Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Arjun Tendulkar Engagement: அர்ஜுன் டெண்டுல்கரின் திருமணம் காதல் திருமணமா..? வைரலாகும் புகைப்படம்!

Sachin Tendulkar's Son Engaged: சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர், சானியா சந்தோக் என்பவரை கடந்த 2025 ஆகஸ்ட் 12ம் தேதி ரகசியமாக நிச்சயம் செய்துள்ளார். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலானது. சிறுவயது நண்பர்களான இவர்களின் திருமணம் காதல் திருமணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

Arjun Tendulkar Engagement: அர்ஜுன் டெண்டுல்கரின் திருமணம் காதல் திருமணமா..? வைரலாகும் புகைப்படம்!
அர்ஜுன் டெண்டுல்கர் நிச்சயதார்த்தம்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 14 Aug 2025 19:39 PM

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் (Sachin Tendulkar) மகன் அர்ஜூன் டெண்டுல்கரின் (Arjun Tendulkar) நிச்சயதார்த்தம் நேற்று முன் தினம் அதாவது 2025 ஆகஸ்ட் 12ம் தேதி ரகசியமாக நடந்தது. இந்த செய்தியானது நேற்று அதாவது 2025 ஆகஸ்ட் 13ம் தேதி சமூக வலைதளங்களில் வைரலானது. சச்சின் டெண்டுல்கரின் மகனின் நிச்சயதார்த்தம் (Arjun Tendulkar Engagement) மும்பையைச் சேர்ந்த ஒரு பெரிய தொழிலதிபர் ரவி காய் வீட்டில் நடந்தது. இந்தநிலையில், சச்சினின் மகன் அர்ஜுன் டெண்டுல்கரின் வருங்கால மனைவி யார்…? இவர்களது திருமணம் காதலா அல்லது நிச்சயிக்கப்பட்டதா உள்ளிட்ட விவரங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.

ALSO READ: இந்திய அணி இதற்காக இங்கிலாந்து வரவில்லை.. ஸ்டாக்ஸ் செயலை விமர்சித்த சச்சின்!

அர்ஜூன் டெண்டுல்கர் திருமணம் செய்யும் பெண் யார்..?


அர்ஜுன் டெண்டுல்கரின் வருங்கால மனைவி சானியா சந்தோக் ஆவார். நிச்சயதார்த்தத்திற்கு முன்பு, அர்ஜுன் மற்றும் சானியா பற்றிய எந்த செய்தியும் வெளியாகவில்லை. அர்ஜுன் டெண்டுல்கருடனான நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு, சானியா சந்தோக்கின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலானது. சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மைத்துனியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்தார். இதன்பிறகு, புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. வைரலான புகைப்படத்தில் சாராவுக்கும் அர்ஜுனின் வருங்கால மனைவிக்கும் இடையே ஆழமான நட்பு இருப்பதாக தெரிகிறது. மேலும், இவர்கள் இருவரும் ஒருசில பார்ட்டிகளில் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களையும் காண முடிகிறது.

கிடைத்த தகவலின்படி, அர்ஜூன் டெண்டுல்கரும் சானியா சந்தோக்கும் சிறு வயதிலிருந்தே நல்ல நண்பர்கள் என்று கூறப்படுகிறது. அர்ஜுன் டெண்டுல்கர் மற்றும் சானியா சந்தோக்கின் இந்த திருமணம் காதல் திருமணமாக இருக்கலாம் என்றும், காய் குடும்பத்திற்கும் டெண்டுல்கர் குடும்பத்திற்கும் இடையே நல்ல உறவும் உள்ள நிலையில் இருவீட்டார் சம்மத்ததுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ALSO READ: சச்சின் டெண்டுல்கரின் மும்பை மாளிகை.. பாந்த்ரா வீட்டின் வடிவமைப்பு, பரப்பளவு விவரம் இதோ!

சமீபத்தில் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர் மும்பையில் ஒரு பிலேட்ஸ் அகாடமியை திறந்து வைத்தார். அதை, சச்சின் தேங்காய் உடைத்து திறந்து வைத்தார். இந்த திறப்பு அகாடமி திறப்பு விழாவின் வீடியோவை சாரா சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். இதில், சானியாவும் பச்சை நிற உடையில் சாராவின் பின்னால் நிற்பதைக் காணலாம். அர்ஜுன் டெண்டுல்கருடன் நிச்சயதார்த்தம் செய்த பிறகு சானியா தனது குடும்பத்தினருடன் காணப்படுவது இதுவே முதல் முறையாகும்.