Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

IND vs SA 2nd Test: வெற்றியை நோக்கி தென்னாப்பிரிக்கா.. தோல்வி விளிம்பில் இந்தியா.. 4வது நாள் ஹைலைட்ஸ்!

India vs South Africa 2nd Test Day 4 Highlights: 549 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இந்திய அணி, நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 35 ரன்கள் மட்டுமே எடுத்தது. கடந்த 2024ம் ஆண்டில் இந்திய அணியை 342 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்தியாவுக்கு எதிரான மிகப்பெரிய டெஸ்ட் வெற்றியை ஆஸ்திரேலிய அணி பதிவு செய்தது.

IND vs SA 2nd Test: வெற்றியை நோக்கி தென்னாப்பிரிக்கா.. தோல்வி விளிம்பில் இந்தியா.. 4வது நாள் ஹைலைட்ஸ்!
இந்திய கிரிக்கெட் அணிImage Source: BCCI/ Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 25 Nov 2025 17:03 PM IST

இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான இரண்டாவது டெஸ்டில் (India vs South Africa 2nd Test) தென்னாப்பிரிக்கா இந்தியாவுக்கு 549 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது. 4வது இன்னிங்ஸில் பேட்டிங்கில் களமிறங்கிய இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 27 ரன்களுக்கு எடுத்துள்ளது. இதன்மூலம், இந்திய அணி (Indian Cricket Team) இன்னும் 522 ரன்கள் பின்தங்கியுள்ளது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல்.ராகுல் விரைவாக ஆட்டமிழந்த நிலையில் சாய் சுதர்சனும் குல்தீப் யாதவும் தற்போது பேட்டிங் க்ரீஸில் உள்ளனர். நான்காவது நாளில், தென்னாப்பிரிக்கா தனது இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 260 ரன்களில் டிக்ளேர் செய்து, முதல் இன்னிங்ஸ் முன்னிலையின் அடிப்படையில் இந்தியாவுக்கு 549 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது. இந்திய அணி மிகப்பெரிய தோல்வியின் விளிம்பில் உள்ளது.

ALSO READ: தோல்வி அபாயத்தில் இந்திய அணி.. WTC பைனலுக்கு நுழையுமா..? நிலவரம் என்ன?

இந்திய மண்ணில் கெத்துகாட்டும் தென்னாப்பிரிக்கா:

தென்னாப்பிரிக்கா நான்காவது நாளான இன்று அதாவது 2025 நவம்பர் 25ம் தேதி 26/0 என்ற நிலையில் தொடங்கியது. ரியான் ரிக்கல்டன் 35 ரன்களிலும், ஐடன் மார்க்ராம் 29 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனை தொடர்ந்து, களத்திற்கு வந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி 94 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதுமட்டுமின்றி, டோனி டி சோர்சி அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரவீந்திர ஜடேஜா அவரை 49 ரன்களுக்கு ஆட்டமிழக்க செய்தார். இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியாவுக்காக ரவீந்திர ஜடேஜா நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தோல்வி விளிம்பில் இந்திய அணி:

549 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இந்திய அணி, நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 35 ரன்கள் மட்டுமே எடுத்தது. கடந்த 2024ம் ஆண்டில் இந்திய அணியை 342 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்தியாவுக்கு எதிரான மிகப்பெரிய டெஸ்ட் வெற்றியை ஆஸ்திரேலிய அணி பதிவு செய்தது. இந்த சாதனை முறியடிக்க தென்னாப்பிரிக்காவுக்கு மிகப்பெரிய வாய்ப்புள்ளது. குவஹாத்தி டெஸ்டில் இந்திய அணி பேட்டிங் அல்லது பந்துவீச்சு என இரண்டிலும் சொதப்பியது.  முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸ் 489 ரன்களில் முடிந்தது. இதன்பிறகு, முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 201 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

ALSO READ: தோல்வியை நோக்கி இந்திய அணி.. இந்திய மண்ணில் தென்னாப்பிரிக்கா கடைசியாக டெஸ்ட் தொடரை எப்போது வென்றது?

இதன் விளைவாக தென்னாப்பிரிக்கா 288 ரன்கள் முன்னிலை பெற்றது. தென்னாப்பிரிக்காவின் இரண்டாவது இன்னிங்ஸில் 260 ரன்களில் டிக்ளேர் செய்தனர். இப்போது, ​​549 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இந்திய அணி 27 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்துள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி டிரா செய்தாலும், தோல்வியை சந்தித்தாலும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணி தொடரை இழக்கும். அதேநேரத்தில், இந்திய அணி மீதமுள்ள ஒருநாளில் 549 ரன்களை துரத்தினால் மட்டுமே தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்ய முடியும்.