Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அர்ஜுன் டெண்டுல்கரின் வருங்கால மனைவி.. யார் இந்த சானியா சந்தோக்?

Arjun Tendulkar Engagement | சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர், சானியா சந்தோக் என்ற பெண்ணை நிச்சயதார்த்தம் செய்துக்கொண்டார். எந்த வித முன் அறிவிப்பும் இல்லாமல் இது நடந்துள்ளது. இந்த நிலையில், அவரின் வருங்கால மனைவில் சானியா சந்தோக் யார் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அர்ஜுன் டெண்டுல்கரின் வருங்கால மனைவி.. யார் இந்த சானியா சந்தோக்?
கோப்பு புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 14 Aug 2025 21:18 PM

இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் (Sachin Tendulkar) மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கும் (Arjun Tendulkar), சானிய சந்தோக் (Saaniya Chandok) என்ற தொழிலதிபர் ஒருவரின் மகளுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. 25 வயதாகும் அர்ஜுன் டெண்டுல்கர் 2021 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். வெறும் 25 வயதே ஆகும் நிலையில், அர்ஜுன்  டெண்டுல்கர் ரகசியமாக நிச்சயதார்த்தம் செய்துக்கொண்ட தகவல் இணையத்தில் தீயாக பரவி வருகிறது. இந்த நிலையில், அர்ஜுன் டெண்டுல்கர் திருமணம் செய்துக்கொள்ள உள்ள சானிய சந்தோக் யார் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

யார் இந்தியா சானிய சந்தோக்?

மும்பையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ரவி காய் என்பவரின் பேத்தி தான் சானியா சந்தோக். ரவி காய், கிராவிஸ் குழுமத்தின் தலைவராக உள்ளார். இவர் தி புரூக்ளின் க்ரீமரி மற்றும் பாஸ்கின் ராபின் ஆகிய பிரபல ஐஸ் கிரீம் நிறுவனங்களுக்கு சொந்தக்காரர் ஆவார். ரவி காயின் தந்தை குவாலிட்டி ஐஸ்கிரீம் நிறுவனத்தின் நிறுவனர் ஆவார். இவ்வளவு பெரிய தொழிலதிபர் குடும்பத்தின் பின்னணியை கொண்டுள்ள சானியா சந்தோக், லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் பட்டம் பெற்றுள்ளார். கால்நடை தொழில்நுட்பத்தில் டிப்ளமோ படித்துள்ளார். இவர் மும்பையில் உள்ள பாவ்ஸ் பெட் ஸ்பா அண்ட் ஸ்டோர் நிறுவனத்தின் இயக்குநராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : இதையும் 64வது சுப்ரதோ கோப்பை கால்பந்து போட்டிகள் அறிவிப்பு – எப்போது துவங்குகிறது தெரியுமா?

இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

அர்ஹுன் டெண்டுல்கர் மற்றும் சானியா சந்தோக் ஆகியோரின் நிச்சயதார்த்தம் குறித்து எந்த வித அறிவிப்பும் வெளியாகாத நிலையில் நிச்சயதார்த்தத்திற்கு பிறகு சானியா சந்தோக் உடன் எடுத்த செல்ஃபி புகைப்படத்தை சாரா டெண்டுல்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதுமட்டுமன்றி, அர்ஜுன் டெண்டுல்கர் மற்றும் சானியா சந்தோக் ஆகியோர் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.