Sachin Tendulkar: மும்பையில் குடும்பத்துடன் விநாயகரை வழிபட்ட சச்சின்.. கிரிக்கெட் கடவுளையும் தரிசித்த ரசிகர்கள்!
Sachin Tendulkar Visits Lalbaugcha Raja: 2025 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தியின் போது, இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது குடும்பத்துடன் மும்பையில் உள்ள பிரபலமான லால்பாச்சா ராஜா பந்தலுக்கு சென்று வழிபாடு செய்தார். அவரது மனைவி அஞ்சலி, மகன் அர்ஜுன், மற்றும் மகள் சாரா உடன் வந்திருந்தார்.
2025ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி (Ganesh Chaturthi) நாளன்று மும்பையில் உள்ள புகழ்பெற்ற லால்பாச்சா ராஜா பந்தலுக்கு சென்று, இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் (Sachin Tendulkar) தனது குடும்பத்தினருடன் விநாயகரை கும்பிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சச்சினுடன் அவரது மனைவி அஞ்சலி, மகன் அர்ஜுன் டெண்டுல்கர் மற்றும் மகள் சாரா ஆகியோரும் வந்திருந்தனர். அப்போது சச்சின், மனைவி அஞ்சலி, மகன் அர்ஜுன் மற்றும் மகள் சாரா ஆகியோர் பாரம்பரிய உடையில் விநாயகர் சிலைக்கு முன் பிரார்த்தனை செய்தனர். இருப்பினும், அர்ஜுன் டெண்டுல்கரின் வருங்கால மனைவி சானியா சந்தோக் வராததால் ரசிகர்கள் அவரை தேடிக்கொண்டிருந்தனர்.
ALSO READ: இந்திய அணி தேர்வு குறித்து கருத்து.. வெளிநாட்டு வீரர்களை சாடிய கவாஸ்கர்!




விநாயகரிடம் ஆசிர்வாதம் பெற்ற சச்சின்:
#WATCH | Mumbai | Legendary former Indian cricketer Sachin Tendulkar, along with his family, offered prayers at Lalbaugcha Raja today pic.twitter.com/3oJltVfVxU
— ANI (@ANI) August 28, 2025
சச்சின் டெண்டுல்கர் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை மிகவும் பிரமாண்டமாக கொண்டி வருகிறார். அதேபோல், 2025ம் ஆண்டான இந்த முறையும் சச்சின் டெண்டுல்கர் தனது குடும்பத்தினருடன் தனது வீட்டில் விநாயகரை வணங்கினார். இதனை தொடர்ந்து, சச்சின் தனது முழு குடும்பத்தினருடன் மும்பையின் பிரபலமான லால்பச்சாவில் உள்ள விநாயகர் சதுர்த்தியை தரிசிக்க செய்தனர். அப்போது, சச்சினின் வருகை தெரிந்ததும், அங்கிருந்த ரசிகர்கள் குவிய தொடங்கினர், முதற்கடவுள் விநாயகரை தரிசிக்க வந்த பக்தர்கள் கிரிக்கெட்டின் கடவுளான சச்சின் டெண்டுல்கரையும் கண்டனர். அப்போது, அங்கிருந்த கேமராக்கள் சச்சின் மற்றும் அவரது குடும்பத்தினர் விநாயகரை பிரார்த்தனை செய்ததை தருணங்களைப் படம்பிடித்தன.
வீட்டில் விநாயகரை வழிபட்ட சச்சின்:
Festivals feel more special when celebrated together, as a family with tradition, and with love.
Ganpati Bappa Morya. 🙏🏻 pic.twitter.com/n1erQd6ezr
— Sachin Tendulkar (@sachin_rt) August 27, 2025
ALSO READ: இந்திய அணியில் இந்த பழக்கம் இருந்தால் மட்டுமே இடமா..? தோனி குறித்து இர்ஃபான் பதான் குற்றச்சாட்டு!
அர்ஜுன் டெண்டுல்கர் நிச்சயதார்த்தம்:
கடந்த 2025 ஆகஸ்ட் 13ம் தேதி நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்ட தனிப்பட்ட விழாவில் அர்ஜுன் டெண்டுல்கரும், சானியா சந்தோக்கும் இடையில் மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர். அர்ஜுன் தனது நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு பொதுவில் காணப்பட்டது இதுவே முதல் முறை. சானியா சந்தோக் ஒரு வணிக குடும்பத்தை சேர்ந்தவர். மேலும், பிரபல தொழிலதிபர் ரவி கய்யின் பேத்தி ஆவார். இதுகுறித்து சச்சின் டெண்டுல்கர் கூறியதாவது, “ஆம், அர்ஜுன் டெண்டுல்கர் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார், மேலும் அவரது வாழ்க்கையின் இந்த புதிய கட்டத்திற்காக நாங்கள் அனைவரும் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம்” என்று கூறினார்.