IND W vs SL W 5th T20: இந்தியா – இலங்கை இடையிலான 5வது டி20.. முழுமையான வெற்றியை பதிவு செய்யுமா ஹர்மன்ப்ரீத் படை?
IND W vs SL W 5th T20 Live Streaming: தொடர்ச்சியாக 4வது தொடர் வெற்றியை பதிவு செய்துள்ள ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி (Indian Womens Cricket Team), இலங்கையை ஒயிட் வாஷ் செய்யும் முனைப்பில் களமிறங்கவுள்ளது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா இதுவரை இலங்கையை முழுமையாக தோற்கடித்தது கிடையாது.
இந்தியா மகளிர் – இலங்கை மகளிர் (IND W vs SL W) அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 5வது மற்றும் இறுதி டி20 போட்டி இன்று அதாவது 2025 டிசம்பர் 30ம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் தொடர்ச்சியாக 4வது தொடர் வெற்றியை பதிவு செய்துள்ள ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி (Indian Womens Cricket Team), இலங்கையை ஒயிட் வாஷ் செய்யும் முனைப்பில் களமிறங்கவுள்ளது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா இதுவரை இலங்கையை முழுமையாக தோற்கடித்தது கிடையாது. எனவே, இந்த மைல்கல்லையும் நோக்கி இந்திய அணி கவனம் செலுத்தும். இந்தநிலையில், போட்டி நடைபெறும் திருவனந்தபுரத்தின் பிட்ச் எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
ALSO READ: குறைந்த இன்னிங்ஸில் 10,000 ரன்கள்.. டி20யில் அதிக சிக்ஸர்கள்.. மிரட்டும் ஸ்மிருதி மந்தனா!
பிட்ச் ரிப்போர்ட்:
இந்தப் போட்டி திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்ஃபீல்ட் சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும். இந்தியா – இலங்கை இடையிலான 5 டி20 தொடரில் இதுவரை திருவனந்தபுரத்தில் இரண்டு போட்டிகளை நடந்துள்ளது.




- முதல் இன்னிங்ஸில் சராசரி ஸ்கோர்: 166 ரன்கள்
- சராசரி இரண்டாவது இன்னிங்ஸ் ஸ்கோர்: 153 ரன்கள்
- டாஸ் வென்று முதலில் பந்துவீசும் அணி: 50%
- சுழற்பந்து வீச்சாளர்கள் வீழ்த்திய விக்கெட்டுகள்: 56%
IND-W vs SL-W அணிகளுக்கு இடையிலான 5வது T20 போட்டி எந்த நேரத்தில் தொடங்கும்?
இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான ஐந்தாவது டி20 சர்வதேச போட்டி இந்திய நேரப்படி மாலை 7:00 மணிக்கு தொடங்கும். டாஸ் அரை மணி நேரம் முன்னதாகவே நடைபெறும்.
IND-W vs SL-W இடையேயான 5வது டி20 போட்டியின் நேரடி ஒளிபரப்பை நீங்கள் எங்கே பார்க்கலாம்?
இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான 5வது டி20 சர்வதேச போட்டியின் நேரடி ஒளிபரப்பை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நீங்கள் காணலாம்.
IND-W vs SL-W இடையேயான 5வது T20I போட்டியின் நேரடி ஒளிபரப்பை நீங்கள் எங்கே இலவசமாகப் பார்க்கலாம்?
இந்திய அணிக்கும் இலங்கைக்கும் இடையிலான ஐந்தாவது சர்வதேச டி20 போட்டியின் நேரடி ஒளிபரப்பை ஜியோஹாட்ஸ்டாரில் இலவசமாக காணலாம்.
இரண்டு அணிகளின் முழுமையான விவரம்:
இந்தியா:
ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), தீப்தி ஷர்மா, சினே ராணா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷெபாலி வர்மா, ஹர்லீன் தியோல், அமன்ஜோத் கவுர், அருந்ததி ரெட்டி, கிராந்தி கவுர், ரேணுகா சிங் தாக்கூர், ரிச்சா கோஷ், ஸ்ரீ சரணி
ALSO READ: நியூசிலாந்து தொடருக்கான இந்திய ஒருநாள் அணி எப்போது அறிவிக்கப்படும்? கிடைத்த முக்கிய அப்டேட்!
இலங்கை:
சாமரி அட்டபட்டு (கேப்டன்), ஹாசினி பெரேரா, விஷ்மி குணரத்னே, ஹர்ஷிதா சமரவிக்ரம, நீலக்ஷிகா டி சில்வா, கவிஷா தில்ஹாரி, இமேஷா துலானி, கௌஷினி நுத்யங்கனா, மல்ஷா ஷெஹானி, இனோகா ரணவீர, ஷஷினி கிம்ஹானி, காவ்யா மதுஷானி, நிமேஷ் காவிகானி, நிமேஷ் காவினகி மதரா.