Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Smriti Mandhana Wedding: ஸ்மிருதி – பலாஷ் திருமணம் எப்போது..? பலாஷின் தாயார் விளக்கம்!

Smriti Mandhana - Palash Muchhal: திருமணம் ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஸ்மிருதி மந்தான தனது சமூக ஊடக பதிவுகளில் இருந்து திருமணம் தொடர்பான கிட்டத்தட்ட அனைத்துப் பதிவுகளையும் நீக்கிவிட்டார். இந்த நடவடிக்கை சமூக ஊடகங்களில் பரவலான ஊகங்களைத் தூண்டியது. இருப்பினும், பலாஷின் தாயாரின் அறிக்கை இப்போது இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

Smriti Mandhana Wedding: ஸ்மிருதி – பலாஷ் திருமணம் எப்போது..? பலாஷின் தாயார் விளக்கம்!
ஸ்மிருதி - பலாஷ் திருமணம்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 28 Nov 2025 12:52 PM IST

இந்திய மகளிர் கிரிக்கெட் (Indian Womens Cricket Team) தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மற்றும் பாலிவுட் இசையமைப்பாளர் பலாஷ் முச்சலின் திருமணம் எப்போது நடைபெறும் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். இவர்களின் திருமண நாளில், ஸ்மிருதி மந்தனாவின் (Smriti Mandhana) தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதன் காரணமாக திருமணம் காலவரையின்றி ஒத்திவைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த மன அழுத்தம் காரணமாக, பலாஷின் உடல்நிலையும் மோசமடைந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியிருந்தது.

ஸ்மிருதி மந்தனாவின் தந்தை ஸ்ரீனிவாசன் மந்தனாவும், காதலன் பலாஷும் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிட்டதால், விரைவில் புதிய திருமண தேதி வெளியிடப்படும் என்று ரசிகர்கள் நம்புகிறார்கள். இதற்கிடையில், பலாஷின் தாயார் அமிதா முச்சல் திருமணம் குறித்த அப்டேட்டை வழங்கியுள்ளார்.

ALSO READ: ஜனவரி 9 முதல் மகளிர் பிரீமியர் லீக்.. அதிரடியாக வெளியான அட்டவணை..!

திருமணம் எப்போது..?


பலாஷின் தாயார் அமிதா முச்சல் திருமணம் குறித்து கூறுகையில், ”ஸ்மிருதி மந்தனா – பலாஷ் முச்சல் மிகுந்த வேதனையில் உள்ளனர். பலாஷ் தனது மணப்பெண்ணை வீட்டிற்கு அழைத்து வர வேண்டும் என்று கனவு கண்டார். அவர்களுக்காக ஒரு சிறப்பு வரவேற்பு கூட திட்டமிட்டிருந்தேன்… எதுவும் நடக்கவில்லை, விரைவில் எல்லாம் சரியாகிவிடும், திருமணம் மிக விரைவில் நடக்கும்” என்று கூறினார்.

இதன்மூலம் திருமணம் ரத்து செய்யப்படவில்லை, மாறாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாக தெரிகிறது. இரு குடும்பங்களும் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, திருமணத்தை திட்டமிட்டுள்ளனர்.

நீக்கப்பட்ட சமூக ஊடகப் பதிவுகள்:

திருமணம் ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஸ்மிருதி மந்தான தனது சமூக ஊடக பதிவுகளில் இருந்து திருமணம் தொடர்பான கிட்டத்தட்ட அனைத்துப் பதிவுகளையும் நீக்கிவிட்டார். இந்த நடவடிக்கை சமூக ஊடகங்களில் பரவலான ஊகங்களைத் தூண்டியது. இருப்பினும், பலாஷின் தாயாரின் அறிக்கை இப்போது இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

ALSO READ: வங்கதேச தொடரை ரத்து செய்த பிசிசிஐ.. தள்ளிப்போன இந்திய மகளிர் அணியின் அட்டவணை!

பலாஷின் உடல்நிலை சரியாகிவிட்டதா..?

திருமணம் ஒத்திவைக்கப்பட்ட பிறகு, பலாஷின் இரத்த அழுத்தமும் அதிகரித்தது. இதன் காரணமாக, முதலில் சாங்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் மும்பைக்கு மாற்றப்பட்டார். இப்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவர்கள் அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தற்போது, ​​இரு குடும்பத்தினரும் திருமணம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், முறிந்து போகவில்லை என்றும், எல்லாம் இயல்பு நிலைக்குத் திரும்பியவுடன் புதிய தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறி வருகின்றனர்.