சைபர் கிரைம் மோசடியில் ரூ.13 லட்சம் இழந்த வங்கி மேலாளர்.. விழிப்புணர்வு ஏற்படுத்திய அதிகாரிக்கே இந்த நிலையா?
Bank Manager Lost 13 Lakh in Cyber Scam | தொழில்நுட்ப வளர்சிக்கு ஏற்ப மோசடி சம்பவங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், சைபர் மோசடிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த வங்கி மேலாளர் சைபர் மோசடியில் ரூ.13 லட்சம் இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி, அக்டோபர் 17 : இந்தியாவில் சைபர் குற்றங்களின் (Cyber Crime) எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வகை மோசடிகளில் சிக்கி ஏராளமான பொதுமக்கள் தங்களது பணத்தை இழந்து வருகின்றனர். இந்த நிலையில், சைபர் கிரைம் மோசடி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த வங்கி மேலாளரே சைபர் கிரைம் மோசடியில் ரூ.13 லட்சம் பணத்தை இழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்கி மேலாளர் சைபர் கிரைம் மோசடியில் சிக்கி ரூ.13 லட்சம் பணத்தை இழந்தது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சைபர் மோசடியில் ரூ.13 லட்சம் பணத்தை இழந்த நபர்
டெல்லியை சேர்ந்தவர் தேஜ் பிரகாஷ் சர்மா. இவர் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி கிளையில், துணை மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், அவருக்கு தெரியாத எண்ணில் இருந்து ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய பெண் ஒருவர் தங்களது நிறுவனம் ஆர்பிஐ, செபி உள்ளிட்டவற்றில் பதிவு செய்துள்ளதாகவும், தங்களிடம் முதலீடு செய்த ஒருசில வாரங்களிலேயே நல்ல லாபம் கிடைக்ககூடிய திட்டம் ஒன்று உள்ளதாகவும் கூறி நம்ப வைத்துள்ளார்.
இதையும் படிங்க : MappIs : கூகுள் மேப் செயலிக்கு போட்டியாக அறிமுகமான Mappls.. அமெரிக்க வேலையை உதறிவிட்டு இந்தியர் செய்த சாதனை!




ரூ. 13 லட்சம் பணத்தை முதலீடு செய்த வங்கி மேலாளர்
தொலைபேசியில் பேசிய அந்த பெண் கூறிய அனைத்தையும் நம்பிய சர்மா, தனது மொத்த சேமிப்பான ரூ.13 லட்சம் பணத்தை 6 வங்கி கணக்குகளுக்கு அனுப்பி வைத்துள்ளார். அதனை தொடர்ந்து அந்த பெண் கூறிய சிறப்பு திட்டத்தில் இணைந்துள்ளதாக அவருக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. அடுத்த சில வாரங்களில் அந்த நிறுவனத்திடம் இருந்து எந்த வித தகவலும் இல்லாமல் இருந்துள்ளது. அதனை தொடர்ந்து அவர் புகார் அளித்த நிலையில், அவரது வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன. அவரால் யாரையும் தொடர்ப்புக்கொள்ள முடியாமல் போயுள்ளது.
இதையும் படிங்க : UPI : 2026 முதல் யுபிஐ-ல் வரும் முக்கிய அம்சம்.. என்ன தெரியுமா?
இந்த விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள சைபர் கிரைம் போலீசார் அது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சைபர் கிரைம் குற்றங்களில் சிக்கிக்கொள்ளாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று வாடிக்கையாளர்களுக்கு அறிவுரை வழங்கி வந்த வங்கி மேலாளருக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.