Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

IND vs SA: இந்தியாவிற்கு எதிராக இந்தியர் செய்த சம்பவம்.. 480 ரன்கள் பின்தங்கிய நிலையில் ரிஷப் படை!

IND vs SA 2nd Test Day 2 Highlights: தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கே.எல். ராகுல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினர். இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 6.1 ஓவர்கள் முடிவில் 9 ரன்கள் எடுத்துள்ளது.

IND vs SA: இந்தியாவிற்கு எதிராக இந்தியர் செய்த சம்பவம்.. 480 ரன்கள் பின்தங்கிய நிலையில் ரிஷப் படை!
இந்திய கிரிக்கெட் அணிImage Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 23 Nov 2025 17:29 PM IST

இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான 2வது டெஸ்டின் (Ind vs SA 2nd Test) இரண்டாம் நாள் ஆட்ட முடிவில், இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 9 ரன்கள் எடுத்திருந்தது. குவஹாத்தியில் நடைபெற்று வரும் இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான இரண்டாவது டெஸ்டில் தென்னாப்பிரிக்காவின் முதல் இன்னிங்ஸ் 489 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் காரணமாக தற்போது இந்தியா முதல் இன்னிங்ஸில் 480 ரன்கள் பின்தங்கியுள்ளது. இரண்டாம் நாள் தொடக்கத்தில் தென்னாப்பிரிக்கா அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 243 ரன்களுடன் களமிறங்கியது. இதனை தொடர்ந்து, செனுரன் முத்துசாமியின் (Senuran Muthusamy) சதத்தின் உதவியால் தென்னாப்பிரிக்கா 489 ரன்கள் என்ற மிகப்பெரிய ஸ்கோரை எட்டியது.

ALSO READ: தென் ஆப்பிரிக்கா தொடருக்கு கேப்டனாக ரோகித் சர்மா நியமனம்? உண்மை என்ன?

செனுரன் முத்துசாமி அசத்தல் சதம்:


தென்னாப்பிரிக்கா இரண்டாவது நாளில் மீண்டும் தனது இன்னிங்ஸைத் தொடங்கியது. செனுரன் முத்துசாமி மற்றும் கைல் வெர்ரெய்ன் ஆகியோர் 88 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்க, அதைத் தொடர்ந்து மார்கோ ஜான்சன் தனது பங்கிற்கு 93 ரன்கள் எடுக்க, செனுரன் முத்துசாமி 109 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். தென்னாப்பிரிக்கா அணி தனது முதல் இன்னிங்ஸின் இரண்டாவது நாளில் 242 ரன்கள் சேர்த்தது.

மார்கோ ஜான்சன் இந்திய பந்து வீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். மார்கோ ஜான்சன் 91 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் உதவியுடன் 93 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதேநேரத்தில், குல்தீப் யாதவ் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் தங்கள் பந்துவீச்சில் 100 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்தனர். இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளையும், ஜஸ்பிரித் பும்ரா , ரவீந்திர ஜடேஜா மற்றும் முகமது சிராஜ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ALSO READ: சிக்கலில் இந்திய அணி.. ஒருநாள் கேப்டனாக யார்..? பிசிசிஐ முடிவு என்ன?

480 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி:

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கே.எல். ராகுல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினர். இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 6.1 ஓவர்கள் முடிவில் 9 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியில் ஆட்டமிழக்காமல் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 7 ரன்களும், கே.எல். ராகுல் 2 ரன்களும் எடுத்துள்ளனர். இந்திய அணி தற்போது முதல் இன்னிங்ஸில் 480 ரன்கள் பின்தங்கியுள்ளது.