MS Dhoni: இந்திய அணியில் இந்த பழக்கம் இருந்தால் மட்டுமே இடமா..? தோனி குறித்து இர்ஃபான் பதான் குற்றச்சாட்டு!
Irfan Pathan Blasts Dhoni: இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையின் முடிவுக்கு முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி காரணம் என்று குற்றஞ்சாட்டியுள்ளார். 2008 ஆஸ்திரேலிய தொடருக்குப் பிறகு தனது செயல்பாட்டைப் பற்றி தோனியிடம் கேட்டபோது, திருப்திகரமான பதில் கிடைக்கவில்லை எனவும், இதனால் தனது வாழ்க்கை பாதிக்கப்பட்டது என்றும் கூறியுள்ளார்.

முன்னாள் இந்திய கேப்டன் எம்.எஸ்.தோனி (MS Dhoni) குறித்து முன்னாள் இந்திய ஆல்ரவுண்டர் இர்ஃபான் பதான் (Irfan Pathan) கூறிய கருத்துகள் தற்போது சமூக ஊடகங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பந்துவீச்சு மற்றும் பேட்டிங் இரண்டிலும் இந்திய அணிக்காக பல போட்டிகளை வென்று கொடுத்தவர் இர்ஃபான் பதான். ஆனால், இர்ஃபான் பதான் கடந்த 2012ம் ஆண்டு, இந்தியாவுக்காக தனது கடைசி ஒருநாள் போட்டியில் விளையாடினார். இதன்பிறகு, இர்ஃபான் பதான் ஏன் திடீரென இந்திய அணியிலிருந்து (Indian Cricket Team) நீக்கப்பட்டார் என்பது யாருக்கும் தெரியாது. தனது கிரிக்கெட் வாழ்க்கையின் வீழ்ச்சிக்கு தோனி தான் காரணம் என்று பதான் கூறிய கருத்துகள் கிரிக்கெட் ரசிகர்களிடையே விவாதத்திற்கு வழிவகுத்து வருகின்றன. இர்ஃபான் பதான் எம்.எஸ். தோனியின் பெயரை நேரடியாகக் குறிப்பிடவில்லை என்றாலும், அவரது கருத்துகள் தோனியை நோக்கியே இருந்தன என்பது தெளிவாகிறது.
ALSO READ: என் கோபத்தை இதனுடன் ஒப்பிட்ட தோனி.. அம்பதி ராயுடு சொன்ன ரகசியம்!




என்ன சொன்னார் இர்ஃபான் பதான்..?
கடந்த 2008ம் ஆண்டு ஆஸ்திரேலிய தொடரில் இர்பான் பதான் நன்றாக பந்து வீசவில்லை என்று தோனி ஊடகங்களில் கூறியதாக செய்தி எழுந்தது. இதை தெளிவுபடுத்த இர்ஃபான் பதான் தோனியிடம் நேரடியாக பேசினார். இதுகுறித்து இர்ஃபான் பதான் கூறியதாவது, “ஆமாம், நான் அவரைக் கேட்டேன். 2008 ஆஸ்திரேலிய தொடரின் போது, இர்ஃபான் நன்றாக பந்து வீசவில்லை என்று ஊடகங்களில் ஒரு அறிக்கை வந்தது. தொடர் முழுவதும் நான் நன்றாக பந்து வீசியதாக உணர்ந்தேன், அதனால் நான் மஹி பாயிடம் சென்று கேட்டேன். சில நேரங்களில் அறிக்கைகள் ஊடகங்களில் திரிக்கப்படுகின்றன. எனவே நானும் தெளிவுபடுத்த விரும்பினேன். பின்னர் மஹி பாய், ‘இல்லை இர்ஃபான், அப்படி எதுவும் இல்லை, எல்லாம் திட்டத்தின் படி நடக்கிறது’ என்றார். உங்களுக்கு அப்படி ஒரு பதில் கிடைக்கும்போது, அது சரி என்று நினைப்பீர்கள். நீங்களும் முடிந்தவரை போராடுவீர்கள். ஆனால் அதன் பிறகு நீங்கள் மீண்டும் மீண்டும் விளக்கம் கேட்டுக்கொண்டே இருந்தால், உங்கள் சொந்த மரியாதையை நீங்களே குறைத்துக் கொள்வீர்கள்.” என்று சொன்னார்.
தோனியை மறைமுகமாக சாடிய இர்ஃபான் பதான்:
Ms dhoni used to select those players who set hukka for him, i denied and i got dropped – Irfan Pathan pic.twitter.com/tlbFPvYZNU
— Popa 🇮🇳 (@rafalekohli) September 1, 2025
தோனியை மறைமுகமாக சாடிய இர்ஃபான் பதான், “எனக்கு யாருடைய அறையிலாவது ஹூக்கா புகைக்கிற பழக்கமோ, அதைப் பத்திப் பேசுற பழக்கமோ இல்லை. இது எல்லாருக்கும் தெரியும். ஒரு கிரிக்கெட் வீரரின் வேலை மைதானத்தில் சிறப்பாகச் செயல்படுவதுதான், நான் எப்போதும் அதில் கவனம் செலுத்துவேன்” என்று தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டில், ஒரு தனியார் விருந்தில் தோனி ஹூக்கா புகைப்பதைப் பார்த்த ஒரு வீடியோ வைரலானது. முன்னதாக, முன்னாள் ரைசிங் புனே ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடிய ஜார்ஜ் பெய்லியும் முன்பு தோனி இளம் வீரர்களுடன் பழகுவதற்காக சில நேரங்களில் ஹூக்கா புகைப்பார் என்று வெளிப்படுத்தியிருந்தார். இந்தச் சூழலில், அணியில் ஹூக்கா புகைக்கும் வீரர்களுக்கு தோனி முன்னுரிமை அளித்தார் என்ற கருத்து சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
ALSO READ: ஐபிஎல் ஓய்வுக்குப் பிறகு தோனி இந்திய அணி பயிற்சியாளரா? வைரலாகும் தகவல்!
இர்ஃபான் பதானின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை:
இந்தியாவுக்காக இர்ஃபான் பதான் இதுவரை 29 டெஸ்ட், 120 ஒருநாள் மற்றும் 24 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் மொத்தமாக ஒரு சதம் மற்றும் 11 அரைசதங்கள் உள்பட 2821 ரன்கள் எடுத்தார். மேலும் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் ஹாட்ரிக் உட்பட 301 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பதான் தனது கடைசி ஒருநாள் போட்டியிலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆனால், இதன் பிறகு இர்ஃபான் பதான் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.