Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Year Ender 2025: 2025ம் ஆண்டில் கலக்கிய இந்திய கிரிக்கெட் அணிகள்.. படைத்த மாபெரும் சாதனைகள் பட்டியல்!

Indian Cricket Team Records: இந்திய ஆடவர் அணி 2025ம் ஆண்டில் ஐசிசி கோப்பையுடன் வென்று சூப்பராக தொடங்கிவிட்டது. அதாவது, 2025ம் ஆண்டில் மார்ச் மாதம் ரோஹித் சர்மாவின் தலைமையில் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.

Year Ender 2025: 2025ம் ஆண்டில் கலக்கிய இந்திய கிரிக்கெட் அணிகள்.. படைத்த மாபெரும் சாதனைகள் பட்டியல்!
இந்திய கிரிக்கெட் அணிImage Source: BCCI/ Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 24 Dec 2025 08:20 AM IST

2025ம் ஆண்டு (Year Ender 2025) உலக கிரிக்கெட் அரங்கில் ஆடவர் மற்றும் மகளிர் என இந்திய கிரிக்கெட்டுக்கு மிகவும் மறக்கமுடியாத ஆண்டாக அமைந்தது. இந்த 2025ம் ஆண்டு புதிய சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. சில விஷயங்கள் மீண்டும் மீண்டும் படைக்கப்பட்ட சாதனைகள் என்றும், சில சாதனைகள் முதல் முறையாகவும் படைக்கப்பட்டு வரலாற்று குறிப்புகளில் இடம்பெற்றன. இது இந்தியாவின் பெயரை வரலாற்றில் பொறிக்க வைத்தது. அதன்படி, 2025ம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணிகள் (Indian Cricket Team) படைத்த 7 மிகப்பெரிய வெற்றிகளை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.

2025 சாம்பியன்ஸ் டிராபி:

இந்திய ஆடவர் அணி 2025ம் ஆண்டில் ஐசிசி கோப்பையுடன் வென்று சூப்பராக தொடங்கிவிட்டது. அதாவது, 2025ம் ஆண்டில் மார்ச் மாதம் ரோஹித் சர்மாவின் தலைமையில் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதன்மூலம், 2013க்குப் பிறகு இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபியைக் கைப்பற்றுவது இதுவே முதல் முறை.

ALSO READ: 2025ம் ஆண்டில் அடித்த லக்.. சாம்பியன் பட்டத்தை குவித்த இந்திய அணியினர்!

2025 ஆசியக் கோப்பை:

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்குப் பிறகு, இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி 2025ம் ஆண்டு ஆசியக் கோப்பை பட்டத்தை வென்றது. 2025ம் ஆண்டு துபாயில் நடைபெற்ற ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

இங்கிலாந்து சுற்றுப்பயணம்:

சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஆசிய கோப்பையை வெல்வதற்கு இடையில், இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது.  இங்கு இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி, தொடரை 2-2 என்ற கணக்கில் சமநிலையில் முடித்து நாடு திரும்பியது.

ஐசிசி ஒருநாள் தரவரிசை:

ஐசிசி தரவரிசையில் இந்திய ஆண்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய வீரர்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தினர். 2025ம் ஆண்டு முடிவில் இந்திய அணியின் ஜாம்பவான் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் எழுச்சி கண்டனர். இதன்காடணமாக, ஐ.சி.சி ஒருநாள் தரவரிசையில் ரோஹித் சர்மா முதலிடத்திலும், விராட் கோலி 2வது இடத்திலும் உள்ளனர்.

2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை:

2025ம் ஆண்டில் இந்திய மகளிர் அணியும் அற்புதமாகச் செயல்பட்டது. முதல் முறையாக மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையை வென்று வரலாறு படைத்தது. ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா மகளிர் அணியை வீழ்த்தி உலகக் கோப்பையை வென்றது.

பார்வையற்றோர் டி20 உலகக் கோப்பை:

2025ம் ஆண்டு பார்வையற்றோர் டி20 உலகக் கோப்பையிலும் இந்திய மகளிர் அணி சிறப்பாக செயல்பட்டது. இந்தப் போட்டியிலும் இந்தியா சாம்பியனானது.

ALSO READ: 2025ம் ஆண்டில் இந்திய அணிக்காக அதிக ரன்கள்.. டாப் ஸ்கோரராக சுப்மன் கில்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர்:

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை வென்றதன் மூலம் இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி தொடர் வெற்றியை பதிவு செய்தது. இது இந்திய அணி தொடர்ச்சியாக விளையாடும் 14வது டி20 தொடராகும். இந்த 14 டி20 தொடர்களில், இந்தியா சொந்த மண்ணில் 9 தொடர்களை வென்றிருந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியாவின் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 8 டி20 தொடர்களை வென்ற சாதனையை முறியடித்தது.