கோலாகலமாக கொண்டாடப்படும் குழந்தைகள் தின விழா.. இந்த ஆண்டு கூடுதல் ஸ்பெஷல்!
National Children's Day | ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14 ஆம் தேதி தேசிய குழந்தைகள் தின விழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டும் இன்று (நவம்பர் 14, 2026) குழந்தைகள் தின விழா கொண்டாடப்படுகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்னை, நவம்பர் 14 : ஆண்டுதோறும் நவம்பர் 14 ஆம் தேதி தேசிய குழந்தைகள் தின விழா (National Children’s Day) கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகளில் குழந்தைகள் தின விழா கோலாகலமாக கொண்டாடப்படும். அந்த வகையில், இந்த ஆண்டு குழந்தைகள் தின விழாவை சிறப்பாக கொண்டாட தமிழக அரசு (Tamil Nadu Government) முக்கிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. இதன் மூலம் குழந்தைகளுக்கு இந்த குழந்தைகள் தின விழா மிகவும் சிறப்பானதாக மாறியுள்ளது.
குழந்தைகள் தின விழா கொண்டாடப்படுவதற்கான காரணம் என்ன?
இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் (India’s First President Jawaharlal Nehru) பிறந்த நாளான நவம்பர் 14 ஆம் தேதி தான் இந்தியாவில் தேசிய குழந்தைகள் தின விழாவாக கொண்டாடப்படுகிறது. நேரு குழந்தைகள் மீது மிகுந்த அன்புடன் இருந்தார். இதன் காரணமாக அவரை குழந்தைகள் மிகுந்த பாசத்துடன் நேரு மாமா என அழைத்தனர். குழந்தைகள் மீது அவர் கொண்டு இருந்த அளவு கடந்த அன்பின் காரணமாக அவரது பிறந்த நாளையே குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க : தவெக பெண்களுக்கு ஆபாச மெசெஜ்.. அட்ஜெஸ்ட் செஞ்சா பதவி.. மா.செ.வின் அந்தரங்க தொல்லை.. கொந்தளித்த மகளிரணி!
குழந்தைகள் தின விழா எப்போது முதல் கொண்டாடப்படுகிறது?
இந்தியாவில் 1964 ஆம் ஆண்டு வரை இந்திய ஐக்கிய நாடுகள் சபை (United Nation) அறிவித்த நவம்பர் 20 ஆம் தேதியே, தேசிய குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வந்தது. இந்த நிலையில், 1964 ஆம் ஆம் ஆண்டு நேருவின் மறைவுக்கு பிறகு அவரது பிறந்த நாளான நவம்பர் 15 தேசிய குழந்தைகள் தினமாக அறிவிக்கப்பட்டு, அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் அந்த தேதியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க : பெண்ணின் வயிற்றில் 5 செ.மீ ஊசியை வைத்து தைத்த மருத்துவர் – உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு
இந்த ஆண்டு சிறப்பாக கொண்டாடப்பட்ட குழந்தைகள் தின விழா
ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளிகளின் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். குழந்தைகளுக்கு இனிப்பு வழங்குவது, கலை நிகழ்ச்சிகளை நடத்துவது என ஒவ்வொரு பள்ளிகளும் மிகவும் வித்தியாசமான முறையில் குழந்தைகள் தினத்தை கொண்டாடும். ஆனால், இந்த ஆண்டு அரசு சார்பில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு தமிழ்நாடு அரசு, அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பள்ளி குழந்தைகளுக்கு இனிப்புகள் மற்றும் வாழ்த்து அட்டையை அனுப்பியுள்ளது.