Wimbledon 2025: 148 ஆண்டுகளில் முதல் முறை! சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் இத்தாலிய வீரர்… விம்பிள்டனில் கலக்கிய ஜானிக் சின்னர்!
Jannik Sinner Wins Wimbledon 2025: 2025 ஜூலை 13ம் தேதி நடைபெற்ற விம்பிள்டன் இறுதிப் போட்டியில் ஜானிக் சின்னர், கார்லோஸ் அல்கராஸை 6-4, 6-4, 6-4 என்ற கணக்கில் வென்று வரலாறு படைத்தார். முதல் செட்டில் தோல்வியடைந்தாலும், சிறப்பான ஆட்டத்தால் வெற்றி பெற்றார். 148 ஆண்டுகளுக்குப் பிறகு இத்தாலிய வீரர் விம்பிள்டன் ஆண்கள் ஒற்றையர் சாம்பியன் பட்டத்தை வென்றார்.

விம்பிள்டன் 2025ன் இறுதிப்போட்டி (Wimbledon 2025 Men’s Singles Final) நேற்று அதாவது 2025 ஜூலை 13ம் தேதி லண்டனில் உள்ள ஆல் இங்கிலாந்து கிளப்பில் நடைபெற்றது. இதன் ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் இத்தாலியின் ஜானிக் சின்னரும் (Jannik Sinner) , ஸ்பானிஷ் வீரரும் கடந்த ஆண்டு வெற்றியாளருமான கார்லோஸ் அல்கராஸை (Alcaraz) தோற்கடித்தார். முதல் செட்டில் 6-4 என்ற கணக்கில் தோல்வியடைந்த சின்னர், அடுத்தடுத்த செட்டில் மீண்டு வந்து சாம்பியன் பட்டத்தை வென்றார். அதன்படி, இத்தாலிய அணியை சேர்ந்த ஒரு வீரர் 148 ஆண்டுகளுக்கு பிறகு, ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.
148 ஆண்டுகால விம்பிள்டன் வரலாற்றில், இன்றுவரை எந்த இத்தாலிய வீரரும் ஆண்கள் ஒற்றையர் சாம்பியனாக முடிசூட்டப்படவில்லை. 1877 ஆம் ஆண்டு முதன்முறையாக நடைபெற்ற விம்பிள்டன் போட்டியில் சாம்பியனான முதல் இத்தாலிய வீரர் என்ற பெருமையை சின்னர் பெற்றார். இதன்மூலம், உலகின் நம்பர் 1 வீரர் ஜானிக் சின்ன முதல் முறையாக அகில இந்திய கிளப்பில் சாம்பியனானார். முன்னதாக, சின்னர் 3 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.




ALSO READ: முடிவுக்கு வந்த பேட்மிண்டன் காதல் கதை.. சாய்னா நேவால் – பருப்பள்ளி காஷ்யப் பிரிவதாக அறிவிப்பு!
போட்டியில் நடந்தது என்ன..?
2025 விம்பிள்டன் இறுதிப்போட்டியில் 23 வயதான ஜானிக் சின்ன, 22 வயதான ஸ்பானிஷ் நட்சத்திர வீரர் கார்லோஸ் அல்கராஸூக்கு எதிராக கடுமையாக போராடினார். முதல் செட்டில் கார்லோஸ் அல்கரோஸ், ஜானிக் சின்னரை 4-6 என்ற கணக்கில் தோற்கடித்தார். ஆனால், அடுத்த 3 செட்களில் சின்னர் 6-4,6-4 மற்றும் 6-4 என்ற கணக்கில் வென்று முதல் முறையாக விம்பிள்டன் பட்டத்தை வென்றார். இறுதிப் போட்டியில் வென்ற பிறகு, வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன், சின்னருக்கு கோப்பையை வழங்கினார். அதன்பிறகு, சின்னர் கோப்பையை முத்தமிட்டு வெற்றியை கொண்டாடினார்.
முன்னதாக, பிரெஞ்சு ஓபனின் இறுதிப் போட்டியிலும் அல்க்ரோஸூம் சின்னரும் நேருக்குநேர் மோதினர். இந்த போட்டியில் அல்க்ரோஸ் சின்னரை மோசமாக தோற்கடித்தார். டென்னிஸ் வரலாற்றில் இதுவரை 12 போட்டிகளில் இருவரும் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில் அல்க்ரோஸ் 8 போட்டிகளிலும், சின்னர் 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
வெற்றியாளருக்கு எவ்வளவு பரிசுத்தொகை..?
Living in my dream ❤️❤️❤️❤️ Thank you!!! 💜💚 @Wimbledon pic.twitter.com/CHINH6DyAU
— Jannik Sinner (@janniksin) July 13, 2025
ALSO READ: சாரா டெண்டுல்கருடன் காதலா..? பொதுவெளியில் வெளிப்படையாக பேசிய சுப்மன் கில்
2025 விம்பிள்டன் பட்டத்தை வென்ற பிறகு ஜானிக் சின்னருக்கு 3 மில்லியன் பவுண்டுகள், அதாவது இந்திய ரூபாயில் ரூ. 34 கோடிக்கும் அதிகமான பரிசுத் தொகை கிடைக்கும். அதேநேரத்தில், இரண்டாம் இடத்தைப் பிடித்த பிறகு கார்லோஸ் அல்கராஸூக்கு 1,520,000 அதாவது இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 17 கோடிகள் பரிசுத் தொகையாக கிடைக்கும். அரையிறுதிக்கு முன்னேறியதற்காக நோவக் ஜோகோவிச்சும், டெய்லர் ஃபிரிட்ஸும் தலா £775,000 பெற்றனர், இது தோராயமாக ரூ. 9 கோடிக்கு சமமாகும்.