AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த காளியம்மாள்.. வரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுமா?

காளியம்மாள், நாம் தமிழர் கட்சியில் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராக முக்கிய பொறுப்பில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கட்சியின் பல்வேறு நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள் மற்றும் பெண்கள் தொடர்பான பிரச்சாரங்களில் அவர் தீவிரமாக செயல்பட்டவர். சமூக பிரச்சினைகள், பெண்கள் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் தொடர்பான விவகாரங்களில் அவர் பலமுறை கருத்து தெரிவித்திருந்தார்.

நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த காளியம்மாள்.. வரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுமா?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 13 Mar 2026 11:28 AM IST

சென்னை, மார்ச் 13, 2026: நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி காளியம்மாள், மார்ச் 13, 2026 அன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவில் இணைந்தார். இதன் மூலம் தமிழக அரசியலில் புதிய அரசியல் நகர்வு ஏற்பட்டுள்ளது. சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வில், காளியம்மாள் அவரை நேரில் சந்தித்து முறைப்படி அதிமுகவில் இணைந்தார். இதையடுத்து அவருக்கு வரவிருக்கும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம் என்ற தகவலும் அரசியல் வட்டாரங்களில் வெளியாகியுள்ளது.

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய காளியம்மாள்:

காளியம்மாள், நாம் தமிழர் கட்சியில் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராக முக்கிய பொறுப்பில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கட்சியின் பல்வேறு நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள் மற்றும் பெண்கள் தொடர்பான பிரச்சாரங்களில் அவர் தீவிரமாக செயல்பட்டவர். சமூக பிரச்சினைகள், பெண்கள் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் தொடர்பான விவகாரங்களில் அவர் பலமுறை கருத்து தெரிவித்திருந்தார்.

மேலும் படிக்க: தமிழகத்தில் அதிகரிக்கும் குற்றச்சம்பவங்கள்.. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு…

2025ஆம் ஆண்டு, தனிப்பட்ட காரணங்களையும் அரசியல் கருத்து வேறுபாடுகளையும் முன்வைத்து, நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகுவதாக காளியம்மாள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன் பின்னர் அவர் எந்தக் கட்சியிலும் இணைக்காமல் இருந்து வந்தார்.

எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த காளியம்மாள்:

இந்த நிலையில், கடந்த ஓராண்டாக அவரது அடுத்த அரசியல் முடிவு குறித்து பல்வேறு யூகங்கள் வெளியானது. குறிப்பாக திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தரப்பில் அவருடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாக தகவல்கள் பரவின.

அதே நேரத்தில் நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தில் காளியம்மாள் இணையப்போவதாகவும் சில தகவல்கள் வெளியானது. ஆனால் அந்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அவர் இன்று அதிமுகவில் இணைந்துள்ளார்.

மேலும் படிக்க: இன்று கட்சி பெயரை அறிவிக்கும் சசிகலா? வேட்பாளர் பட்டியல் குறித்து முக்கிய ஆலோசனை..

அதிமுகவில் இணைந்துள்ள காளியம்மாளுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் என்றும், வரவிருக்கும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்றும் அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த இணைவு அதிமுகவின் பெண்கள் அமைப்பை மேலும் வலுப்படுத்தும் என்றும், வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு கட்சி தனது அமைப்பை விரிவுபடுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இது பார்க்கப்படுகிறது.

Follow Us