Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Santhanam: சந்தானத்தை ரிஜெக்ட் செய்த வெற்றிமாறன்.. ஏன் தெரியுமா?

Santhanam About Vetrimaaran : இயக்குநர் வெற்றிமாறனின் இயக்கத்தில், நடிகர் தனுஷ் முன்னணி நாயகனாக நடித்திருந்த படம் பொல்லாதவன். இந்த படமானது கடந்த 2007ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இந்த படத்தில் தன்னை வெற்றிமாறன் ரிஜெக்ட் செய்ததாக நடிகர் சந்தானம் ஓபனாக பேசியுள்ளார். அவர் பேசியதை பற்றி முழுமையாகப் பார்க்கலாம்.

Santhanam: சந்தானத்தை ரிஜெக்ட் செய்த வெற்றிமாறன்.. ஏன் தெரியுமா?
நடிகர் சந்தானம்
barath-murugan
Barath Murugan | Published: 16 May 2025 14:50 PM

தமிழ் சினிமாவில் நடிகர் சிலம்பரசனின் மன்மதன் (Manmadhan)  படத்தின் மூலம் காமெடியனாக நுழைந்தவர் சந்தானம் (Santhanam) .  இவர் அந்த படத்தைத் தொடர்ந்து, அடுத்தடுத்த படங்களிலும் முக்கிய காமெடியனாக கலக்கி வந்தார். நகைச்சுவை நடிகராகப் பிரபலமான இவர் தற்போது சினிமாவில் முன்னணி ஹீரோவாகவும் படங்களில் நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் இதுவரை பல படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அதைத் தொடர்ந்து இவரின் நடிப்பில் ன் சமீபத்தில் வெளியான படம் டிடி நெக்ஸ்ட் லெவல் (DD Next Level) . இந்த படத்தை இயக்குநர் எஸ். பிரேம் ஆனந்த் (S. Prem Anand)  இயக்க, நடிகர் ஆர்யா தயாரித்துள்ளார். இவர்களின் கூட்டணியில் வெளியான இந்த படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் சமீப நாட்களாக நடந்து வந்த நிலையில், நடிகர் சந்தானம் நேர்காணல் ஒன்றில் பேட்டி அளித்திருந்தார். அந்த பேட்டியில் அவர் நடிகர் தனுஷின் பொல்லாதவன் படத்தில் இயக்குநர் வெற்றிமாறன் தன்னை ரிஜெக்ட் செய்தார் என்று கூறியுள்ளார். பின் அதற்கான காரணத்தையும், யார் அவரை மீண்டும் அந்த படத்தில் நடிக்க வைத்தார் என்பதைப் பற்றியும் கூறியுள்ளார். அதைப் பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.

நடிகர் சந்தானம் சொன்ன விஷயம் :

அந்த நேர்காணலில் பேசிய சந்தானம், “பொல்லாதவன் படத்தில் முதலில் வெற்றிமாறன் என்னை வேண்டாம் என்றுதான் சொன்னார், சந்தானம் இந்த படத்தில் இருந்தால் நன்றாக இருக்காது என்றுதான் சொன்னார். ஆனால் அந்த படத்தின் தயாரிப்பாளர்தான் இல்லை சந்தானம் இந்த படத்திலிருந்தால் நன்றாக இருக்கும் என்று கூறினார், பின் வெற்றிமாறனிடம் அவர்தான் கட்டாயப்படுத்தி என்னை அந்த படத்தில் நடிக்கவைத்தார்.

உடனே வெற்றிமாறன் என்னிடம் நான் உங்களின் கதாபாத்திரத்திற்கு எதுவும் எழுதவில்லை, கருணாஸின் கதாபாத்திரத்திற்குத்தான் அதிகம் எழுதியிருக்கிறேன் எனக் கூறினார். பின் அவர் இந்த மாதிரி கதையில் காமெடி காட்சியில் இவ்வளவு இடைவெளிதான் இருக்கிறது அதில் நீங்கள் எதாவது பண்ணமுடியுமா என்று கேட்டார். நானும் அவரிடம் அந்த இடைப்பட்ட கதையில், நானே டயலாக் சொல்லி அந்த படத்தில் நடித்திருந்தேன்” என்று நடிகர் சந்தானம் ஓபனாக கூறியிருந்தார்.

நடிகர் சந்தானம் பேசிய வீடியோ :

நடிகர் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் கடந்த 2007ம் ஆண்டு வெளியாகி பிரம்மாண்ட வெற்றியைப் பெற்ற படம் பொல்லாதவன். இந்த படத்தின் கதைக்களமானது ஒரு பைக்கை காதலிக்கும் மிடில் கிளாஸ் இளைஞனின் வாழ்க்கை பற்றி இருந்தது. இந்த படத்தில் நடிகர் தனுஷ் மிகவும் அருமையாக நடித்திருந்தார்.

மேலும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ரம்யா நடித்து அசத்தியிருந்தார். இந்த படமானது வெளியாகி 18 வருடங்கள் ஆனாலும் தற்போதுவரை மக்கள் மத்தியில் அழியாத திரைப்படமாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முடி வளர்ச்சிக்காக ஓமத்தை எப்படி பயன்படுத்துவது? நன்மைகள் என்ன?
முடி வளர்ச்சிக்காக ஓமத்தை எப்படி பயன்படுத்துவது? நன்மைகள் என்ன?...
10 ஆம் வகுப்பு பொத்துதேர்வில் தேர்ச்சி பெற்ற 70 வயது முதியவர்!
10 ஆம் வகுப்பு பொத்துதேர்வில் தேர்ச்சி பெற்ற 70 வயது முதியவர்!...
IPL 2025 : டெல்லி அணியில் மீண்டும் இணையும் முஸ்தஃபிஸூர்?
IPL 2025 : டெல்லி அணியில் மீண்டும் இணையும் முஸ்தஃபிஸூர்?...
ஃபேட்டி லிவர் பிரச்னை உள்ளவர்கள் இனிப்பு சாப்பிடலாமா?
ஃபேட்டி லிவர் பிரச்னை உள்ளவர்கள் இனிப்பு சாப்பிடலாமா?...
மே 29, 30 தேதிகளில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - அதிமுக அறிவிப்பு
மே 29, 30 தேதிகளில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - அதிமுக அறிவிப்பு...
மே மாத ஊதியத்துடன் அகவிலைப்படி உயர்வும் வழங்கப்படும் - அரசு!
மே மாத ஊதியத்துடன் அகவிலைப்படி உயர்வும் வழங்கப்படும் - அரசு!...
8 மாதத்தில் 42 கிலோ குறைத்தேன்... டீடோட்டலரா மாறிட்டேன் - அஜித்
8 மாதத்தில் 42 கிலோ குறைத்தேன்... டீடோட்டலரா மாறிட்டேன் - அஜித்...
ஐபிஎல் 2025 சீசனில் ஸ்டார்க்கிற்கு ரூ.3.5 கோடி அபராதம்!
ஐபிஎல் 2025 சீசனில் ஸ்டார்க்கிற்கு ரூ.3.5 கோடி அபராதம்!...
மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மனித கழிவு? - விசாரணை தீவிரம்!
மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மனித கழிவு? - விசாரணை தீவிரம்!...
EPFO : தவறாக இணைக்கப்பட்ட உறுப்பினர் ஐடியை நீக்குவது எப்படி?
EPFO : தவறாக இணைக்கப்பட்ட உறுப்பினர் ஐடியை நீக்குவது எப்படி?...
ஒரே மையத்தில் தேர்வு எழுதியவர்கள் 100/100 - அமைச்சர் விளக்கம்!
ஒரே மையத்தில் தேர்வு எழுதியவர்கள் 100/100 - அமைச்சர் விளக்கம்!...