வந்தது குட் நியூஸ்!.. ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம்.. தேதியை அறிவித்தது தமிழக அரசு!!
Thaimaman Thanga Modhiram Scheme: அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தலா 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தைச் செப்டம்பர் 25 அன்று மதுரையில் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கவுள்ளார். அத்துடன், பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்ட விரிவாக்கம் செப்டம்பர் 22-ல் திருவான்மியூரில் தொடங்கப்பட உள்ளது.
செப்டம்பர், 16: தமிழ்நாடு அரசு சார்பில் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு முன்னோடிச் நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, குழந்தைகள் மற்றும் மாணவர்களின் நலன் காக்கும் வகையில் பல்வேறு புதிய திட்டங்களை அரசு தொடர்ந்து தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் மற்றும் ‘காலை உணவுத் திட்ட விரிவாக்கம்’ ஆகிய முக்கிய அறிவிப்புகளுக்கான தொடக்க விழா தேதிகள் மற்றும் இடங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம்:
அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் தாய்மார்கள் மற்றும் அங்கு பிறக்கும் குழந்தைகளைப் போற்றும் வகையில் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ என்னும் சிறப்புத் திட்டத்தை அரசு அறிவித்திருந்தது. இத்திட்டத்தின் கீழ், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தலா 1 கிராம் எடையுள்ள தங்க மோதிரம் வழங்கி கௌரவிக்கப்பட உள்ளது. முன்னதாக, முதலமைச்சரின் லண்டன் பயணம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த இத்திட்டம், தற்போது செப்டம்பர் 25-ஆம் தேதி மதுரையில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் முதல்வர் விஜய் அவர்களால் முறைப்படி தொடங்கி வைக்கப்பட உள்ளது.
காலை உணவுத் திட்ட விரிவாக்கம்:
அதேபோல, அரசுப் பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்து மற்றும் வருகையை அதிகரிக்கும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் ‘காலை உணவுத் திட்டம்’ மேலும் பல பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்யப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இத்திட்டத்தின் விரிவாக்கத் தொடக்க விழா வரும் செப்டம்பர் 22-ஆம் தேதி சென்னை திருவான்மியூரில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் பங்கேற்கும் முதல்வர் விஜய், காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்கத்தைத் தொடங்கி வைத்து மாணவர்களுக்குச் சிற்றுண்டி வழங்கவுள்ளார்.
பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு:
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் வழங்கும் திட்டம் மற்றும் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்ட விரிவாக்கம் என அடுத்தடுத்து இரண்டு முக்கிய நலத்திட்டங்கள் செப்டம்பர் மாதத்தில் தொடங்கப்பட இருப்பது பொதுமக்கள் மற்றும் பயனாளிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும் வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளது. இத்திட்டங்களுக்கான அனைத்துத் துறை ரீதியிலான ஏற்பாடுகளும் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதையும் படிக்க: தமிழகத்தில் இடைத்தேர்தல் நடக்குமா? அடுத்தடுத்து தாக்கலாகும் தேர்தல் தடை மனுக்கள்.. பின்னணி என்ன!
அரசு மருத்துவமனைகள் மீதான நம்பிக்கை:
ஏழை, எளிய மற்றும் நடுத்தரக் குடும்பங்களின் நிதிப் சுமையைக் குறைக்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள இத்திட்டத்திற்காக ஆண்டுதோறும் ரூ. 750 கோடிக்கும் அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளை நாடாமல், அரசு மருத்துவமனைகளில் கர்ப்பிணித் தாய்மார்கள் தங்களைப் பதிவுசெய்து பாதுகாப்பான முறையில் பிரசவம் மேற்கொள்வதை ஊக்குவிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். இதன் மூலம் பொது சுகாதாரத் துறையின் கட்டமைப்பு மேம்படுவதோடு, ஏழை எளிய மக்களிடையே அரசு மருத்துவமனைகள் மீதான நம்பகத்தன்மையும் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.