Smriti Mandhana Marriage: காதல் திருமணத்தில் கலக்கல் நடனம்.. அசத்திய ஸ்மிருதி மந்தனா- பலாஷ் முச்சல்!
Smriti Mandhana Palash Muchhal Dance: சங்கீத் நைட் நிகழ்ச்சியின் இந்த வைரலான வீடியோவில், ஸ்மிருதியும் பலாஷும் சல்மான் கானின் சூப்பர்ஹிட் படமான "சலாம்-இ-இஷ்க்" படத்தின் பிரபலமான பாடலான "தேனு லே கே மைன் ஜவங்கா" பாடலுக்கு அசத்தலாக நடனமாடுவதைக் காணலாம்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் (Indian Womens Cricket team) நட்சத்திர தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவும் (Smriti Mandhana), பாலிவுட் இசையமைப்பாளர் பலாஷ் முச்சலின் திருமணத்திற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த ஜோடி இன்று அதாவது 2025 நவம்பர் 23ம் தேதி திருமணம் செய்து கொள்ள உள்ளது. இதனால், இவர்களின் ரசிகர்கள் இவர்களது திருமணத்தை காண ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்தநிலையில், கடந்த 2025 நவம்பர் 21ம் தேதி ஸ்மிருதி மந்தனா – பலாஷ் முச்சலின் ஹால்டி விழா நடைபெற்றது. இதன் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவின. இதற்கிடையில், நேற்று அதாவது 2022 நவம்பர் 22ம் தேதி சங்கீத் விழா ஒரு வைரலான வீடியோ ஒன்று அனைவரையும் கவர்ந்துள்ளது. அதில், பிரபல பாலிவுட் பாடல் ஒன்றிற்கு ஸ்மிருதி மற்றும் பலாஷ் ஒன்றாக நடனமாடினர். அது தற்போது வைரலாகி வருகிறது.
ALSO READ: வங்கதேச தொடரை ரத்து செய்த பிசிசிஐ.. தள்ளிப்போன இந்திய மகளிர் அணியின் அட்டவணை!




ஸ்மிருதி மந்தனா-பலாஷ் முச்சலின் காதல் நடனம்:
View this post on Instagram
சங்கீத் நைட் நிகழ்ச்சியின் இந்த வைரலான வீடியோவில், ஸ்மிருதியும் பலாஷும் சல்மான் கானின் சூப்பர்ஹிட் படமான “சலாம்-இ-இஷ்க்” படத்தின் பிரபலமான பாடலான “தேனு லே கே மைன் ஜவங்கா” பாடலுக்கு நடனமாடுவதைக் காணலாம். அப்போது, பலாஷின் கழுத்தில் மாலையை இட்டு ஸ்மிருதி நடனத்தைத் தொடங்க, அதன் பிறகு இருவரும் பாடலின் இசைக்கு ஏற்றவாறு தீவிரமாக நடனமாடினர். ஸ்மிருதி மந்தனா தனது நடனத்தால் அனைவரையும் திகைக்க வைத்தார். இந்த நடனத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
சக வீராங்கனைகளும் நடனம்:
View this post on Instagram
இந்த சிறப்பு நிகழ்வில் ஸ்மிருதி மந்தனாவின் சக இந்திய வீராங்கனைகளும் இணைந்தனர். இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இசை இரவு நிகழ்ச்சியில் குழு நடனம் ஒன்றை ஆடி அசத்தியது. அனைவரும் “தேரா யார் ஹூன் மைன்” பாடலுக்கு நடனமாடினர். சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷ்ரேயங்கா பாட்டீல், ராதா யாதவ், அருந்ததி ரெட்டி மற்றும் யஸ்திகா பாட்டியா ஆகியோர் ஒன்றாக நடனமாடினர். திரைப்படம் மற்றும் கிரிக்கெட் உலகைச் சேர்ந்த பல முக்கிய நபர்கள் கலந்து கொள்ளும் ஸ்மிருதி மந்தனாவின் திருமணத்திற்காக ரசிகர்கள் இப்போது ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
ALSO READ: அடுத்த ஸ்கேன் 2 மாதங்களில்.. கிரிக்கெட் களத்திற்கு ஷ்ரேயாஸ் ஐயர் வர தாமதம்..!
காதலை வெளிப்படுத்திய பலாஷ் முச்சல்:
திருமணத்திற்கு முன்பு, நவி மும்பையில் உள்ள DY பாட்டீல் மைதானத்தில் ஸ்மிருதி மந்தனாவிடம் மண்டியிட்டு பலாஷ் முச்சால் தனது காதலை வெளிப்படுத்தினார். இந்த சிறப்பு தருணத்தின் வீடியோவை பலாஷ் முச்சல் தனது சமூக ஊடக கணக்கில் பகிர்ந்து கொண்டார். பலாஷ் முச்சல் ஸ்டேடியத்தின் நடுவில் மண்டியிட்டு ஸ்மிருதி மந்தனாவிடம் காதலை வெளிப்படுத்தினார். அப்போது, அவர் ஒரு ரோஜா பூங்கொத்து மற்றும் ஒரு மோதிரத்தை வழங்கி, மந்தனாவின் விரலில் மோதிரத்தை அணிவித்தார்.