அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை – அமைச்சர் கீர்த்தனா விளக்கம்
Keerthana Clarifies Viral Video : மார்டர்ன் உடையில் இருக்கும் ஒரு பெண் காரில் இருந்து இறங்கும் வீடியோ வைரலான நிலையில் அது அமைச்சர் கீர்த்தனா போன்ற தோற்றத்தில் இருப்பதாக கருத்துகள் பரப்பப்பட்டன. இந்த நிலையில் அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை என அமைச்சர் கீர்த்தனா என விளக்கமளித்துள்ளார்.
சென்னை, ஆகஸ்ட் 23 : மார்டர்ன் உடையில் இருக்கும் ஒரு பெண் காரில் இருந்து இறங்கும் வீடியோ வைரலான நிலையில் அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை என அமைச்சர் கீர்த்தனா என விளக்கமளித்துள்ளார். மார்டர்ன் உடையில் இருக்கும் ஒரு பெண் காரில் இருந்து இறங்கும் அமைச்சர் கீர்த்தனா என ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பப்பட்டது. இந்த வீடியோ குறித்து அவர் தனது விளக்கத்தை பதிவு செய்துள்ளார்.
வைரலாகும் வீடியோ குறித்து அமைச்சர் கீர்த்தனா விளக்கம்
இது தொடர்பாக அமைச்சர் கீர்த்தனா தனது சமூக வலைதள பக்கத்தில் எழுதியுள்ள பதிவில், ஒரு பெண் தனது அன்றாட வாழ்க்கையை இயல்பாக இருக்கும் வீடியோ ஒன்று அரசியல் ரீதியான விவாதிக்கப்படுவது என்பது, அதற்குப் பின்னாலுள்ளபிற்போக்குத்தனமான மனநிலையைத் தெளிவாகக் காட்டுகிறது. ஆனால் இதில் எனக்கு ஆச்சரியம் ஏதுமில்லை. பெண்களுக்கு எதிராகக் கடுமையான அவதூறான கருத்துகளைக் கூறுவதையே வழக்கமாகக் கொண்ட ஒரு தலைவரின் ஆதரவாளர்களிடமிருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியும்? என்று குறிப்பிட்டுள்ளார்.




இதையும் படிக்க : மீண்டும் வரும் சென்னையின் ராயல் கெத்து.. டபுள் டெக்கர் பஸ் இந்த ரூட்லதான் ஓடப்போகுதா? MTC வெளியிட்ட மாஸ் அப்டேட்!
அந்த வீடியோவில் இருப்பவர் நான் இல்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஆனால் ஒருவேளை அது நானாகவே இருந்திருந்தாலும், அதனால் என்ன ஆகப்போகிறது? ஒரு பெண்ணின் உடை, தோற்றம் அல்லது மகிழ்ச்சி ஆகியவை ஏன் இன்னும் பொதுவெளியில் விமர்சனத்திற்குரிய அல்லது விசாரணைக்குரிய விஷயங்களாகக் கருதப்படுகின்றன?
அமைச்சர் கீர்த்தனாவின் எக்ஸ் பதிவு
The fact that a video of a woman simply going about her day can spark political hysteria tells you everything about the fragile, regressive mindset behind it. But I’m not surprised! What else can you expect from followers of a leader with a track record of deeply derogatory…
— Virudhai Magal Keerthana (@Keerthana4VNR) August 23, 2026
எங்கள் கொள்கைகள், நிர்வாகம் அல்லது செயல்பாடுகள் குறித்து எங்களை எதிர்கொள்ள முடியாதபோது, எங்கள் மீது எங்கள் குடும்பத்தினரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த வதந்திகளைப் பரப்பத் தொடங்குகிறார்கள். ஆக்கபூர்வமாகப் பங்களிக்க எதுவுமில்லாதவர்களின் மிகப்பழமையான ஆயுதம் ‘பெண் வெறுப்பு என்பதை கையிலெடுக்கிறார்கள்.
இதையும் படிக்க : காங்கிரஸ் இல்லையெனில் தவெக கதை முடிந்திருக்கும்.. மாணிக்கம் தாகூர் ஆவேசம்!
மேலும், வெறும் தோற்ற ஒற்றுமைக்காக இதில் தேவையற்ற முறையில் இழுக்கப்பட்ட அந்தப் பெண்ணிடம் நான் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் மிக அழகாக இருக்கிறீர்கள். உங்கள் விருப்பப்படியே தொடர்ந்து வாழுங்கள் என்று நான் விரும்புகிறேன். உங்கள் தலைமுடியின் ‘ஹைலைட்ஸ் மிகவும் அருமையாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.