Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

India – Pakistan: 2026ல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் எத்தனை போட்டிகளில் மோதுகிறது? தேதி வாரியான விவரம் இதோ!

India vs Pakistan Cricket Schedule 2026: 2026 ஆண்கள் டி20 உலகக் கோப்பை வருகின்ற 2026 பிப்ரவரி 7 முதல் 2026 மார்ச் 8 வரை நடைபெறும். இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நமீபியா, நெதர்லாந்து மற்றும் அமெரிக்காவுடன் குரூப் ஏ-யில் இடம் பெற்றுள்ளன. இந்த உலகக் கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி வருகின்ற 2026 பிப்ரவரி 15ம் தேதி கொழும்பு கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மோதுகின்றன.

India – Pakistan: 2026ல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் எத்தனை போட்டிகளில் மோதுகிறது? தேதி வாரியான விவரம் இதோ!
இந்தியா - பாகிஸ்தான்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 01 Jan 2026 19:16 PM IST

2025ம் ஆண்டில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பல கிரிக்கெட் போட்டிகளில் ஒன்றையொன்று எதிர்கொண்டன. சாம்பியன்ஸ் டிராபி முதல் ஆசிய கோப்பை (2025 Asia Cup) மற்றும் மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை 2025 வரை, இரு அணிகளும் ஒவ்வொரு போட்டியிலும் ஒன்றையொன்று எதிர்கொண்டன. அதில், பெரும்பாலும் இந்திய அணியே ஒவ்வொரு முறையும் பாகிஸ்தானை தோற்கடித்தது. பாகிஸ்தானை தோற்கடித்து இந்திய அணி 2025 ஆசிய கோப்பை பட்டத்தையும் வென்றது. இந்தநிலையில், 2026ம் ஆண்டில் இந்தியா-பாகிஸ்தான் (India – Pakistan) போட்டிகள் நடைபெறுமா? அப்படியானால், இரு நாடுகளும் எத்தனை முறை ஒன்றையொன்று எதிர்கொள்ளும் உள்ளிட்ட விவரங்களை தேதி வாரியாக தெரிந்து கொள்வோம்.

இந்தியாவும் பாகிஸ்தானும் இருதரப்பு தொடர்களை தவிர்த்து, ஐசிசி, ஏசிசி உள்ளிட்ட முக்கிய கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே நேருக்கு நேர் மோதி விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அரசியல் உறவுகள் காரணமாக, நீண்ட ஆண்டுகளாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே இருதரப்பு தொடர்கள் எதுவும் நடைபெறவில்லை.

ALSO READ: கில் விளையாடுவாரா? பும்ராவுக்கு ஓய்வா? நியூசிலாந்து ஒருநாள் தொடருக்கான இந்திய அணி எப்போது அறிவிப்பு?

2026ம் ஆண்டில் இந்தியா-பாகிஸ்தான் போட்டிகள் எத்தனை முறை நடைபெறும்?

19 வயதுக்குட்பட்ட ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை:

19 வயதுக்குட்பட்ட ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை வருகின்ற 2026 ஜனவரி 15 முதல் 2026 பிப்ரவரி 6 வரை நடைபெறுகிறது. இந்தியாவும் பாகிஸ்தானும் வெவ்வேறு குழுக்களில் இடம் பெற்றுள்ளன. எனவே, இரு அணிகளும் 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பையின் நாக் அவுட் போட்டிகளில் நேருக்குநேர் மோத வாய்ப்புள்ளது.

2026 ஆண்கள் டி20 உலகக் கோப்பை:

2026 ஆண்கள் டி20 உலகக் கோப்பை வருகின்ற 2026 பிப்ரவரி 7 முதல் 2026 மார்ச் 8 வரை நடைபெறும். இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நமீபியா, நெதர்லாந்து மற்றும் அமெரிக்காவுடன் குரூப் ஏ-யில் இடம் பெற்றுள்ளன. இந்த உலகக் கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி வருகின்ற 2026 பிப்ரவரி 15ம் தேதி கொழும்பு கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மோதுகின்றன. இதுமட்டுமின்றி, சூப்பர் 8 சுற்று, அதைத் தொடர்ந்து 2026 டி20 உலகக் கோப்பை நாக் அவுட் போட்டிகளிலும் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோத வாய்ப்புள்ளது.

2026 மகளிர் டி20 உலகக் கோப்பை:

2026 மகளிர் டி20 உலகக் கோப்பை வருகின்ற 2026 ஜூன் 12 முதல் 2026 ஜூலை 5 வரை நடைபெறும். இந்தியா, பாகிஸ்தான் உட்பட 6 அணிகள் குரூப் ஏ-வில் இடம் பெற்றுள்ளன. இந்தியா vs பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி உலகக் கோப்பை போட்டி 2026 ஜூன் 14ம் தேதி நடைபெறும்.

2025 ஆம் ஆண்டில் அதிக போட்டிகளில் வென்றது யார்?

2025ம் ஆண்டில் நியூசிலாந்து அதிக போட்டிகளில் வென்றது. 2025ம் ஆண்டில் நியூசிலாந்து அணி ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப் போட்டியை எட்டியது. அதேநேரத்தில், நியூசிலாந்து ஒரு டெஸ்ட் போட்டியிலும் தோல்வியடையவில்லை. 2025ம் ஆண்டில் நியூசிலாந்து அணி 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 6 போட்டிகளில் வெற்றி பெற்று, 2ல் டிரா செய்தது.

தொடர்ந்து, நியூசிலாந்து அணி 18 ஒருநாள் போட்டிகளில் 14ல் வெற்றி பெற்று, 4 போட்டிகளில் தோல்வியை சந்தித்தது. டி20 சர்வதேச போட்டிகளில் நியூசிலாந்து அணி 21 போட்டிகளில் விளையாடி 13 போட்டிகளில் வெற்றியும், 8 போட்டிகளில் தோல்வியை சந்தித்தது. ஒட்டு மொத்தமாக நியூசிலாந்து அணி 47 போட்டிகளில் விளையாடி 33 போட்டிகளில் வெற்றி பெற்று 2025ல் முதலிடத்தைப் பிடித்தது.

ALSO READ: 3 உலகக் கோப்பைகள்.. ஆசிய விளையாட்டு போட்டிகள்.. இந்திய ஆடவர், மகளிர் அணிகளின் அட்டவணை!

இந்திய அணி எத்தனை போட்டிகளில் வென்றது?

நியூசிலாந்துக்கு அடுத்தபடியாக  2025ல் அதிக போட்டிகளில் வெற்றிபெற்று இந்திய அணி 2வது இடத்தைப் பிடித்தது. ரோஹித் சர்மா, சுப்மன் கில் மற்றும் விராட் கோலி ஆகியோர் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக 2025 சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. சூர்யகுமார் யாதவ் தலைமையில், இந்திய அணி டி20 கிரிக்கெட்டிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தி 2025 ஆசிய கோப்பையை வென்றது. 2025ம் ஆண்டில் இந்திய அணி மொத்தமாக 45 போட்டிகளில் 31 வெற்றிகளை பதிவு செய்துள்ளது.