப்பியோடிய சிறுவன்:

வானகரம் காவல் நிலைய வாசலில் இருசக்கர வாகனத்தில் இருந்து இறங்கிய சிறுவனை, காவல் நிலையத்திற்குள் அழைத்துச் செல்ல போலீசார் முயன்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக காவலர்களின் பிடியில் இருந்து  கையை உதறித் தள்ளிய அந்தச் சிறுவன், அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பியோடத் தொடங்கினான். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பணியிலிருந்த போலீசார், உடனடியாக அந்தச் சிறுவனைப் பிடிக்கப் பின்னால் ஓடிச் சென்று விரட்டினர். இருப்பினும், போலீசார் துரத்தியதையும் பொருட்படுத்தாமல் அந்தச் சிறுவன் சுதாரித்துக்கொண்டு காவலர்களின் பிடியில் சிக்காமல் அங்கிருந்து தப்பியோடிவிட்டான்.

இதையும் படிக்க: ஜெகன்மோகன் ரெட்டி இல்ல திருமண விழா.. ஒரே மேடையில் CM விஜய்- நடிகை த்ரிஷா.. மணமக்களுடன் போஸ்!

தனிப்படை அமைத்து தீவிர தேடுதல்:

காவல் நிலைய வளாகத்தில் இருந்தே விசாரணைக் கைதி தப்பியோடிய சம்பவம் காவல் துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தப்பியோடிய 17 வயது சிறுவன் மீது ஏற்கனவே பல்வேறு வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, வானகரம் காவல் துறையினர் உடனடியாகத் தனிப்படைகளை அமைத்து, தலைமறைவாகியுள்ள அந்தச் சிறுவனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். காவல் நிலைய வாசலிலேயே போலீசாரை ஏமாற்றிச் சிறுவன் தப்பியோடியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us