AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இர்ஃபான் கார் மோதி பெண் பலியான வழக்கு – ரூ.30 லட்சம் வழங்க உத்தரவு

YouTuber Irfan Car Accident Case: கடந்த 2023 ஆம் ஆண்டில் சாலையை கடந்தபோது யூடியூபர் இர்பானின் கார் மோதி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.30.69 லட்சம் இழப்பீடு வழங்க சிறு வழக்குகள் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இர்ஃபான் கார் மோதி பெண் பலியான வழக்கு – ரூ.30 லட்சம் வழங்க உத்தரவு
இர்ஃபான்
Karthikeyan S
Karthikeyan S | Published: 20 Sep 2026 19:59 PM IST

சென்னை, செப்டம்பர் 20 : கடந்த 2023 ஆம் ஆண்டில் சாலையை கடந்தபோது யூடியூபர் இர்பானின் கார் மோதி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.30.69 லட்சம் இழப்பீடு வழங்க சிறு வழக்குகள் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காரின் காப்பீட்டு நிறுவனம் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பு உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இர்ஃபான் கார் மோதி பெண் பலியான வழக்கு

உணவகங்களில் சாப்பிட்டு யூடியூபில் ஃபுட் ரிவியூ செய்வதன் மூலம் மக்களிடையே பிரபலமானவர் இர்ஃபான். அதனைத் தொடர்ந்து டிவி நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்துகொண்டுள்ளார். இந்த நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் அருகே இவரது கார் வந்துகொண்டிருந்தபோது பத்மாவதி என்ற பெண் மீது மோதியதில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதையும் படிக்க : Tamil Nadu Weather report: தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்… வானிலை மையம் எச்சரிக்கை!

இந்த நிலையில் இது தொடர்பாக காவல்துறையினர் கார் ஓட்டுநரான சென்னை சித்தலபாக்கத்தை சேர்ந்த அசாருதீன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து காரை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விபத்து தொடர்பான வழக்கு, நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு செப்டம்பர் 30, 2026 இன்று விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிமன்றம், விபத்தில் உயிரிழந்த பத்மாவதியின் குடும்பத்திற்கு இழப்பீடாக 30 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும் காரின் காப்பீட்டு நிறுவனம் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பு இந்த நிவாரணத் தொகையை உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு, வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக குழந்தையின் பாலினத்தை அறிவித்தது உள்ளிட்ட ஏற்கனவே பல சிக்கல்களில் சிக்கி தவித்த இர்பானுக்கு, தற்போதைய நீதிமன்றத்தின் உத்தரவு, புது அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளதாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க : புதிய கட்சியைத் தொடங்கிய நடிகர் அஜித் ரசிகர்கள் – கொடி அறிமுகம்

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், கர்ப்பமாக இருந்த தன் மனைவியை துபாய்க்கு அழைத்து சென்ற இர்பான், மருத்துவ பரிசோதனை செய்து, கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை அறிந்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் தனது யூடியூப் சேனலில் வீடியோவாக வெளியிட்டு அறிவித்தார். இதற்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் சார்பில், இர்பானிடம் விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதனையடுத்து அவர் தனது செயலுக்கு மன்னிப்பு கடிதம் வழங்கினார். அதையேற்று, அப்போதைய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், இர்பான் மீது நடவடிக்கை தேவையில்லை என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us