டிச.7ல் ஸ்மிருதி – பலாஷ் திருமணம்?.. குடும்பத்தினர் பகிர்ந்த ஷாக் தகவல்!!
Smriti Mandhana Wedding: நவம்பர் 23 ஆம் தேதி நடைபெறவிருந்த ஸ்மிருதி மந்தனா மற்றும் பலாஷ் முச்சலின் திருமணம், உடல்நலக் காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் அவர்கள் திருமணம் நடைபெறுமா என்பது குறித்து பல்வேறு வதந்திகளும் பரவி வருகின்றன.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மற்றும் பாலிவுட் இசையமைப்பாளர் பலாஷ் முச்சலின் திருமணம் குறித்து சமூக வலைதளங்களில் ஏராளமான தகவல்கள் பரவி வருகின்றனர். எனினும், அதன் உண்மை தன்மையை உறுதிப்படுத்த முடியவில்லை. முன்னதாக, கடந்த நவம்பர் 23 ஆம் தேதி நடைபெறவிருந்த ஸ்மிருதி மந்தனா மற்றும் பலாஷ் முச்சலின் திருமணம், அவரது தந்தைக்கு ஏற்பட்ட உடல்நலக்கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து, பலாஷூம் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நாடே எதிர்பார்த்த இவர்களது திருமணம், அடுத்தடுத்து ஏற்பட்ட சிக்கல்களால் தடைபட்டது நாடு முழுவதும் பரபரப்பையும், அதிர்ச்சையும் ஏற்படுத்தியது.
ALSO READ: ஸ்மிருதி மந்தானாவின் தந்தைக்கு மாரடைப்பு.. ஒத்தி வைக்கப்பட்ட ஸ்மிருதி – பலாஷ் திருமணம்!
வதந்திகளால் நிறைந்த சமூக வலைதளம்:
இதனிடையே, திருமணம் ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஸ்மிருதி மந்தான தனது சமூக வலைதள பதிவுகளில் திருமணம் தொடர்பான அனைத்துப் பதிவுகளையும் நீக்கியிருந்தார். அவரது இந்த நடவடிக்கை சமூக வலைதளங்களில் பல்வேறு கேள்விகளை எழுப்பியது. ஏனெனில், இந்த சம்பவத்திற்கு முன்பு பலாஷ் வேறு ஒரு பெண்ணுடன் சேட் செய்த ஸ்கிரீன்ஷாட்டுகளும் சமூக வலைதளங்களில் வெளியாகி, திருமணம் குறித்து பல்வேறு வதந்திகளுக்கு வழிவகுத்தது.
அதேசமயம், ஸ்மிருதி மந்தனாவின் தந்தை ஸ்ரீனிவாசன் மந்தனாவும், காதலன் பலாஷும் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனதால், விரைவில் புதிய திருமண தேதி வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், அவ்வாறான எந்த அறிவிப்பும் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியாகிவில்லை. இதனால், ஸ்மிருதி மந்தனா, பலாஷ் திருமணம் எப்போது நடைபெறும் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வந்தனர்.
டிச.7ல் ஸ்மிருதி – பலாஷ் திருமணம்?
இந்நிலையில், வரும் டிசம்பர் 7 ஆம் தேதி அவர்கள் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் பரவி வந்தன. இதையொட்டி, திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் ஏற்கெனவே, தொடங்கிவிட்டதாகவும் பாலாஷ் இதனை உறுதி செய்துவிட்டதாகவும் கூட தகவல்கள் பரவி வருகின்றன. தொடர்ந்து, பல்வேறு வதந்திகள் பரவி வரும் நிலையில், ஏன் இரு குடும்பத்தை சேர்ந்தவர்களும் திருமணம் குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ தகவல்களையும் இதுவரை வெளியிடவில்லை என ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் ஆதங்கம் தெரிவித்து வந்தனர்.
ஸ்மிருதியின் சகோதரர் விளக்கம்:
அந்தவகையில், ஸ்மிருதி மந்தனாவின் சகோதரர் ஸ்ரவன், திருமணம் குறித்து பரவிய அனைத்து தகவல்களுக்கும் மறுப்பு தெரிவித்து, அவை முற்றிலும் வதந்தி மட்டுமே என்றார். மேலும், தற்போது வரை இந்த திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய திருமண தேதி குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
ALSO READ: காதல் திருமணத்தில் கலக்கல் நடனம்.. அசத்திய ஸ்மிருதி மந்தனா- பலாஷ் முச்சல்!
பலாஷின் தாயார் விளக்கம்:
இதனிடையே, பலாஷின் தாயார் அமிதா முச்சல் திருமணம் குறித்து கூறுகையில், சமீபத்திய உடல்நலப் பிரச்சனைகள் மற்றும் மன அழுத்தத்தில் இருந்து இருவரும் (ஸ்மிருதி, பலாஷ்) மீண்டு வந்தவுடன் திருமண கொண்டாட்டங்களை மீண்டும் தொடங்குவார்கள் என்றார். அவர்கள் விரைவில் திருமணத்தை தொடர்வார்கள் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஸ்மிருதியின் தந்தைக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும், திருமணத்தை ஒத்திவைக்கலாம் என பலாஷ் தான் முடிவெடுத்ததாகவும், ஸ்மிருதியை விட பலாஷ், அவரது மாமனாரிடம் (ஸ்மிருதியின் தந்தை) தான் அதிக அன்புடனும், நெருக்கமாகவும் இருப்பார். அதனால், அவரது உடல்நலக்குறைவால் பலாஷ் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளானதாகவும் தெரிவித்திருந்தார்.