Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Arjun Tendulkar’s Net Worth: கோடியில் புரளும் அர்ஜுன் டெண்டுல்கர்.. கிரிக்கெட் மூலம் மட்டும் இவ்வளவு வருமானமா?

Arjun Tendulkar's Net Worth Explored: சானியா மிராசாவுடனான நிச்சயதார்த்தச் செய்திக்குப் பிறகு, அர்ஜுன் டெண்டுல்கர் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படுகிறார். ஐபிஎல், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் மூலம் அவர் ஈட்டிய வருமானம் மற்றும் சச்சின் டெண்டுல்கரின் செல்வத்தின் பங்கு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, அவரது நிகர மதிப்பு சுமார் 22 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

Arjun Tendulkar’s Net Worth: கோடியில் புரளும் அர்ஜுன் டெண்டுல்கர்.. கிரிக்கெட் மூலம் மட்டும் இவ்வளவு வருமானமா?
அர்ஜுன் டெண்டுல்கர் சொத்து மதிப்புImage Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 17 Aug 2025 21:00 PM

சானியா சந்தோக்குடனான நிச்சயதார்த்த செய்தி வைரலான பிறகு, சச்சினின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் (Arjun Tendulkar) முழு சமூக வலைதளங்களில் அதிகமாக வைரலாகி வருகிறார். முன்னதாக, சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜுன் டெண்டுல்கர், கடந்த 2023ம் ஆண்டு நடந்த ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அறிமுகமாகி ஒரு சில போட்டிகளில் விளையாடினார். மறுபுறம், சானியா சந்தோக் (Saaniya Chandhok) மும்பையின் பிரபல தொழிலதிபர் ரவி கய்யிவன் பேத்தி ஆவார். கய் குடும்பம் இண்டர் காண்டினெண்டல் ஹோட்டல் மற்றும் புரூக்ளின் கிரீமரியின் உரிமையாளர்கள் ஆவார். இந்தநிலையில், அர்ஜுன் டெண்டுல்கருக்கு திருமணம் ஆகவுள்ள நிலையில், அவரது நிகர மதிப்பு என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

அர்ஜுன் டெண்டுல்கரின் நிகர மதிப்பு என்ன..?


சச்சின் டெண்டுல்கரின் புகழும், அவரது சொத்து மதிப்பு பற்றி நம் அனைவருக்கும் தெரியும். இந்திய விளையாட்டு வீரர்கள் அதிக சொத்துகளை கொண்ட வீரர்களில் சச்சின் டெண்டுல்கரும் ஒருவர். அதேநேரத்தில், அர்ஜுன் டெண்டுல்கருக்கும் கோடிக்கணக்கான சொத்துக்கள் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா..?

ALSO READ: அர்ஜுன் டெண்டுல்கரின் திருமணம் காதல் திருமணமா..? வைரலாகும் புகைப்படம்!

கடந்த 2021ம் ஆண்டு முதல் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள அர்ஜுன் டெண்டுல்கர், தனது ஏலத்தொகையின்படி ரூ. 1 கோடியே 40 லட்சம் சம்பாதித்துள்ளார். அதாவது, 2021ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணி அர்ஜுன் டெண்டுல்கரை ரூ. 20 லட்சத்திற்கு எடுத்தது. தொடர்ந்து, 2023ம் ஆண்டில் மீண்டும் அர்ஜுனை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ. 20 லட்சத்திற்கு வாங்கியது. ஐபிஎல் தவிர, அர்ஜுன் டெண்டுல்கர் கோவா அணிக்காக உள்ளூர் போட்டிகளில் ரஞ்சி டிராபி, விஜய் ஹசாரே, சையத் முஷ்டாக் அலி போட்டிகளிலும் விளையாடி வருகிறார். உள்நாட்டு கிரிக்கெட் மூலம் அர்ஜூன் டெண்டுல்கருக்கு ஆண்டுக்கு சுமார் ரூ. 10 லட்சம் கிடைக்கிறது. அதன்படி, அர்ஜுனின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 22 கோடி என்று கூறப்படுகிறது.

இதுமட்டுமின்றி, சச்சின் டெண்டுல்கரின் சொத்தில் இருந்தும் அர்ஜுன் டெண்டுல்கர் அனுபவித்து வருகிறார். அதாவது கடந்த 2007ம் ஆண்டு மும்பையில் சச்சின் டெண்டுல்கர் ரூ.39 கோடி மாளிகை ஒன்றை வாங்கினார். தற்போது அந்த மாளிகையில்தான் அர்ஜுன் டெண்டுல்கர் வசித்து வருவதாக கூறப்படுகிறது.

ALSO READ: அர்ஜுன் டெண்டுல்கரின் வருங்கால மனைவி.. யார் இந்த சானியா சந்தோக்?

அர்ஜுன் டெண்டுல்கரின் கிரிக்கெட் வாழ்க்கை:

கோவா அணிக்காக அர்ஜுன் டெண்டுல்கர் இதுவரை 17 முதல் தர போட்டிகளில் விளையாடி 37 விக்கெட்களையும், 532 ரன்களையும் எடுத்துள்ளார். இதுதவிர, 24 டி20 போட்டிகளில் விளையாடி 27 விக்கெட்டுகளுடன் 119 ரன்கள் எடுத்துள்ளார்.

லிஸ்ட் ஏ போட்டிகளை பொறுத்தவரை 10 போட்டிகளில் விளையாடி 25 விக்கெட்டுகளுடன், 102 ரன்களை எடுத்துள்ளார். ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடும் அர்ஜுன் டெண்டுல்கர் இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.