Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Sachin Tendulkar Bandra Home: சச்சின் டெண்டுல்கரின் மும்பை மாளிகை.. பாந்த்ரா வீட்டின் வடிவமைப்பு, பரப்பளவு விவரம் இதோ!

Sachin Tendulkar's Luxurious Bandra Home: சச்சின் டெண்டுல்கர், தனது பந்த்ரா வீட்டை ரூ. 39 கோடிக்கு வாங்கி, 4 வருட புதுப்பித்தலுக்குப் பிறகு 2011ல் குடியேறினார். 6000 சதுர அடி பரப்பளவுள்ள இந்த ஆடம்பர வீடு, கிரிக்கெட் நினைவுகள், ஆடம்பர வசதிகள் மற்றும் அமைதியான சூழலைக் கொண்டுள்ளது.

Sachin Tendulkar Bandra Home: சச்சின் டெண்டுல்கரின் மும்பை மாளிகை.. பாந்த்ரா வீட்டின் வடிவமைப்பு, பரப்பளவு விவரம் இதோ!
சச்சின் டெண்டுல்கரின் பந்த்ரா வீடுImage Source: social media
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 14 Jul 2025 14:12 PM

சச்சின் டெண்டுல்கர் (Sachin Tendulkar) என்ற பெயரை கேட்டாலே கிரிக்கெட்டின் பொற்காலம் நினைவுக்கு வருகிறது. இவரது ஒவ்வொரு போட்டியின் அதிரடி ஆட்டத்தையும் கண்டு ரசித்தோம். ஆனால், கிரிக்கெட் வாழ்க்கையின் ஓய்வுக்கு பிறகு சச்சின் டெண்டுல்கர் மும்பையின் பாந்த்ராவில் (Bandra Home) உள்ள அவரது வீடு மிகவும் புகழ்பெற்றது. இந்த வீடு சச்சின் மற்றும் அவரது குடும்பத்திற்கு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. கடந்த 2007ம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் பாந்த்ரா மேற்கில் உள்ள பெர்ரி கிராஸ் சாலையில் உள்ள ஒரு பழைய பார்சி மாளிகையான போர வில்லாவை சுமார் ரூ. 39 கோடிக்கு வாங்கினார். 4 வருட புதுப்பித்தலுக்கு பிறகு, கடந்த 2011ம் ஆண்டு தனது குடும்பத்துடன் அதில் வசிக்க தொடங்கினார். இப்போது. இந்த ஆடம்பரமான பங்களா 6,000 சதுர அடி பரப்பளவில் மிக பிரமாண்டமாக உள்ளது. இதில், 2 அடித்தளங்களும், பல தளங்கள் கொண்ட உள்ளன.

சச்சின் டெண்டுல்கர் பாந்த்ரா வீடு:

சச்சினின் வீட்டிற்குள் நுழையும்போது வாசலில் பெரிய பெரிய பச்சை மரங்கள் இருக்கும். இதன் மீது அழகிய வேலைப்பாடுகளும் சில இருக்கும். உள்ளே நுழைந்தவுடன் கருப்பு பளிங்கு தரை, தொட்டிகளில் வளர்க்கப்பட்ட செடிகள் போன்றவை இடம்பெற்றுள்ளன. லிவிங் ஹாலில் நுழைந்தவுடன் வண்ண சோபாக்கள், நாற்காலிகள் மற்றும் சச்சினின் டிராபிகள் மற்றும் விருதுகள் கொண்ட அலமாரிகள் உள்ளது. அதாவது, ஒரு சிறிய கிரிக்கெட் அருங்காட்சியம் என்று அழைக்கலாம்.

ALSO READ: சாரா டெண்டுல்கருடன் காதலா..? பொதுவெளியில் வெளிப்படையாக பேசிய சுப்மன் கில்

சச்சினின் பாந்த்ரா வீடு:

அதனை தொடர்ந்து, அமர்ந்து சாப்பிடும் அறையில் மர மேசைகள், தேக்கு மற்றும் மஹாகனி மரச்சாமான்கள் உள்ளன. இங்கு, மக்கள் சாப்பிட்ட பிறகும் மணிக்கணக்கில் அமரும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு மினி ரிசார்ட் என்றே அழைக்கலாம். வீட்டின் மேல் தளத்தில் ஒரு கூரை மொட்டை மாடி உள்ளது. அங்கு சச்சின் தனது நாளை யோகா மற்றும் தியானத்துடன் தொடங்குகிறார். சச்சினின் வீட்டில் சமையலறை சற்று வித்தியாசமானது. ஆரஞ்சு நிற அலமாரிகள், கருப்பு கிரானைட் கவுண்டர்கள் மற்றும் அதிக வெளிச்சத்தை கொடுக்கும் பெரிய ஜன்னல்கள் உள்ளன.

ALSO READ: முடிவுக்கு வந்த பேட்மிண்டன் காதல் கதை.. சாய்னா நேவால் – பருப்பள்ளி காஷ்யப் பிரிவதாக அறிவிப்பு!

கடந்த 2018ம் ஆண்டில் டெண்டுல்கர் குடும்பம் பாந்த்ரா – குர்லா வளாகத்தில் மற்றொரு சொத்தை வாங்கியது. இந்த பிளாட்டின் அளவு 1,600 சதுர அடியாகும். இது சுமார் ரூ. 7.15 கோடியாகும். இந்த பிளாட் சச்சின் டெண்டுல்கரின் மனைவி அஞ்சலி டெண்டுல்கர் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சச்சின் – அஞ்சலி காதல் கதை:

சச்சின் டெண்டுல்கரும், அஞ்சலியும் கடந்த 1990ம் ஆண்டு மும்பை விமான நிலையத்தில் முதமுறையாக சந்தித்தனர். அஞ்சலி ஒரு மருத்துவர். பின்னர், தனது மருத்துவ வாழ்க்கையை விட்டுவிட்டு சச்சினின் குடும்ப வாழ்க்கையில் ஒரு பகுதியாக மாறினார். கடந்த 2013ம் ஆண்டு சச்சின் ஓய்வை அறிவித்தபோது, தனது மனைவியிடம் நீங்கள் என் வாழ்க்கையின் சிறந்த துணையாக இருந்தீர்கள் என்று தெரிவித்தார்.

சச்சின் டெண்டுல்கர் தனது வாழ்க்கையில் முதல்முதலாக மாருதி 800 ஐ வாங்கினார். இப்போது, சச்சினிடம் BMW i8, Ferrari 360 Modena, Porsche 911 Turbo S, Nissan GT-R Egoist போன்ற கார்கள் உள்ளன. Girard-Perregaux, Audemars Piguet, Panerai, Rolex மற்றும் Franck Muller போன்ற ஆடம்பர வாட்ச் பிராண்டுகளின் கடிகாரங்களை சச்சின் வைத்திருக்கிறார்.