காங்கிரஸ் ரீல்ஸ் செய்வதில் மும்முரம் – கேரளாவில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
PM Modi Kerala Visit: சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மார்ச் 11, 2026 அன்று பிரதமர் நரேந்திர மோடி கேரளா மாநிலம் கொச்சி சென்றார். தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அவர், காங்கிரஸ் ரீல்ஸ் செய்வதில் மும்முரமாக உள்ளதாக கடுமையாக விமர்சித்தார்.
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மார்ச் 11, 2026 அன்று பிரதமர் நரேந்திர மோடி கேரளம் மாநிலம் கொச்சி சென்றார். இந்த நிலையில் கொச்சியில் உள்ள காலூர் நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற விழாவில் ரூ.10,800 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். மைதான வாயிலில் இருந்து பந்தல் வரை ரோட் ஷோ நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்றார். காலூர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.
கேரளாவில் பிரதமர் நரேந்திர மோடி
இந்த நிலையில் பேசிய அவர், தற்போது சர்வதேச அளவில் பதட்டங்கள் நிலவி வரும் நிலையில் வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களை பாதுகாக்க, அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இருப்பினும், அரசுக்கு நெருக்கடிகள் இருந்தபோதிலும் காங்கிரஸ் அரசியல் செய்வதாக அவர் குற்றம் சாட்டினார்.




இதையும் படிக்க : போர் சூழல்.. விலையேறும் விமான டிக்கெட்.. ஏர் இந்தியா சொன்ன முக்கிய விவரம்!
மேலும் பேசிய அவர், இந்த முறை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஒரு வாய்ப்பு அளிக்குமாறு அவர் மக்களைக் கேட்டுக் கொண்டார். வளைகுடா நாடுகளில் வாழும் லட்சக்கணக்கான மலையாளிகளின் பாதுகாப்பிற்கு மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுவருகிறது. நாடு கடுமையான சூழ்நிலைகளை கடந்து வரும் நிலையில், மோடியை விமர்சித்து காங்கிரஸ் ரீல் செய்வதில் மும்முரமாக உள்ளது என்றார்.
பிரதமர் மோடி பேசியது என்ன?
“India doesn’t leave its people in trouble,” assures PM Modi amid West Asia conflict, accuses Congress of politicising war
Read @ANI Story | https://t.co/Yd9TvwxA54#Indianembassies #PMModi #Westasiaconflict pic.twitter.com/4I0kSgW8H5
— ANI Digital (@ani_digital) March 11, 2026
தொடர்ந்து பேசிய அவர், கேரளாவின் அரசியல் வரலாறு ஊழலால் நிறைந்தது. சபரிமலையில் தங்கம் கொள்ளையில் ஆளுங்கட்சி ஈடுபட்டுள்ளது. ஐக்கிய ஜனநாயக முன்னணி காலத்தில் சூரிய சக்தி மோசடி முக்கிய விவாதப் பொருளாக உள்ளது. கேரள மக்கள் இப்போது தேசிய ஜனநாயக கூட்டணியை நம்புகிறார்கள். வளர்ச்சியை உறுதி செய்ய மோடியின் உத்தரவாதம் அவர்களுடன் இருக்கிறது. என்றார்.
இதையும் படிக்க : சிலிண்டர் சிக்கல்.. அமலானது அத்தியாவசிய பொருட்கள் சட்டம்.. இனி என்ன நடக்கும்?
புதிய கேரளாவிற்கான வாக்குறுதிகள்
கேரளத்தை நவீனமயமாக்க மத்திய அரசு பெரிய திட்டங்களைத் திட்டமிட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கான உலகளாவிய மையமாக கேரளம் மாற்றப்படும். சுற்றுலாத் துறையில் கேரளத்தை உலகின் முதன்மையான இடமாக மாற்றுவதே இதன் நோக்கம். கேரளாவின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் ‘ஹர்த்தால் மாஃபியா’ ஒழிக்கப்படும். கேரளாவில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீடுகள் அதிகரிக்கப்படும் என்று பேசினார்.