Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நாடெங்கும் அன்பும் அமைதியும் தழைக்கட்டும் – தீபாவளி வாழ்த்து சொன்ன எடப்பாடி பழனிசாமி..

Edappadi Palaniswami Diwali Wishes: எடப்பாடி பழனிசாமியின் தீபாவளி வாழ்த்தில், இந்த இனிய திருநாளில் நாடெங்கும் அமைதி தழைக்கட்டும். துன்பங்கள் கரைந்து ஒளிமயமான எதிர்காலம் பிறக்கட்டும். வேற்றுமைகள் அகன்று ஒற்றுமை ஓங்கட்டும். அனைவரது வாழ்விலும் வளமும் நலமும் பெருகட்டும் என எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்,” என குறிப்பிட்டுள்ளார்.

நாடெங்கும் அன்பும் அமைதியும் தழைக்கட்டும் – தீபாவளி வாழ்த்து சொன்ன எடப்பாடி பழனிசாமி..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 20 Oct 2025 06:40 AM IST

சென்னை, அக்டோபர் 20, 2025: உலகம் முழுவதிலும் தீபாவளி பண்டிகை அக்டோபர் 20, 2025 தேதியான இன்று விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்துக்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்று தீபாவளியாகும். இந்த தீபாவளி தினத்தில் விஷ்ணு பகவான் நரகாசுரனை வதம் செய்ததை நினைவுகூர்ந்து இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் (X) பக்கத்தில் மக்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

அவரது பதிவில், “இந்த இனிய திருநாளில் நாடெங்கும் அமைதி தழைக்கட்டும். துன்பங்கள் கரைந்து ஒளிமயமான எதிர்காலம் பிறக்கட்டும். வேற்றுமைகள் அகன்று ஒற்றுமை ஓங்கட்டும். அனைவரது வாழ்விலும் வளமும் நலமும் பெருகட்டும் என எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்,” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க: தீபாவளி நாளில் இறைவழிபாடு.. நல்ல நேரம் எப்போது?

தீபாவளி — மரபுகளும் மகிழ்ச்சியும்:

தீபாவளி என்றாலே நம் நினைவிற்கு வரும் சில வழக்கங்கள் — அதிகாலை எழுந்து எண்ணெய் தேய்த்து குளியல், புதிய ஆடைகள் அணிதல், பட்டாசுகளை வெடித்தல், அக்கம் பக்கத்தினருக்கு இனிப்பு, பலகாரங்கள் பகிர்தல் போன்றவை. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பட்டாசுகளை கையில் பிடித்து உற்சாகமாக கொண்டாடுவார்கள். வாஸ்து சாஸ்திரப்படி சிலர் இந்த நாளில் குறிப்பிட்ட பொருட்களையும் வாங்கக் கூடும். இவ்வாறு தீபாவளியைச் சேர்ந்த பல நம்பிக்கைகள் தலைமுறை தலைமுறையாக தொடர்கின்றன.

எடப்பாடி பழனிசாமி தீபாவளி வாழ்த்துக்கள்:


இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வ அறிக்கையிலும் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் குறிப்பிட்டதாவது: “பண்டிகைகளில் சிறப்புமிக்க தீபாவளி திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்! நரகாசுரன் எனும் கொடிய அரக்கனை மகாலட்சுமி துணையுடன் திருமால் அழித்த தினமே தீபாவளி. இந்த நாள் இருளை நீக்கி ஒளியை ஏற்றும் நாளாகவும், தீமைகள் அகன்ற நன்மைகள் பெருகும் நாளாகவும் விளங்குகிறது.

மேலும் படிக்க: தீபாவளி பண்டிகை.. பின்பற்ற வேண்டிய வாஸ்து விதிகள்!

இந்த இனிய நன்னாளில் மக்கள் தங்கள் இல்லங்களை அலங்கரித்து, தீபங்களை ஏற்றி, புத்தாடைகள் அணிந்து, உற்றார் உறவினர்களுடன் பட்டாசுகளை வெடித்து, குதூகலத்துடன் தீபாவளியை கொண்டாடி மகிழ்கின்றனர்,” என கூறி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.