Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Women’s Blind T20 World Cup: பார்வையற்றோர் டி20 உலகக் கோப்பை.. முத்தமிட்ட இந்திய மகளிர் அணி.. பிரதமர் மோடி வாழ்த்து!

Indian Womens Blind Team: இந்தியா - நேபாளம் இடையிலான இறுதிப் போட்டியில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியதால் நேபாளம் தனது இன்னிங்ஸில் ஒரே ஒரு பவுண்டரியை மட்டுமே அடித்தது. முன்னதாக, கடந்த 2025 நவம்பர்22ம் தேதி இந்திய அணி அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது.

Women’s Blind T20 World Cup: பார்வையற்றோர் டி20 உலகக் கோப்பை.. முத்தமிட்ட இந்திய மகளிர் அணி.. பிரதமர் மோடி வாழ்த்து!
இந்திய மகளிர் பார்வையற்றோர் கிரிக்கெட் அணிImage Source: Narendra Modi/Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 24 Nov 2025 19:36 PM IST

இந்திய மகளிர் பார்வையற்றோர் கிரிக்கெட் அணி கொழும்பில் இருந்து கோப்பையை உயர்த்தி , முதல் டி20 உலகக் கோப்பையை (Women’s Blind T20 World Cup) வென்று அசத்தியது. இதன் காரணமாக ​​முழு இந்தியாவும் பெருமையால் நிறைந்தது. இந்தியா – நேபாளம் இடையிலான இறுதிப் போட்டியில் நேபாளத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா மகளிர் பார்வையற்றோர் டி20 உலகக் கோப்பையை வென்றது. நேற்று அதாவது 2025 நவம்பர் 23ம் தேதி கொழும்பில் நடைபெற்ற போட்டியில், இந்திய அணி முதலில் பந்து வீசி நேபாளத்தை 114 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது. பதிலுக்கு, இந்திய அணி 12 ஓவர்களில் இலக்கைத் துரத்தி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. இந்த போட்டியில் இந்திய அணிக்காக (Indian Womens blind team) அதிக ரன்கள் எடுத்த வீராங்கனையாக பூலா சரண் 27 பந்துகளில் 4 பவுண்டரிகள் உதவியுடன் 44 ரன்கள் எடுத்தார். மேலும், இந்த உலகக் கோப்பையில் இந்திய மகளிர் அணி ஒரு போட்டியில் கூட தோற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: டி20 உலகக் கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் மோதல்.. போட்டி எப்போது தெரியுமா?

பந்துவீச்சில் இந்திய அணி:

இந்தியா – நேபாளம் இடையிலான இறுதிப் போட்டியில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியதால் நேபாளம் தனது இன்னிங்ஸில் ஒரே ஒரு பவுண்டரியை மட்டுமே அடித்தது. முன்னதாக, கடந்த 2025 நவம்பர்22ம் தேதி இந்திய அணி அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது. அதே நேரத்தில், நேபாளம் பாகிஸ்தானை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்தியாவும் இலங்கையும் இணைந்து இந்தப் போட்டியை நடத்தின. குரூப் ஸ்டேஜ் போட்டிகளில் இந்திய அணி அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற நிலையில், இலங்கை அணி லீக் ஸ்டேஜ் போட்டியில் ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்று வெளியேறியது.

பார்வையற்றோர் கிரிக்கெட்டுக்கு தனித்துவ விதிகளா..?

இந்திய மகளிர் பார்வையற்றோர் கிரிக்கெட் அணி இன்னும் பிசிசிஐயால் அங்கீகரிக்கப்படவில்லை . இதன் பொருள் இந்த வீரர்கள் தங்கள் போட்டிக் கட்டணத்தை பிசிசிஐயிடமிருந்து அல்ல, மாறாக ஒரு தனியார் அறக்கட்டளை மற்றும் ஒரு சில ஸ்பான்சர்களிடமிருந்து பெறுகிறார்கள். பார்வையற்றோர் கிரிக்கெட்டுக்கு தனித்துவமான விதிகள் உள்ளன. மற்ற கிரிக்கெட் போட்டிகளை போல் ஸ்டிச் பந்துகளில் விளையாடாமல், வெள்ளை பிளாஸ்டிக் பந்தைக் கொண்டு விளையாடப்படுகின்றன. இந்தப் பந்து கோள வடிவ பிளாஸ்டிக் பந்துக்குள் உலோக உருளைகளால் நிரப்பப்பட்டுள்ளது. இது பந்து பேட்ஸ்மேனை நோக்கி உருண்டு வரும்போது, ​​இது அதிக சத்தத்தை வெளியிடும். இதை பேட்ஸ்மேன்கள் உன்னிப்பாக கவனித்து பந்தை அடிப்பார்கள். அதேநேரத்தில்,பந்து வீசுவதற்கு முன், பந்து வீச்சாளர் பேட்ஸ்மேனிடம் விளையாடத் தயாரா என்று கேட்பார்கள். தொடர்ந்து, பந்து வீச்சாளர் பந்தை வீசுவதற்கு முன் “விளையாடு” என்று கத்த வேண்டும்.

சரியாக 3 வாரங்களுக்கு முன்புதான் இந்திய அணி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையை வென்றது. ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, இறுதிப் போட்டியில் 2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் தென்னாப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இப்போது, ​​சில நாட்களுக்குப் பிறகு, இந்திய மகளிர் பார்வையற்றோர் டி20 உலகக் கோப்பையை வென்று அசத்தியுள்ளது.

ALSO READ: டி20 உலகக் கோப்பை 2026 அட்டவணை நாளை வெளியீடு.. நேரடி ஒளிபரப்பை எங்கு காணலாம்?

பிரதமர் மோடி வாழ்த்து:


இந்திய பார்வையற்றோர் கிரிக்கெட் அணி டி20 உலகக் கோப்பை வென்றதற்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துகளை எக்ஸ் பக்கத்தில் தெரிவித்தார். அதில்,”முதல் பார்வையற்ற பெண்கள் டி20 உலகக் கோப்பையை வென்று வரலாறு படைத்த இந்திய பார்வையற்ற பெண்கள் கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துக்கள்! இந்தத் தொடரில் அவர்கள் தோற்காமல் இருந்தது மிகவும் பாராட்டத்தக்கது. இது உண்மையில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க விளையாட்டு சாதனை, கடின உழைப்பு, குழுப்பணி மற்றும் உறுதிப்பாட்டின் பிரகாசமான எடுத்துக்காட்டு. ஒவ்வொரு வீரரும் ஒரு சாம்பியன்! அணியின் எதிர்கால முயற்சிகளுக்கு எனது வாழ்த்துக்கள். இந்த சாதனை வருங்கால சந்ததியினருக்கு ஊக்கமளிக்கும்” என்றார்.