Smriti Mandhana’s Wedding: ஸ்மிருதி மந்தானாவின் தந்தைக்கு மாரடைப்பு.. ஒத்தி வைக்கப்பட்ட ஸ்மிருதி – பலாஷ் திருமணம்!
Smriti Mandhana Father Heart Attack: திருமண ஏற்பாடுகளின் போது ஸ்மிருதி மந்தனாவின் தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டது, இதனால் அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதன் காரணமாக, திருமண மண்டபத்திற்கு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவர் சர்வாஹித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிகிறது.
இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் (Smriti Mandhana’s Wedding) ஒத்திவைக்கப்பட்ட சம்பவம் அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தானாவின் திருமணத்தில் அதிர்ச்சிகரமாக சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. ஸ்மிருதி மந்தானா – பலாஷ் முச்சல் (Palash Muchhal) திருமணத்திற்கு முன்பு ஸ்மிருதி மந்தானாவின் தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சைக்காக சாங்கியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக, இந்திய கிரிக்கெட் வீராங்கனை மந்தனாவின் திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்ப உறுப்பினர் உறுதிப்படுத்தியுள்ளார்.
ALSO READ: காதல் திருமணத்தில் கலக்கல் நடனம்.. அசத்திய ஸ்மிருதி மந்தனா- பலாஷ் முச்சல்!




இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா – பாலிவுட் இசையமைப்பாளர் பலாஷ் முச்சல் திருமணம் இன்று அதாவது 2025 நவம்பர் 23ம் தேதி நடைபெறவிருந்தது. திருமணத்திற்கு முந்தைய பிற சடங்குகள் மிகுந்த ஆடம்பரமாகவும், நிகழ்ச்சியாகவும் கொண்டாடப்பட்டன. இவர்களின் நடன வீடியோக்களும் இணையத்தில் பரவி மிகப்பெரிய வைரலாகி வருகிறது. இதற்கிடையில், ஸ்மிருதி மந்தனாவின் தந்தை திடீரென உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் வெளியாகின. தற்போது, ஸ்மிருதி மந்தனா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். தற்போது, மந்தனாவின் தந்தையின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ALSO READ: வங்கதேச தொடரை ரத்து செய்த பிசிசிஐ.. தள்ளிப்போன இந்திய மகளிர் அணியின் அட்டவணை!
திருமணம் எப்போது நடைபெறவிருந்தது..?
Smriti Mandhana’s wedding has been postponed indefinitely following her father’s sudden heart attack. pic.twitter.com/0yXDZvWMt6
— CricTracker (@Cricketracker) November 23, 2025
இந்திய நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மற்றும் இசையமைப்பாளர் பலாஷ் முச்சலின் திருமணம் இன்று அதாவது 2025 நவம்பர் 23ம் தேதி மாலை 4.30 மணிக்கு சாங்கியில் நடைபெறவிருந்தது. இதில், விளையாட்டு வீரர்கள் மற்றும் பிற பிரபலங்கள் திருமண விழாவில் கலந்து கொண்டனர். இந்த நேரத்தில்தான் ஸ்மிருதியின் தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
இன்று அதாவது 2025 நவம்பர் 23ம் தேதி காலை உணவு சாப்பிடும்போது, ஸ்மிருதி மந்தனாவின் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போகத் தொடங்கியது. இதனை தொடர்ந்து, அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட தொடங்கவே மந்தனாவின் குடும்பத்தார் ஆம்புலன்ஸை அழைத்து, அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதன் காரணமாக ஸ்மிருதி மந்தானா – பலாஷ் முச்சல் திருமணம் ஒத்தி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமண மண்டபத்திலிருந்து வரும் விருந்தினர்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். மேலும், திருமண மண்டபத்தில் உள்ள அலங்காரங்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.