Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தீபாவளி முடிந்து ஊர் திரும்ப சிறப்பு ரயில்கள் – எப்போ தெரியுமா?

Special Train : தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்கு சென்றுள்ள மக்கள் மீண்டும் சென்னை திரும்ப வசதியாக தென்னக ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. இந்த ரயில் எந்த ரயில் நிலையத்தில் இருந்து எப்போது கிளம்புகிறது போன்ற விவரங்களை இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

தீபாவளி முடிந்து ஊர் திரும்ப சிறப்பு ரயில்கள் – எப்போ தெரியுமா?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 20 Oct 2025 15:45 PM IST

நாடு முழுவதும் அக்டோபர் 20, 2025 அன்று தீபாவளி (Diwali) பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் புத்தாடை அணிந்து, பட்டாசுகள் வெடித்து உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். வீட்டில் இனிப்புகள் செய்து உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கொடுத்து மகிழ்கின்றனர். தீபாவளியை தங்கள் குடும்பத்தினருடன் கொண்டாட சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். குறிப்பாக சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ள நிலையில் சென்னையே வெறிச்சோடி காணப்படுகிறது. சாலைகளில் டிராஃபிக் இல்லாமல் தங்களால் வேகமாக செல்ல முடிவதாக சென்னை மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ள மக்கள் மீண்டும் சென்னை திரும்ப சிறப்பு ரயில்கள் (Train) அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த கட்டுரையில் அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தீபாவளி முடிந்து சென்னை திரும்ப சிறப்பு ரயில்கள்

தீபாவளியை முன்னிட்டு மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். பேருந்துகள், ரயில், சொந்த வாகனங்கள் என மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். குறிப்பாக இதுவரை 500 சிறப்பு பேருந்துகளில் 5 லட்சம் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ளார். தென்னக ரயில்வே சார்பாக மதுரை மார்க்கமாக முன்பதிவில்லாத சிறப்பு ரயில்களும் விடப்பட்டிருந்தன. மக்கள் அதிக அளவில் ரயில் நிலையங்களில் குவிந்ததால், பயணிகளை வரிசையில் நிற்க வைத்து காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.

இதையும் படிக்க : தீபாவளி ஸ்பெஷல்! 10 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் – சென்னை மெட்ரோ அறிவிப்பு

இதனையடுத்து தீபாவளி முடிந்து மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதும் பெரும் சவாலாக இருக்கும். இந்த நிலையில் இதனை சமாளிக்க அக்டோபர் 22 மற்றும் 23 ஆகிய தினங்களில் சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

  • அதன் படி திருநெல்வேலியில் இருந்து அக்டோபர் 22, 2025 அன்று இரவு 11.55 மணிக்கு கிளம்பி அக்டோபர் 23, 2025 காலை 10.55க்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வந்தடையும்.
  • அதே போல சென்னை எழும்பூரில் இருந்து அக்டோபர் 23, 2025 அன்று நண்பகல் 12.55 மணிக்கு கிளம்பும் ரயில், திருநெல்வேலிக்கு இரவு 12 மணிக்கு வந்தடையும்.

இதையும் படிக்க : தீபாவளி கூடுதல் கட்டணம்.. ஆம்னி பேருந்துகளிடம் ரூ.43 லட்சம் அபராதம் வசூல்!

தீபாவளி முடிந்து சென்னை திரும்புபவர்கள் இந்த ரயிலை பயன்படுத்திக்கொள்ளலாம்.  மக்கள் தங்கள் சொந்த வாகனங்களில் ஊருக்கு சென்றதால் தாம்பரம் முதல் பெருங்களத்தூர் வரை கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது. இதனையடுத்து மக்கள் இசிஆர் சாலையைப் பயன்படுத்துமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியிருந்தனர். இதனையடுத்து மக்கள் தீபாவளி முடிந்து சென்னை திரும்பும்போதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.