AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திருப்பரங்குன்றம் கோவில் அறங்காவலர் தலைவர்கள் திடீர் ராஜினாமா

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் மற்றும் அறங்காவலர்கள் இருவர் தங்களது பதவிகளை ஜூலை 21, 2026 இன்று ராஜிநாமா செய்தனர். பழனி முருகன் கோயில் நில முறைகேடு விவகாரம் தமிழகம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், திருப்பரங்குன்றம் அறங்காவலர்கள் திடீரென மொத்தமாக ராஜினாமா செய்திருப்பது பேசுபொருளாகியுள்ளது.

திருப்பரங்குன்றம் கோவில் அறங்காவலர் தலைவர்கள் திடீர் ராஜினாமா
திருப்பரங்குன்றம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 21 Jul 2026 12:19 PM IST

மதுரை, ஜூலை 21 : திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் மற்றும் அறங்காவலர்கள் இருவர் தங்களது பதவிகளை ஜூலை 21, 2026 இன்று ராஜிநாமா செய்தனர்.  முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் அறங்காவலர் குழுத் தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர் ஆகியோர் தங்கள் பதவிகளைத் திடீரென ராஜினாமா செய்து கடிதம் அளித்துள்ளனர்.

திருப்பரங்குன்றம் கோவில் அறங்காவலர் தலைவர்கள் திடீர் ராஜினாமா

இவர்களின் பதவிக்காலம் கடந்த 2026 ஆம் ஆண்டு  ஜனவரி மாதமே முடிவடைந்த நிலையில், பதவிகாலம் மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது. இதன்படி, இவர்களுக்கான பதவிக்காலம் 2028 வரை உள்ளது. இந்த நிலையில் கடந்த 2026, பிப்ரவரி மாதம்  அவர்கள் மீண்டும் அறங்காவலர்களாக பொறுப்பேற்று கொண்டனர்.

இதையும் படிக்க : இரண்டாவதும் பெண்.. பச்சிளம் குழந்தையை கழுத்தை நெறித்து கொலை செய்த பாட்டி!

இதற்கிடையில் பதவியேற்று 5 மாதமே ஆகியுள்ள நிலையில், திடீரென்று அவர்கள் அனைவரும் ராஜினாமா செய்துள்ளது கோயில் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பதவியை ராஜினாமா செய்வதற்கு முன்பாக ஜூலை 20, 2026  கோவிலுக்கு திடீரென வந்த சத்யப்பிரியா பாலாஜி, சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் தனது பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை கோவில் அதிகாரிகளிடம் வழங்கிவிட்டு சென்றார். சிறிது நேரத்தில் அறங்காவலர்கள் குழுவில் இடம் பெற்று இருந்த சண்முகசுந்தரம், ராமையா ஆகியோரும் ராஜினாமா செய்தனர். பொம்மத்தேவன் என்பவர் மட்டும் இன்னும் ராஜினாமா செய்யவில்லை. இந்த நிலையில் அவர்கள் ராஜினாமா செய்ததற்கான காரணம் குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை.

பழனி முருகன் கோயில் நில முறைகேடு விவகாரம் தமிழகம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், திருப்பரங்குன்றம் அறங்காவலர்கள் திடீரென மொத்தமாக ராஜினாமா செய்திருப்பது பேசுபொருளாகியுள்ளது. இந்த நிலையில்  அவர் திடீர் ராஜினாமா செய்ததற்கான எந்த காரணத்தையும் அவர்கள் கூறவில்லை. அழுத்தம் காரணமாக ராஜனமா செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இதையும் படிக்க : தவெக கொடி நிறத்தில் அரசு பேருந்து? வைரலாகும் போட்டோவால் வலுக்கும் சர்ச்சை

முன்னாக திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான பிரச்னையால் பரபரப்பாக பேசப்ப்டது. இந்த நிலையில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத்தை ஏற்ற உத்தரவிட கோரி, ராம ரவிக்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கை கடந்த டிசம்பர் 2025 ல் விசாரணை செய்த மதுரை அமர்வு தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் மலையின் உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என்று உத்தரவிட்டார்.

சட்ட ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி அப்போது பக்தர்கள் தீபம் ஏற்ற அனுமதிக்கவில்லை. இந்த நிலையில் அப்போதைய மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை ஆணையர் மீது நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்கள் பிறப்பிக்கப்பட்டன. இதற்கிடையே, கடந்த ஜனவரி 6, 2026 மதுரை அமர்வு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, தமிழ்நாடு அரசு சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

 

Follow Us