Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Santhanam : எனது மகனுக்கு இயக்குநராக வேண்டும் என்று ஆசை..நடிகர் சந்தானம் ஓபன் டாக்!

Santhanam About His Sons Wish : தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி ஹீரோவாக வலம்வருபவர் சந்தானம். இவரின் நடிப்பில் ரிலீசிற்கு காத்திருக்கும் திரைப்படம் டிடி நெக்ஸ்ட் லெவல். இந்த படத்தை நடிகர் ஆர்யா தயாரித்துள்ளார். இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் தொடர்ந்து நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட சந்தானம், தனது மகன் இயக்குநராகப் படங்களை இயக்கவேண்டும் என்று ஆசைப் படுகிறார் என்று கூறியுள்ளார்.

Santhanam : எனது மகனுக்கு இயக்குநராக வேண்டும் என்று ஆசை..நடிகர் சந்தானம் ஓபன் டாக்!
நடிகர் சந்தானம்
barath-murugan
Barath Murugan | Published: 14 May 2025 15:59 PM

இயக்குநர் எஸ். பிரேம் ஆனந்தின் (S. Prem Anand)  இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் டிடி நெக்ஸ்ட் லெவல் (DD Next Level). இந்த படத்தில் நடிகர் சந்தானம் (Santhanam) முன்னணி நாயகனாக நடித்துள்ளார். இவர்களின் கூட்டணியில் உருவாகியுள்ள இந்த படமானது தில்லுக்கு துட்டு ( Dhilluku Dhuddu ) பட தொகுப்பில் 4வது திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தை நடிகர் ஆர்யா (Arya)  தயாரித்துள்ளார். இந்த படமானது முற்றிலும் காமெடி கலந்த, த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்த படமானது வரும் 2025, மே 16ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இதைத் தொடர்ந்து இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது.

சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் நடிகர் சந்தனத்துடன் நடிகர்கள் ஆர்யா மற்றும் சிலம்பரசன் இணைந்து கலந்துகொண்டனர். இதைத் தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வந்தது. இதைத் தொடர்ந்து நடிகர் சந்தானம் படத்தின் ப்ரோமோஷன் தொடர்பாக நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டுள்ளார்.

அந்த நிகழ்ச்சியில் தனது மகனும் சினிமாவில் இயக்குநராகப் படங்களை இயக்கவேண்டும் என்று ஆசை  என்று கூறியுள்ளார். இது தொடர்பாகச் சந்தானம் சொன்ன விஷயத்தை விளக்கமாகப் பார்க்கலாம்.

நடிகர் சந்தானம் சொன்ன விஷயம் :

அந்த நேர்காணலில் கலந்துகொண்ட சந்தானம், “எனது மகன்களும் எனது படங்களுக்கு கருத்துக்களைக் தெரிவிப்பார்கள். படம் இன்னும் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும், அப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று கூறுவார்கள். மேலும் எனது மூத்த மகன் தற்போது 12ஆம் வகுப்பு படித்து முடித்திருக்கிறார். அவருக்கு சினிமாவில் இயக்குநராகப் படங்களை இயக்கவேண்டும் என்று ஆசை, அவர் 12 ஆம் வகுப்பு முடித்த நிலையில், அது தொடர்பாகப் படித்து இயக்குநராக ஆவார் என்று நம்புகிறேன் என்று நடிகர் சந்தானம் கூறியுள்ளார்.

சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் படக்குழு வெளியிட்ட பதிவு :

நடிகர் சந்தானத்தின் இந்த டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தை இயக்குநர் எஸ். பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். இதில் சந்தானம் முன்னணி நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக அறிமுக நடிகை கீதிகா திவாரி நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் நடிகர்கள் செல்வராகவன், கவுதம் வாசுதேவ் மேனன், நிழல்கள் ரவி, கஸ்தூரி சங்கர் மற்றும் பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். மேலும் இந்த படமானது வரும் 2025, மே 16ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்த படத்துடன் யோகி பாபு மற்றும் சூரியின் படங்களும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மலையாளத்தில் மிஸ் பன்னாமல் பார்க்க வேண்டிய ஃபீல் குட் படங்கள்
மலையாளத்தில் மிஸ் பன்னாமல் பார்க்க வேண்டிய ஃபீல் குட் படங்கள்...
தக் லைஃப் டிரெய்லர் - இசை வெளியீட்டு விழா அறிவிப்பு வெளியானது!
தக் லைஃப் டிரெய்லர் - இசை வெளியீட்டு விழா அறிவிப்பு வெளியானது!...
தமிழில் அவர் இயக்கத்தில் நடிக்கணும் - விஜய் தேவரகொண்டா
தமிழில் அவர் இயக்கத்தில் நடிக்கணும் - விஜய் தேவரகொண்டா...
வடக்கு திசையில் தலை வைத்து தூங்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
வடக்கு திசையில் தலை வைத்து தூங்கக்கூடாது.. ஏன் தெரியுமா?...
சாட்ஜிபிடி மூலம் கடனை முன்கூட்டியே அடைப்பது எப்படி?
சாட்ஜிபிடி மூலம் கடனை முன்கூட்டியே அடைப்பது எப்படி?...
இந்திய இராணுவத்தில் முக்கிய பதவி.. நீரஜ் சோப்ராவிற்கு கௌரவம்!
இந்திய இராணுவத்தில் முக்கிய பதவி.. நீரஜ் சோப்ராவிற்கு கௌரவம்!...
ஜாலியோ ஜிம்கானா முதல் நேசிப்பாயா வரை... இந்த வார ஓடிடி லிஸ்ட்!
ஜாலியோ ஜிம்கானா முதல் நேசிப்பாயா வரை... இந்த வார ஓடிடி லிஸ்ட்!...
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்.. என்ன பலன் தெரியுமா?
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்.. என்ன பலன் தெரியுமா?...
திரையுலகில் 50வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இளையராஜா!
திரையுலகில் 50வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இளையராஜா!...
கர்னல் சோபியா குரேஷி குறித்து சர்ச்சை கருத்து! விஜய் ஷா மீது FIR!
கர்னல் சோபியா குரேஷி குறித்து சர்ச்சை கருத்து! விஜய் ஷா மீது FIR!...
குழந்தைகளின் உடல்நலத்தை பாதிக்கும் ஜங்க் ஃபுட் விளம்பரங்கள்...
குழந்தைகளின் உடல்நலத்தை பாதிக்கும் ஜங்க் ஃபுட் விளம்பரங்கள்......