Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

IND vs SA 2nd Test: இந்தியாவை மண்டியிட வைப்போம்.. SA கோச் சர்ச்சை கருத்து.. இந்திய ரசிகர்கள் கோபம்!

South Africa coach Shukri Conrad: டெஸ்ட் போட்டி வரலாற்றில் இதுவரை எந்த அணியும் இவ்வளவு பெரிய இலக்கை எட்டியதில்லை. இந்த டெஸ்டை டிரா செய்வதன்மூலம் இந்திய அணி தனது மானத்தை காப்பாற்றி கொள்ள விரும்புகிறது. இதற்கிடையில், தென்னாப்பிரிக்காவின் தலைமை பயிற்சியாளர் சுக்ரி கான்ராட், இந்திய அணியை வெறுப்பேற்றும் விதமாக சில வார்த்தைகளை உதிர்த்தார்.

IND vs SA 2nd Test: இந்தியாவை மண்டியிட வைப்போம்.. SA கோச் சர்ச்சை கருத்து.. இந்திய ரசிகர்கள் கோபம்!
தென்னாப்பிரிக்காவின் தலைமை பயிற்சியாளர் சுக்ரி கான்ராட்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 26 Nov 2025 10:06 AM IST

குவஹாத்தி நடைபெற்று வரும் 2வது டெஸ்டில் தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவிற்கு எதிராக (IND vs SA 2nd Test) ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த போட்டியில் இந்தியாவுக்கு எதிரான தென்னாப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 389 ரன்களும், 2வது இன்னிங்ஸில் 260 ரன்கள் எடுத்தது. அதேநேரத்தில், இந்திய அணி (Indian Cricket Team) முதல் இன்னிங்ஸில் வெறும் 201 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில், 549 ரன்கள் இலக்கை துரத்த முயற்சித்தாலும் டிரா செய்ய போராடி வருகிறது. இருப்பினும், இந்திய மண்ணில் இந்தியாவை 2-0 என்ற கணக்கில் தோற்கடிக்க தென்னாப்பிரிக்கா அணி ஆர்வம் காட்டி வருகிறது.

டெஸ்ட் போட்டி வரலாற்றில் இதுவரை எந்த அணியும் இவ்வளவு பெரிய இலக்கை எட்டியதில்லை. இந்த டெஸ்டை டிரா செய்வதன்மூலம் இந்திய அணி தனது மானத்தை காப்பாற்றி கொள்ள விரும்புகிறது. இதற்கிடையில், தென்னாப்பிரிக்காவின் தலைமை பயிற்சியாளர் சுக்ரி கான்ராட், இந்திய அணியை வெறுப்பேற்றும் விதமாக சில வார்த்தைகளை உதிர்த்தார். இது கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, கடந்த 1976ம் ஆண்டு கிளைவ் லாய்டின் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடருக்கு முன்பு மறைந்த இங்கிலாந்து கேப்டன் டோனி க்ரெய்க் அளித்த நேர்காணலில் ஒரு வரியை மேற்கோள் காட்டினார்.

ALSO READ: வெற்றியை நோக்கி தென்னாப்பிரிக்கா.. தோல்வி விளிம்பில் இந்தியா.. 4வது நாள் ஹைலைட்ஸ்!

சுக்ரி கான்ராட் :


தென்னாப்பிரிக்காவின் தலைமை பயிற்சியாளர் சுக்ரி கான்ராட் கூறுகையில், “இந்திய அணி முடிந்தவரை அதிக நேரம் மைதானத்தில் செலவிட வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். அவர்கள் மண்டியிட வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம்.” என்றார். அப்போது செய்தியாளர்கள் கான்ராட்டிடம் 500 ரன்களை கடந்தும் டிக்ளேர் செய்யாதது ஏன்? இது போட்டியின் முடிவைப் பாதிக்குமா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கான்ராட், “இந்தியாவை வெறுப்பு ஏற்றவே அவ்வாறு செய்தோன்.மேலும் போட்டியை அவர்களின் கட்டுப்பாட்டிலிருந்து முற்றிலுமாக அகற்ற விரும்பினோம். சிலர் நீங்கள் அதிக நேரம் பேட்டிங் செய்தீர்கள் என்று கூறுவார்கள், ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. புதிய பந்தை சிறப்பாகப் பயன்படுத்த நாங்கள் விரும்பினோம்” என்றார்.

“க்ரோவெல்” என்ற வார்த்தையைப் பயன்படுத்தி கான்ராட் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். “க்ரோவெல்” என்றால் தரையில் படுப்பது அல்லது ஊர்ந்து செல்வது என்று பொருள்.

ALSO READ: 30 ஆண்டுகளில் நடக்காதது நடக்க போகிறதா? மோசமான சாதனையை படைக்குமா இந்தியா?

கடும் நெருக்கடியில் இந்திய அணி:

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியிலும் இந்தியா தோல்வியடைந்தால், சொந்த மண்ணில் தொடர்ச்சியாக இரண்டு டெஸ்ட் தொடர்களில் ஒயிட்வாஷ் செய்யப்படுவது இதுவே முதல் முறை. இதற்கு முன்பு, கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் 2024 மாதம் நியூசிலாந்து இதேபோல் இந்தியாவை ஒயிட் வாஷ் செய்தது. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றது. இந்திய மண்ணில் 3 அல்லது அதற்கு மேற்பட்ட டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஒரு அணி இந்தியாவை முழுமையாக வென்றது இதுவே முதல் முறை.