உரக்கடை மேற்கூடை உடைத்து ரூ.30 லட்சம் பணம் திருட்டு.. தூத்துக்குடியில் ஷாக் சம்பவம்!
30 Lakhs Rupees Robbed from Tuticorin Fertilizer Shop | தூத்துக்குடியில் உள்ள உரக்கடை ஒன்றில் இருந்து சுமார் ரூ.30 லட்சம் பணம் திருடப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், உரக்கடையில் பணம் திருடப்பட்ட சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
தூத்துக்குடி, நவம்பர் 14 : தூத்துக்குடியில் (Tuticorin) உரக்கடையில் (Fertilizer Shop) மேற்கூரை உடைத்து, கடைக்குள் இருந்த சுமார் ரூ.30 லட்சம் பணம் திருடப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் (Tamil Nadu) கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் ஆங்காங்கே தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில், தூத்துக்குடியில் நடைபெற்ற இந்த சம்பவம் அந்த பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில், உரக்கடையில் இருந்து ரூ.30 லட்சம் திருடப்பட்ட சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
உரக்கடை மேற்கூடை உடைத்து பணம் திருட்டு
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பகுதியில் உள்ள பசுவந்தனை தீத்தாம்பட்டியை சேர்ந்தவர் ரவிக்குமார். 34 வயதாகும் இவர், கோவில்பட்டி – எட்டயபுரம் சாலையில் உரக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவர் வழக்கம் போல காலை நேரத்தில் கடையை திறப்பதற்காக நேற்று (நவம்பர் 13, 2026) காலை கடைக்குச் சென்றுள்ளார். அப்போது அவர், தனது கடையின் மேற்கூரை உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையும் படிங்க : மதுரை நகைக்கடை கொள்ளை.. ஹைதராபாத்திற்கு நீளும் காவல்துறை விசாரணை.. சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
ரூ.30 லட்சத்தை கொள்ளை அடித்த மர்ம நபர்கள்
திருட்டு சம்பவம் ஏதேனும் நடந்திருக்குமா என்ற சந்தேகத்தில் அவர் கடைக்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது, கடைக்குள் இருந்த பணப் பெட்டி உடைந்து கிடந்ததை கண்டுள்ளார். அப்போது மேலும் அதிர்ச்சிக்கு உள்ளான அவர், பணப் பெட்டியை சோதனை செய்து பார்த்துள்ளார். அதில் இருந்த சுமார் ரூ.30 லட்சம் பணம் காணாமல் போயிருந்ததை கண்டு அவர் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார்.
இதையும் படிங்க : வங்கக்கடலில் உருவாகும் புதிய புயல்.. தமிழகத்தில் நவம்பர் 17, 18ல் கனமழைக்கு வாய்ப்பு?
சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்ட போலீஸ்
கடையில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், அவர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டதில், மானாவாரி விவசாயத்திற்காக பொதுமக்களிடம் இருந்து வசூல் செய்யப்பட்ட தொகையை தான் மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.