AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பிளாஸ்டிக் ஸ்டூல்களின் நடுவில் ஏன் துளை வைக்கப்படுகிறது தெரியுமா?

Plastic Stool Hole Design: பிளாஸ்டிக் ஸ்டூல்களை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கும்போது வெற்றிடம் உருவாகி ஒட்டிக்கொள்ளாமல் எளிதாகப் பிரித்தெடுக்க நடுவில் உள்ள துளை உதவுகிறது. உட்காரும்போது ஏற்படும் எடையைச் சீராகப் பகிர்ந்தளித்து ஸ்டூல் உடைவதைத் தடுப்பதுடன், தூக்கிச் செல்ல வசதியான கைப்பிடியாகவும் இது செயல்படுகிறது. மேலும், தண்ணீர் தேங்குவதைத் தடுத்து, தயாரிப்புச் செலவையும் பிளாஸ்டிக் பயன்பாட்டையும் குறைக்க இந்த அறிவியல் வடிவமைப்பு பயன்படுகிறது.

பிளாஸ்டிக் ஸ்டூல்களின் நடுவில் ஏன் துளை வைக்கப்படுகிறது தெரியுமா?
பிளாஸ்டிக் ஸ்டூல்Image Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 17 Sep 2026 15:05 PM IST

பிளாஸ்டிக் ஸ்டூல்களின் நடுவில் இருக்கும் துளை வெறும் வடிவமைப்பிற்காக மட்டும் செய்யப்பட்டது அல்ல. பல ஸ்டூல்களை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைக்கும் போது, அவற்றிற்கு இடையே வெற்றிடம் (Vacuum) உருவாகி ஒட்டிக்கொள்வதைத் தடுக்க இத்துளை உதவுகிறது. ஒருவர் உட்காரும்போது ஏற்படும் உடல் எடையை மையப்பகுதியில் மட்டுமே குவிக்காமல், நாற்காலியின் அனைத்துப் பகுதிகளுக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்க இந்த வட்ட வடிவ அமைப்பு பயன்படுகிறது. சதுர வடிவத் துளை அமைத்தால் மூலைகளில் விரிசல் ஏற்படும் என்பதால், அதிக வலிமைக்காகவே வட்ட வடிவம் தேர்வு செய்யப்படுகிறது. ஸ்டூலை எளிதாகக் கையால் பிடித்துத் தூக்கிச் செல்வதற்கு இத்துளை ஒரு கைப்பிடியாகச் செயல்படுகிறது. குளியலறை மற்றும் வெளிப்புறங்களில் பயன்படுத்தும்போது மேல் பகுதியில் தண்ணீர் தேங்காமல் உடனுக்குடன் வெளியேற இது வழிசெய்கிறது. உற்பத்தி முறையில் பிளாஸ்டிக் அச்சுகளில் திரவம் சீராகப் பரவவும், பொருள் செலவைக் குறைக்கவும் இத் துளை உதவுகிறது. ஒட்டுமொத்தமாக, ஸ்டூலின் ஆயுளை அதிகரிக்கவும் பயன்பாட்டை எளிதாக்கவும் இந்த எளிய வடிவமைப்பு பெரும் பங்காற்றுகிறது.

பிளாஸ்டிக் ஸ்டூல்களின் நடுவில் துளை

நாம் அன்றாடம் வீடுகளிலிலும் உணவகங்களிலும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் ஸ்டூல்களின் நடுவில் ஒரு சிறிய வட்ட வடிவிலான துளை இருப்பதை பார்த்திருப்போம். இது ஏதோ வெறுமனே அழகிற்காகவோ அல்லது வடிவமைப்பிற்காகவோ செய்யப்பட்டது என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், இந்த எளிய அமைப்பிற்கு பின்னால் மிக முக்கியமான அறிவியல் காரணங்களும், நடைமுறைப் பயன்பாடுகளும் ஒளிந்துள்ளன.

காற்றழுத்தம் மற்றும் வெற்றிடத்தைத் தடுத்தல்

இட நெருக்கடியைத் தவிர்க்க பல ஸ்டூல்களை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைப்பது வழக்கம். அப்படி அடுக்கும்போது, அவற்றின் இடையே காற்று புக முடியாத சூழல் உருவாகி வெற்றிடம் (Vacuum) ஏற்படும். இதனால் வளிமண்டல அழுத்தத்தின் காரணமாக ஸ்டூல்கள் ஒன்றோடு ஒன்று பலமாக ஒட்டிக்கொள்ளும். நடுவில் உள்ள துளை, காற்று தாராளமாக வெளியேறவும் உள்ளே வரவும் வழிவகை செய்வதால், அடுக்கி வைக்கப்பட்ட ஸ்டூல்களை எளிதாகத் தனித்தனியாகப் பிரித்தெடுக்க முடிகிறது.

Also Read: வெந்நீரில் கொஞ்சம் தேன் கலந்து குடிச்சு பாருங்க… நடக்குற விந்தைய பாருங்க!

எடையைப் பகிர்ந்தளித்து உடைவதைத் தடுத்தல்

ஒருவர் ஸ்டூலின் மீது உட்காரும்போது அல்லது ஏறும்போது, அவருடைய முழு உடல் எடையும் அதன் மையப்பகுதியிலேயே அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. அந்தப் பகுதி துளை இல்லாமல் முழுமையாக இருந்தால், அதிக அழுத்தத்தினால் ஸ்டூல் சட்டென்று விரிசல் அடைந்து உடைந்துவிடும். நடுவில் உள்ள வட்ட வடிவத் துளையானது, எடையை ஸ்டூலின் நான்கு கால்களுக்கும் சமமாகப் பகிர்ந்தளித்து அதன் ஆயுளை அதிகரிக்க உதவுகிறது.

எளிதாகத் தூக்கிச் செல்வதற்கும் நீர் தேங்காமல் இருப்பதற்கும் வசதி

இந்தத் துளை ஒரு கைப்பிடி செயல்படுவதால், ஸ்டூலை எளிதாகக் கையால் பிடித்துத் தூக்கிச் செல்ல முடிகிறது. மேலும் குளியலறை அல்லது வெளிப்புறங்களில் ஸ்டூலைப் பயன்படுத்தும்போது அதன் மேல் நீர் தேங்காமல், இத்துளை வழியே உடனுக்குடன் வெளியேறிவிடும். இதனால் ஸ்டூல் விரைவில் காய்ந்து, சுத்தமாக இருக்கவும் இது வழிசெய்கிறது.

Follow Us