IND vs SL 5th T20: சம்பவம் செய்த இந்திய மகளிர் அணி.. 15 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி..!
India Women vs Sri Lanka Women 5th T20I: இலங்கை அணிக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டி20 போட்டியிலும் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்று தொடரை 5-0 என்ற கணக்கில் முழுமையாக வென்றது. இலங்கை அணிக்கு எதிரான ஒரு டி20 தொடரை இந்திய அணி வெயிட் வாஷ் செய்வது இதுவே முதல் முறையாகும்.
இலங்கை அணிக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டி20 போட்டியிலும் இந்திய மகளிர் அணி (IND W vs SL W 5th T20) வெற்றி பெற்று தொடரை 5-0 என்ற கணக்கில் முழுமையாக வென்றது. இலங்கை அணிக்கு எதிரான ஒரு டி20 தொடரை இந்திய அணி வெயிட் வாஷ் செய்வது இதுவே முதல் முறையாகும். 2025ம் ஆண்டின் கடைசி தொடரான இந்தியா – இலங்கை இடையிலான 5வது டி20 போட்டியில் இலங்கையை இந்தியா 15 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இதன் மூலம், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி (Indian Womens Cricket Team) 5-0 என்ற கணக்கில் வென்றது. திருவனந்தபுரத்தில் நடந்த 5வது டி20 போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்தியா 175 ரன்கள் எடுத்தது. இந்தியாவுக்காக கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் அதிகபட்சமாக 68 ரன்கள் எடுத்து அரைசதம் அடித்தார். இந்த வெற்றியுடன், இந்தியா 2025 ஆம் ஆண்டுக்கு விடைபெற்றது.
ALSO READ: கடைசி போட்டியில் 62 ரன்கள் மட்டுமே தேவை.. கில் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ஸ்மிருதி மந்தனா!




176 ரன்கள் இலக்கு:
5⃣ matches
5⃣ victories 👏#TeamIndia complete an emphatic series sweep with a 15-run win in Trivandrum 🥳Scorecard ▶️ https://t.co/E8eUdWSQXs#INDvSL | @IDFCFIRSTBank pic.twitter.com/tV5VlXq5GB
— BCCI Women (@BCCIWomen) December 30, 2025
176 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இலங்கை அணி மோசமான தொடக்கத்தையே பெற்றது. கேப்டன் சாமரி அட்டப்பட்டு வெறும் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் ஹாசினி பெரேரா மற்றும் இமேஷா துலானி ஆகியோர் 2வது விக்கெட்டுக்கு 79 ரன்கள் கூட்டணி அமைத்து இந்திய பந்து வீச்சாளர்களுக்கு கடினமான சூழ்நிலையை ஏற்படுத்தினர். பெரேரா 65 ரன்களும், துலானி 50 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
ஒரு கட்டத்தில், இலங்கை 2 விக்கெட் இழப்புக்கு 100 ரன்கள் எடுத்திருந்தது. இதன் காரணமாக, இலங்கை மகளிர் அணி எளிதாக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பின்னர் தொடர்ச்சியான விக்கெட்டுகள் விழத் தொடங்கின. 100/2 என்ற நிலையில் இருந்து, இலங்கையின் ஸ்கோர் விரைவாக அடுத்தடுத்து 6 விக்கெட்டுகளுக்கு 140 ரன்களாக சரிந்தது. எளிதாக சொல்ல வேண்டுமென்றால் இலங்கை மகளிர் அணி வெறும் 25 பந்துகளில் நான்கு விக்கெட்டுகளை இழந்தது.
ALSO READ: 2025ம் ஆண்டில் கலக்கிய இந்திய கிரிக்கெட் அணிகள்.. படைத்த மாபெரும் சாதனைகள் பட்டியல்!
முழுமையாக வெற்றி பெற்ற இந்தியா:
ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை 5-0 என்ற கணக்கில் கைப்பற்றி இலங்கையை ஒயிட்வாஷ் செய்துள்ளது இந்தியா.