டிஎஸ்பியாக முகமது சிராஜிற்கு இவ்வளவு சம்பளமா? ரூ.5 கோடி மதிப்பில் வாட்ச் கலெக்ஷன் – சுவாரசியத் தகவல்
Siraj’s Time Tale: இங்கிலாந்து தொடருக்கு பிறகு முகமது சிராஜ் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார். அவருக்கு தெலங்கானா அரசு டிஎஸ்பி பதவி வழங்கி கௌரவித்திருக்கிறது. டிஎஸ்பியாக அவரது சம்பளம் மற்றும் அவரிடம் இருக்கும் விலையுயர்ந்த வாட்ச் கலெக்சன்ஸ் குறித்து விரிவாக பார்க்கலாம்.

சமீபத்தில் நடைபெற்ற இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் (Test Cricket) இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் (Mohammed Siraj) மிகச்சிறப்பான பங்களிப்பை வழங்கி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். குறிப்பாக கடைசித் தொடரில் அவரது பங்களிப்பு இந்தியாவின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. இதனையடுத்து தெலங்கானா அரசு அவருக்கு காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் பதவி வழங்கி கௌரவித்தது. கிரிக்கெட்டில் அவரது சிறப்பான பங்களிப்பை வழங்கியதற்காக அவருக்கு இந்த பதவி வழங்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் அவருக்கு டிஎஸ்பியாக அவரது சம்பளம் மற்றும் பிற சலுகைகள் குறித்து சமூக வலைதளங்களில் கவல் பரவி வருகிறது.
டிஎஸ்பியாக சிராஜின் சம்பளம் இவ்வளவா?
கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ் 7வது ஊதியக்குழு அடிப்படையில் மாத சம்பளம் ரூ.58,850 முதல் ரூ.1,37,050 வரை இருக்கும் கூறப்படுகிறது. மேலும் அவருக்கு வீட்டு வாடகை, மருத்துவ வசதிகள், பயண செலவுத் தொகை போன்ற சலுகைகளும் கிடைக்கும். தற்போது ஊதியம் 2.57 என்ற ஃபிட்மென்ட் ஃபேக்டர் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. 8வது ஊதியக்குழு அமல்படுத்தப்படும்போது, ஃபிட்மென்ட் ஃபேக்டர் உயர வாய்ப்பு உள்ளது. குறிப்பாக 3.0 முதல் 3.5 வரை ஃபிட்மென்ட் ஃபேக்டர் வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் அடிப்படையில் அவரது மாத ஊதியம் குறைந்த பட்சம் ரூ.80,000 முதல் அதிகபட்சம் ரூ.1,85,000 வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.




இதையும் படிக்க : India vs England Test Series: கில் ரன் மழை முதல் சிராஜ் விக்கெட் வேட்டை வரை.. இந்தியா – இங்கிலாந்து தொடரில் குவிந்த ரெக்கார்ட் லிஸ்ட்!
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் எளிய குடும்பத்தில் இருந்து வந்து கிரிக்கெட் உலகில் பல சாதனைகளை படைத்திருக்கிறார். அவரது தந்தை ஆட்டோ ஓட்டுநர், அவரது அம்மா வீட்டு வேலைகள் செய்து வந்திருக்கிறார். அவரது வீட்டில் எவ்வளவு வறுமை இருந்தாலும் கிரிக்கெட் மீதான ஆர்வத்தை மட்டும் கைவிட வில்லை. இன்று இந்தியாவின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.
விலையுயர்ந்த வாட்ச்கள் மீது சிராஜின் காதல்
View this post on Instagram
இதையும் படிக்க : India vs England Test Series: தொடரை சமன் செய்து சாதனையை குவித்த இந்தியா.. அடுக்கப்பட்ட ரெக்கார்ட்ஸ் லிஸ்ட்!
ரூ.5.68 கோடிக்கு வாட்ச் கலெக்ஷன் வைத்திருக்கும் சிராஜ்
தற்போது அவரிடம் ரோலெக்ஸ் டேடோனா ரெயின்போ (Rolex Daytona)வாட்ச் இருக்கிறது. இதன் மதிப்பு ரூ. 3 முதல் ரூ.4 கோடி வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் அதே ரோலேக்ஸ் டேடோனா மாடலில் பிளாட்டினமும் வைத்திருக்கிறார். இதன் விலை ரூ.1.01 கோடி என்று கூறப்படுகிறது. மேலும் ரூ.10.4 லட்சம் மதிப்பில் ரோலெக்ஸ் ஜிஎம்டி மாஸ்டர் வாட்ச், ரூ.29.49 லட்சம் மதிப்பில் Hublot Big Bang Rose Gold வாட்ச், ரூ.27.47 லட்சம் மதிப்பில் Audemars Piguet Royal Oak Offshore Chronograph வாட்ச், ரூ.1.31 லட்சம் மதிப்பில் Audemars Piguet Royal Oak Offshore Chronograph வாட்ச், ரூ.21,000 மதிப்பில் Casio Watch ஆகியவை தற்போது சிராஜிடம் இருக்கிறது.