WPL 2026: ஜனவரி 9 முதல் மகளிர் பிரீமியர் லீக்.. அதிரடியாக வெளியான அட்டவணை..!
WPL 2026 Schedule: இந்தியாவில் 2025 ஒருநாள் உலகக் கோப்பை வெற்றிக்கு பிறகு, மகளிர் பிரீமியர் லீக் இன்னும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. கடந்த மகளிர் பிரீமியர் லீக்கின் கடைசி 3 சீசன்களாக இந்த போட்டி மிகவும் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அதாவது 2023ம் ஆண்டு மகளிர் பிரீமியர் லீக்கின் முதல் சீசனை மும்பை இந்தியன்ஸ் அணி வென்றது.
2026 மகளிர் பிரீமியர் லீக்கின் (Women’s Premier League 2026) அட்டவணை இன்று அதாவது 2025 நவம்பர் 27ம் தேதி வெளியிட்டப்பட்டுள்ளது. அதன்படி, இந்த போட்டி வருகின்ற 2025 ஜனவரி 9ம் தேதி தொடங்கி, இறுதிப்போட்டி 2026 பிப்ரவரி 5ம் தேதி வரை திட்டமிடப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, 2026 மகளிர் பிரீமியர் லீக்கின் அனைத்து போட்டிகளும் நவி மும்பை மற்றும் வதோதராவில் நடைபெறவுள்ளது. பொதுவாக மகளிர் பிரீமியர் லீக் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில்தான் நடைபெறும். ஆனால், இந்த முறை 2026 டி20 உலகக் கோப்பையை (T20 World Cup 2026) கருத்தில் கொண்டு முன்னதாகவே திட்டமிடப்பட்டுள்ளது.
ALSO READ: 20 ஆண்டுகளுக்கு பிறகு! இந்தியாவில் 2030ல் காமன்வெல்த் போட்டி.. குஷியில் விளையாட்டு வீரர்கள்!




4வது சீசனில் யார் வெற்றியாளர்..?
🚨 NEWS 🚨
The #TATAWPL 2026 will be held from 9th January to 5th February in Navi Mumbai and Vadodara 🙌
The DY Patil Stadium in Navi Mumbai will host the opener.
The BCA Stadium in Vadodara will host the final. 🏟️#TATAWPLAuction pic.twitter.com/11L5ioLQxN— Women’s Premier League (WPL) (@wplt20) November 27, 2025
இந்தியாவில் 2025 ஒருநாள் உலகக் கோப்பை வெற்றிக்கு பிறகு, மகளிர் பிரீமியர் லீக் இன்னும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. கடந்த மகளிர் பிரீமியர் லீக்கின் கடைசி 3 சீசன்களாக இந்த போட்டி மிகவும் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அதாவது 2023ம் ஆண்டு மகளிர் பிரீமியர் லீக்கின் முதல் சீசனை மும்பை இந்தியன்ஸ் அணி வென்றது. 2024ம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், 2025ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் மீண்டும் வென்றது. அதன்படி, இந்த முறை எந்த அணி வெற்றி பெறுகிறது என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.
மகளிர் பிரீமியர் லீக் தலைவர் ஜெயேஷ் ஜார்க் இதுகுறித்து தெரிவிக்கையில், “மகளிர் பிரீமியர் லீக் 2026 சீசன் நவி மும்பையில் நடைபெறும். இதன் இறுதிப்போட்டி வதோதராவின் நடைபெறும்” என்று தெரிவித்தார்.
பண மழையில் WPL ஏலம் 2026:
மகளிர் பிரீமியர் லீக் அட்டவணை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மகளிர் பிரீமியர் லீக்கின் 2026 மெகா ஏலம் தொடங்கியது. இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்த ஆல்ரவுண்டர் தீப்தி சர்மாவை டெல்லி கேபிடல்ஸ் ரூ. 3.2 கோடிக்கு வாங்க முயன்றது. ஆனால், உபி வாரியர்ஸ் அணி ரைட் டு மேட்ச் கார்டைப் பயன்படுத்தி தீப்தி சர்மாவை மீண்டும் வாங்கியது. சுவாரஸ்யமாக, தீப்தி சர்மா கடந்த சீசனில் ரூ. 2.6 கோடி சம்பளத்தில் உபி வாரியர்ஸ் அணிக்காக விளையாடினார். மறுபுறம், குஜராத் ஜெயண்ட்ஸ் அணி சோஃபி டெவைனை ரூ. 2 கோடிக்கு தங்கள் அணியில் சேர்த்தது.
ALSO READ: வெளியானது 2026 டி20 உலகக் கோப்பை அட்டவணை.. முதல் போட்டியில் யார் யார் மோதல்?
மேலும், வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனை ஷைனெல் ஹென்றியை டெல்லி கேபிடல்ஸ் அணி ரூ. 1.3 கோடிக்கும், குஜராத் ஜெயண்ட்ஸ் அணி கிரண் நவ்கிரேவை ரூ.60 லட்சத்திற்கு மீண்டும் தங்கள் அணியில் சேர்த்துள்ளது. தொடர்ந்து, இந்திய பந்துவீச்சாளர் ரேணுகா சிங்கை ரூ. 60 லட்சத்திற்கு குஜராத் ஜெயண்ட்ஸ் அணி வாங்கியுள்ளது.