Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Shreyas Iyer: அடுத்த ஸ்கேன் 2 மாதங்களில்.. கிரிக்கெட் களத்திற்கு ஷ்ரேயாஸ் ஐயர் வர தாமதம்..!

Shreyas Iyer Injury Update: சரியாக இன்னும் 2 மாதங்களுக்கு பிறகு ஷ்ரேயாஸ் ஐயர் மீண்டும் ஒரு USG ஸ்கேன் எடுக்க வேண்டும். இதன் பிறகுதான் இவர் கிரிக்கெட் களத்திற்கு திரும்புவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்கேன் முடிந்ததும் ஷ்ரேயாஸ் பெங்களூருவில் உள்ள சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் ( COE) இல் தனது பயிற்சியை தொடங்கலாம்.

Shreyas Iyer: அடுத்த ஸ்கேன் 2 மாதங்களில்.. கிரிக்கெட் களத்திற்கு ஷ்ரேயாஸ் ஐயர் வர தாமதம்..!
ஷ்ரேயாஸ் ஐயர்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 23 Nov 2025 08:28 AM IST

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது இந்திய கிரிக்கெட் அணியின் (Indian Cricket Team) நட்சத்திர பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஏற்பட்ட காயம் இந்திய அணிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது ஷ்ரேயாஸ் ஐயருக்கு மண்ணீரல் காயம் ஏற்பட்டது . கேட்ச் எடுக்கும் போது இந்த சம்பவம் நடந்தது. அப்போது, மூச்சு விட முடியாமல் ஷ்ரேயாஸ் ஐயர் (Shreyas Iyer) தீவிர சிகிச்சையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து, உள் இரத்தப்போக்கு காரணமாக அவருக்கு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.  இப்போது காயத்திலிருந்து ஷ்ரேயாஸ் ஐயர் மீண்டு வருகிறார். இருப்பினும், அவர் கிரிக்கெட் களத்திற்கு திரும்புவதற்காக ரசிகர்கள் நீண்ட மாதம் காத்திருக்க வேண்டியிருக்கும்.

ALSO READ: ரோஹித், கோலி ரீ-என்ட்ரி.. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய அணி எப்படி?

ஷ்ரேயாஸ் ஐயரின் வருகை குறித்த புது அப்டேட்:


வருகின்ற 2025 நவம்பர் 30ம் தேதி முதல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது . இருப்பினும், இந்த தொடரில் இந்திய அணியின் துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் அணியில் விளையாடுவது சாத்தியமில்லை என்று கருதப்படுகிறது. ஊடக அறிக்கைகளின்படி, ஷ்ரேயாஸ் ஐயர் இன்னும் குறைந்தது மூன்று மாதங்களுக்கு விளையாட முடியாது. தற்போது ஷ்ரேயாஸ் ஐயரின் உடல்நிலை மேம்பட்டு வருகிறது. ஐயர் சமீபத்தில் தனது வீட்டிற்கு அருகில் அல்ட்ராசோனோகிராஃபி ஸ்கேன் செய்து கொண்டு வரும் நிலையில், குணமடைந்து நன்றாக இருக்கிறார். அதேநேரத்தில், ஷ்ரேயாஸ் ஐயர் இப்போதைக்கு எந்த பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்யக்கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

சரியாக இன்னும் 2 மாதங்களுக்கு பிறகு ஷ்ரேயாஸ் ஐயர் மீண்டும் ஒரு USG ஸ்கேன் எடுக்க வேண்டும். இதன் பிறகுதான் இவர் கிரிக்கெட் களத்திற்கு திரும்புவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்கேன் முடிந்ததும் ஷ்ரேயாஸ் பெங்களூருவில் உள்ள சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் ( COE) இல் தனது பயிற்சியை தொடங்கலாம். இதன் பொருள் வருகின்ற 2026ம் ஆண்டு ஜனவரியில் நியூசிலாந்துக்கு எதிரான தொடரையும் ஷ்ரேயாஸ் ஐயர் தவறவிடக்கூடும் . சில தகவல்கள் ஐபிஎல் 2026 க்கு முன்பு வரை ஷ்ரேயாஸ் ஐயர் திரும்ப வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.

ALSO READ: டி20 உலகக் கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் மோதல்.. போட்டி எப்போது தெரியுமா?

ஷ்ரேயாஸ் ஐயருக்கு காயம் ஏற்பட்டது எப்படி..?

சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் அலெக்ஸ் கேரியிடமிருந்து கேட்சை எடுக்கும்போது ஷ்ரேயாஸ் தரையில் டைவ் அடித்து விழுந்தார் . அப்போது, ஷ்ரேயாஸ் ஐயர் தரையில் பலமாக மோதி, அவரால் எழுந்து நிற்க முடியவில்லை. வலியால் அவர் கதறி அழுததைக் கண்ட பிசிசிஐ மருத்துவக் குழு உடனடியாக அவரை ஸ்டேடியத்திலிருந்து வெளியே அழைத்துச் சென்று காயத்தைக் கண்டறிந்தது. சிட்னி மற்றும் இந்தியாவைச் சேர்ந்த நிபுணர்களுடன் இணைந்து பிசிசிஐ மருத்துவக் குழு ஷ்ரேயாஸுக்கு சிகிச்சை அளித்தது . ஷ்ரேயாஸ் ஐயர் சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவுக்கு திரும்பினார். காயம் காரணமாக, அவர் அணியுடன் இந்தியாவுக்கு விமானத்தில் செல்ல முடியவில்லை, சிறிது நாட்கள் சிட்னி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.