AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தொடர்ந்து குறையும் தங்கம் விலை.. ஒரு சவரனுக்கு ரூ. 1,120 குறைந்து விற்பனை..

சென்னையில் மார்ச் 14, 2026 அன்று தங்கம் விலை கணிசமாக குறைந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.14,760க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,120 குறைந்து ரூ.1,18,080க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.16,102க்கும், ஒரு சவரன் ரூ.1,28,816க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து குறையும் தங்கம் விலை.. ஒரு சவரனுக்கு ரூ. 1,120 குறைந்து விற்பனை..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 14 Mar 2026 11:04 AM IST

தங்கம் விலை, மார்ச் 14, 2026: தங்கம் விலை கடந்த சில நாட்களாக சரிவை சந்தித்து வரும் நிலையில், மார்ச் 14, 2026 ஆகிய இன்று மீண்டும் தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி, தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.140 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வெள்ளி விலையும் கணிசமாக குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.10 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

மார்ச் மாதம் தொடங்கியதும் சற்று உயர்ந்திருந்த தங்கம் விலை, கடந்த சில நாட்களாக கணிசமாக குறைந்து வருகிறது. இது பொதுமக்கள் மத்தியில் சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க: ஒருவேளை உணவை மிச்சப்படுத்தியாவது வெள்ளி வாங்குங்கள்.. ராபர்ட் கியோசாகி வழங்கும் முக்கிய அறிவுரை!

தங்கம் விலை உயர காரணம் என்ன?

கடந்த மாதம் முதல் ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், உலகளவில் புவிசார் பதற்றம் அதிகரித்துள்ளது. அதேபோல் உலக பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற நிலையும் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிகமாக முதலீடு செய்து வந்தனர். இதனால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்திருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து சரியும் தங்கம் விலை:

அந்த வகையில், சென்னையில் மார்ச் 14, 2026 அன்று தங்கம் விலை கணிசமாக குறைந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.14,760க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,120 குறைந்து ரூ.1,18,080க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.16,102க்கும், ஒரு சவரன் ரூ.1,28,816க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் படிக்க: இந்தியர்கள் மத்தியில் ஆர்வம் குறைந்த தங்க ETF.. ஒரே மாதத்தில் கடுமையாக சரிந்த முதலீடுகள்!

நேற்றைய தினத்தை எடுத்துக் கொண்டால், ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.14,900க்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல், மார்ச் 12ஆம் தேதி ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.15,000க்கு கீழ் குறைந்து விற்பனை செய்யப்பட்டிருந்தது.

தங்கம் விலை மேலும் குறையுமா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையில், வரவிருக்கும் நாட்களில் தங்கம் விலை மேலும் கணிசமாக குறைய வாய்ப்பு இருப்பதாக வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.

வெள்ளி விலை நிலவரம் என்ன?

அதேபோல் மார்ச் 14, 2026 அன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.280க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.2,80,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. மார்ச் 12ஆம் தேதியை எடுத்துக் கொண்டால், ஒரு கிராம் வெள்ளி ரூ.290க்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Follow Us